Published:Updated:

ஆவணியில் சூரியனார் தரிசனம்!

ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6 முதல் 7 மணி வரை சூரிய ஹோரை நடக்கும்.

பிரீமியம் ஸ்டோரி

வணி மாதம் சூரியனாருக்கு உகந்த மாதம். ஆவணி ஞாயிறுக ளில் மேற்கொள்ளும் சூரிய விரதம் சிறப்பானது. அதனால் இதயம், கண், ரத்தம் தொடர்பான பிணிகள் கட்டுப்படும்; சூரிய தசை மற்றும் சூரிய புக்தியால் ஏற்படும் தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பர்.

ஆவணி மாதத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6 முதல் 7 மணி வரை சூரிய ஹோரை நடக்கும். அப்போது சூரிய நமஸ்காரம், சூரிய பூஜைகளைத் தொடங்குவது நல்லது. ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை விரதம் தொடங்கி 11 வாரம் ஆலயங்களில் உள்ள சூரிய பகவானுக்குச் செந்நிற ஆடை சார்த்தி, செந்தாமரை மலரால் அர்ச்சித்து, கோதுமையால் நைவேத்தியம் செய்து வழிபட்டால், நீடித்த புகழ் வாழ்வு கிட்டும்.

தென் மாவட்டங்களில் பெண்கள் ஆவணி ஞாயிறுகளில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவார்கள். இதனால், சகோதரர்கள் நீண்ட ஆயுளையும் ஆரோக்கிய வாழ்வையும் பெறுவார்கள் என்பது ஐதிகம்.

வரும் ஆவணி மாதத்தில் சூரியதேவனைச் சிறப்பிக்கும் விதம் நாமும் நான்கு சூரியக் கோயில்களை தரிசிப்போமா?

ஆவணியில் சூரியனார் தரிசனம்!

கோனார்க்

ஒடிசா மாநிலத்தில், 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, முதலாம் நரசிம்மத் தேவர் காலத்தில் எழுப்பப்பட்ட சூரியக் கடவுளுக்கான ஆலயம் இது. இங்கு மஹாசப்தமி விழா வெகு பிரசித்தம்.

ஏழு குதிரைகள் பூட்டி, 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருவது போல் இந்தக் கோயில் அமைந்துள்ளது சிறப்பு.

`கோனா’ என்றால் சூரியன், `அர்கா’ என்றால் மூலை.

சூரிய மூலை என்பதுதான் கோனார்க் எனப்படுகிறது.

கோனார்க் கோயில் திருப்பணிகள் 12 ஆண்டுகள் பெருந்தவம்! ஆம்.

இந்த ஆலயத்தில் கொட்டிக்கிடக்கும் சிற்பங்களைச் செய்து முடிக்க 12 ஆண்டுகள் தேவைப் பட்டனவாம். சுமார் 1,200 சிற்பிகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப் பட்டதாகச் சொல்வர்.

மனிதர்களின் மொழியை விஞ்சி நிற்கும் கல்லின் மொழி’ என்று, கோனார்க்கின் சிற்ப வேலைப்பாடுகளைச் சிறப்பித்துள்ளார்,

ரவீந்திரநாத் தாகூர்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆவணியில் சூரியனார் தரிசனம்!

ஞாயிறு

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஞாயிறு திருத்தலம். ஸ்வாமியின் திருப்பெயர் ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர்; அம்பிகை ஸ்ரீசொர்ணாம்பிகை சுந்தரரின் மனைவியான சங்கிலி நாச்சியார் பிறந்த ஊரான இது, திருமண வரமளிக்கும் தலமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும், சித்திரை 1-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள், ஈசன் மற்றும் அம்பாள் சந்நிதியில் விழுகின்றன. இந்த நாளில், இறைவனை தரிசிப்பது பெரும்பலன் தரும் என்கின்றனர் பக்தர்கள்!

ஆவணியில் சூரியனார் தரிசனம்!
ஆவணியில் சூரியனார் தரிசனம்!

கொளப்பாக்கம்

போரூர் - குன்றத்தூர் மார்க்கத்தில், கெருகம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வடகிழக்கே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது கொளப்பாக்கம்.

இவ்வூரில் ஸ்ரீஆனந்தவள்ளி சமேதராக ஸ்ரீஅகத்தீஸ்வரர் அருளோச்சும் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வூர், தொண்டை மண்டல நவகிரக தலங்களில் சூரிய வழிபாட்டுக்கான தலம் ஆகும்.

அகத்திய மாமுனி, சூரியன், வசிஷ்டர் ஆகியோர் வழிபட்ட தலம் இது. இதன் பழைய பெயர் சிவபாதகேசநல்லூர் என்பர். இங்கு சூரிய ஓரையில் ஈசனுக்கும் சூரியனுக்கும் இரு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டால், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு கிட்டும் என்பது நம்பிக்கை.

ஆவணியில் சூரியனார் தரிசனம்!
ஆவணியில் சூரியனார் தரிசனம்!

சூரியனார்கோவில்

கும்பகோணம்-பூம்புகார் சாலையில் ஆடுதுறைக்கு தெற்கில் சுமார் 2 கி.மீ. தூரத்தில் சூரியனார்கோவில் அமைந்துள்ளது)

பிரசித்திபெற்ற கும்பகோணம் நவகிரக தலங்களில் சூரியதேவனுக்கு உரிