திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

சந்திர சிவத் தலங்கள்!

சிவத் தலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவத் தலங்கள்

சந்திரனின் பெயர்களில் ஒன்றான திங்கள் என்ற பெயரால் அமைந்த ஊர்கள் திங்களூர் எனப்படுகின்றன.

தமிழிலும் வடமொழியிலும் உள்ள இலக்கியங் களில் சந்திரனுக்குப் பல பெயர்கள் உண்டு.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை நிலவு, அம்புலி, திங்கள், மதி, இந்து, சோமன், பிறை போன்றன. இந்தப் பெயர்களின் அடிப்படையில் சந்திரனால் வழிபடப்பட்ட சிவனாருக்கு, அம்புலி மெளலியான், திங்களீசர், திங்கட்சென்னியன், நிலவு சென்னியன், மதிசேர் மெளலியான், இந்துவாழ் சடையான், சோமேசர் போன்ற திருப்பெயர்கள் உண்டு. சந்திரனை மனோகாரகன் என்பர். மனத்தில் தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்க சந்திரன் வழிபட்ட சிவத்தலங்களை தரிசிப்பதும் வழிபடுவதும் சிறப்பு.

திங்களூர்: சந்திரனின் பெயர்களில் ஒன்றான திங்கள் என்ற பெயரால் அமைந்த ஊர்கள் திங்களூர் எனப்படுகின்றன. அவற்றில் இரண்டு குறிப்பிடத்தக்கவை. முதலாவது தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகிலுள்ளது. அப்பூதி அடிகள் தண்ணீர்ப் பந்தல் அமைத்து திருத்தொண்டு புரிந்த ஊர் அது. சந்திரன் கயிலைக்காட்சி கண்ட தலம் இது என்பார்கள். இரண்டாவதான திங்களூர் ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. காமதேனு கொங்குநாட்டில் பூசித்த 32 லிங்கங்களில் ஒன்று இத்தலத்தில் உள்ளது. சோமநாயகியுடன் அருளும் இத்தலத்து சோமநாதீசுவரர் மேற்கு நோக்கி அருள்கிறார்.

இந்தளூர்: இந்து என்பதற்கு எல்லையற்ற சுகம் எனப்பொருள். அமிர்தத்தைத் தன் கைகளில் ஏந்தி, மோகச் சாத்திரங்களை அருளி, சுகத்துக்கு வழி செய்பவன் ஆதலால் சந்திரன் இந்து என்று அழைக்கப்படுகிறான். செங்கல்பட்டு மாவட்டத்தில், மேல்மருவத்தூருக்கு தெற்கில் அச்சிறுபாக்கத்தி லிருந்து கிழக்கே செல்லும் சாலையில், சுமார் 3 கி.மீ தொலைவிலுள்ளது இவ்வூர். சந்திரனுக்கு, தட்சனின் மகள்களான நட்சத்திரப் பெண்களை மணக்க சிவனருள் கைகூடிய இடம் இது. மேலும் சந்திரன் சிவபெருமானின் மணக்கோலம் கண்ட திருத்தலம் இது. இங்கே மணம்புரிநாதர் என்றும் கல்யாணபுரீசுவரர் என்றும் ஈசன் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் வழிபட்டால் கல்யாண வரம் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

சிவத் தலங்கள்
சிவத் தலங்கள்

பிறையூர்: புதுச்சேரிக்கு அருகிலுள்ள வில்லியனூர் புராணங்களில் வில்வவனம் எனச் சிறப்பிக்கப்படுகிறது. இங்குள்ள திருக்காமீஸ்வரரை சந்திரன் வழிபட்டு பேறு பெற்றான். சந்திரன் இங்கு வந்து வழிபட்டபோது தங்கியிருந்த ஊர் அருகிலுள்ளது. அதற்குப் பிறையூர் என்று பெயர். இங்கு சந்திரன், தன் ஆன்மலிங்கத்தை வைத்து வழிபட்டதாகச் சொல்வர்.

- பூசை. அருணவசந்தன், சென்னை-4