கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்திருக்கிறது நடராஜர் ஆலயம். இந்த ஆலயத்தின் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது. அதற்கு கோயிலில் இருக்கும் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஹேம சதேஷ தீட்சிதர் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், உள்துறை, தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளர் போன்றவர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ”உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பொது தீட்சிதர் கோவிலை நிர்வகித்து, மதச் செயல்பாடுகளைச் செய்கிறார். கோவில் நிர்வாகம் மற்றும் மத உரிமைகள் மற்றும் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் அரசியலமைப்பின் 26 வது பிரிவின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

அனைத்து மதங்களின் செயல்பாடுகள் கடமைகள் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் பழங்காலத்திலிருந்தே கோவில் பாரம்பரிய பழக்கவழக்கங்களின் படி சமயப் பிரிவைச் சேர்ந்த பொது தீட்சிதர்களால் செய்யப்பட்டுவருகின்றன. அரசியல் சாசன உரிமைப்படி மத விவகாரங்களில் எந்த ஒரு தனி மனிதனும் தன் விருப்பப்படி தலையிட முடியாது. சிதம்பரம் கோவிலின் மதச் செயல்பாடுகள், கடமைகள் மற்றும் நம்பிக்கை நடைமுறைகள் கோவிலின் பாரம்பரியம் மற்றும் வழக்கத்தின்படி இருக்க வேண்டும். மேலும் சமய விவகாரங்களை 26-வது பிரிவின்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்பது 06.01.2014 தேதியிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நாம் தமிழில் தேவாரத்தை (பஞ்ச புராணம்) ஓதுகிறோம் ஆனால் அது இல்லை என்று சில குழுக்களால் பொய்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபடுவதற்காக 17.05.2022 தேதியிட்ட தமிழக அரசின் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவமதிப்பு நோட்டீஸும், சட்ட நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅந்த அவமதிப்பு நோட்டீஸை இத்துடன் இணைத்திருக்கிறோம். அதையே இந்த மனுவின் ஒரு பகுதியாகக் கருதலாம். சிதம்பரம் கோவிலுக்கு அருகில் நடக்கும் போராட்டங்களைத் தடை செய்யக் கோரி பக்தர்கள் போட்ட பொதுநல வழக்கு நிலுவையில் இருக்கிறது. அது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறோம். அப்படி இருந்தும் சில குழுக்கள் எங்களின் மதக் கடமைகளின் நம்பிக்கைகளில் தலையிட முயல்கின்றன. எங்கள் வாழ்க்கையும், தனிப்பட்ட சுதந்திரமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்களில் காவல்துறையைப் பயன்படுத்துவதால், வாழ்க்கை தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட மத மற்றும் நிர்வாக உரிமைகளுக்கு நாங்கள் பாதுகாப்பை நாடுகிறோம். அது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அமைதியான வழியில் ஆட்சேபனை செய்துவருவதாகவும், ஒரு சிலர் மதக் கடமைகளின் நம்பிக்கைகளில் தலையிட முயல்கின்றனர்.
இதனால் தங்களது வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளே காவல்துறையைப் பயன்படுத்துவதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. எனவே அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட மத மற்றும் நிர்வாக உரிமைகளுக்கு நாங்கள் பாதுகாப்பை நாடுகிறோம். எங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை முன்னின்று நடத்தும் குழுக்களால் எங்கள் வாழ்க்கை, வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. கோவிலுக்கு எதிரான குழுக்களின் தேவையில்லாத போராட்டத்தால், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோயிலுக்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். கோவிலில் நாங்கள் அமைதியான சூழ்நிலையை விரும்புகிறோம். உலக நன்மைக்காகத்தான் எங்கள் பிரார்த்தனைகள். எங்களின் மத நம்பிக்கை, கடமைகள் மற்றும் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் எழுத்துபூர்வ உறுதிமொழியை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.