திருக்கயிலாயத்தில் அருளும் பரமேஸ்வர னையும் பார்வதிதேவியையும் தேவர்களும் ரிஷிகளும் வணங்கி வழிபட்டுச் செல்வது வழக்கம்.

ஆனால், சிவபக்தரான பிருங்கி மகரிஷி மட்டும் `சிவன் வேறு சக்தி வேறு’ என்று கருதி, வண்டு உருவெடுத்து அருகருகே அமர்ந்திருந்த ஈசனுக்கும் அம்மைக்கும் இடையில் நுழைந்து ஈசனை மட்டும் சுற்றி வந்து வணங்கிச் சென்றாராம். இதைக் கண்டு சினம்கொண்ட தேவியார்,

“சுவாமி என்ன இது? நாம் இருவரும் வேறு வேறானவர்களா?” எனக் கேட்க, “தேவி… கயிலாயத்தில் மட்டுமல்ல; பூலோகத்திலும் நீ வேறு, நான் வேறு என்றே நினைத்துத் தனித் தனியாக வழிபடுகிறார்கள். அவர்களுக்கு நாம் இருவரும் வேறு வேறல்லர் என்பதை உணர்த்த வேண்டும். நீ பூலோகம் சென்று எனை நோக்கித் தவம் இயற்று!” எனக் கூறியருளினார் ஈசன். அம்மையும் பொதிகை மலை அடிவாரத்திலுள்ள வாசவனூர் என்ற தலத்தை அடைந்து, அங்கிருந்த ஒரு புளிய மரத்தின் அடியில் லிங்கத்திருமேனியை எழுப்பி அபிஷேக, அர்ச்சனை செய்து தவமியற்றினார். தவத்தில் மனமகிழ்ந்த ஈசன் தேவியைத் தன்னோடு இணைத்துக்கொண்டு உமையொருபாகனாக காட்சியளித்தார்.

ஈசன் இப்படி அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தரும் தலம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ளது. அதே போன்று காட்சியருளும் மற்றொரு தலம், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர். வாசவனூர் என்னும் பெயரே மருவி வாசுதேவநல்லூர் ஆனது. இங்குதான் இடப்பாகவல்லி சமேத சிந்தாமணிநாதர் ஆலயம் அமைந்துள்ளது.

‘சிந்தம்’ என்றால் ‘புளி’ என்று பொருள். புளியமரத்தின் அடியில் இறைவனை, இறைவி பூஜித்ததால், இந்த இறைவனுக்கு சிந்தாமணி நாதர் என்ற திருநாமம் உண்டாயிற்று.

கேரள மன்னன் ரவிவர்ம ராஜா, இக்கோயில் அருகிலுள்ள கருப்பா நதியில் 48 நாள்கள் நீராடி வழிபட்டுக் குழந்தைப்பேறு பெற்றான். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவனே இங்கு திருக்கோயில் எழுப்பி வழிபட்டான் என்கிறது தலபுராணம். இதற்கான சான்றுகள் இக்கோயில் கல்வெட்டுகளில் காணப் படுகின்றன.

இந்த ஆலயம் தமிழக மற்றும் கேரளக் கட்டடக்கலை பாணியின் இணைப்பாகக் காணப்படுகிறது. கோயிலின் முன்மண்டபம், கல்யாண மண்டபம் என அழைக்கப்படுகிறது. வெளிப்பிராகாரத்தின் தென்பகுதியில் தல விருட்சமான புளியமரம் காணப்படுகிறது. இம்மரத்தின் பழம், இனிப்பு - புளிப்பு என இரட்டைச் சுவை உடையதாக விளங்குகிறது. உள்மண்டபத்தில் தென்மேற்கில் விநாயகர் சந்நிதியும், வடமேற்கில் முருகன் சந்நிதியும் அமைந்துள்ளன.

கருவறையின் மேற்கூரை சந்தனமரக் கட்டைகளால் வேயப்பட்டுள்ளது. ஈசன் உமையொருபாகனாய் காட்சியளிக்கிறார். ஈசனின் பாகத்தில் கைகளில் சூலம், கபாலம் திகழ, அம்பிகையின் பாகத்தில் கைகளில் பாசம்-அங்குசம், பூச்செண்டு துலங்குகின்றன.சுவாமியின் காலில் தண்டையும், அம்பாளின் காலில் கொலுசும் உள்ளன. இந்த அம்பாள் பகுதியைத்தான் இடப்பாகவல்லி என அழைக்கிறார்கள். இங்குள்ள பைரவர், நாய் வாகனம் இல்லாமலும், யோக சண்டிகேஸ்வர் கைகூப்பிய நிலையிலும் காட்சியளிக்கிறார்கள்.

ஆனி மாத 10 நாள்கள் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. விழாவின் 3-ம் நாளில், பிருங்கி முனிவருக்கு ஈசன் அர்த்தநாரீஸ்வரராகத் திருக்காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். ஈசன், ஒன்பதாம் நாள் திருவிழாவில் அம்மையப்பனாக எழுந்தருளி திருத்தேரில் வலம் வருவார்.

இங்கு, ஐப்பசி பெளர்ணமிக்குப் பதில் சித்திரை முதல்நாளன்று அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு மல்லிகை மாலை சமர்ப்பித்து வழிபட்டால், இல்லறத்தில் தம்பதி ஒற்றுமை மேலோங்கும் என்பது நம்பிக்கை.

சிவனும் சக்தியும் ஒருசேரக் காட்சியளிப்ப தால், திருமணத் தடை நீங்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்றுபடவும் இத்தலம் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகிறது. திருமணத் தடை நீங்கிட, ஆணோ பெண்ணோ இத்தலத் துக்கு வந்து, வாரத்தில் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமைகளில் அர்த்தநாரீஸ்வரருக்கு நான்கு மல்லிகைப்பூ மாலை சாத்தி வழிபட்டு, அதில் இரண்டு மாலைகளை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜையறையில் பத்திரப் படுத்த வேண்டும். இவ்வாறு 7 அல்லது 11 கிழமைகள் தொடர்ந்து செய்து வர, விரைவில் திருமணம் நடக்கும். திருமணமான பிறகு தம்பதியர் கோயிலுக்குச் சென்று, வீட்டில் பத்திரப் படுத்திய மாலை களைத் தல விருட்சத்தின் அடியில் போட வேண்டும்.

பின்னர், சுவாமிக்கு வெள்ளை வஸ்திரமும், அம்பாளுக்கு சிவப்பு நிறப் பட்டும், தாலிப் பொட்டும் சாத்தி, அத்துடன் ஆறு மல்லிகைப்பூ மாலை சாத்தி, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து வழிபட வேண்டும். தொடர்ந்து அதில் நான்கு மாலைகளைப் பெற்று கணவன் மனைவி இருவரும் அம்மையப்பன் முன்பு ஆளுக்கு இரண்டு மாலைகளாகப் பிரித்து, மூன்று முறை மாலை மாற்றிப் பிராகாரம் சுற்றி வர வேண்டுமாம்.

அதேபோல, மன வேற்றுமையால் பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்றுசேர, நான்கு ரோஜாப்பூ மாலை சாத்தி, பிரிந்தவரின் பெயருக்கு அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபட்டு (ஏழு அல்லது 11 கிழமைகள்) அதில் இரண்டு மாலைகளை வீட்டில் பூஜையறையில் பத்திரப்படுத்திவர வேண்டும். இப்படிச் செய்தால், விரைவில் மனம் திருந்தி தம்பதியர் மீண்டும் இணைவார்கள் என்பது நம்பிக்கை.

தம்பதியர் இணைந்த பிறகு பத்திரப்படுத்திய மாலைகளைத் தலவிருட்சத்தின் அடியில் போட்டுவிட்டு, சுவாமி-அம்பாளுக்கு வஸ்திரம், ஆறு ரோஜாப்பூ மாலைகள் சாத்தி, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, சந்நிதியில் மும்முறை மாலை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எப்படிச் செல்வது?: தென்காசியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சங்கரன்கோவிலிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் உள்ளது இத்தலம். காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 5 முதல் 8.30 மணி வரை கோயில் திறந்திருக்கும். தொடர்புக்கு: கமலேஷ்வர பட்டர்: 97916 95560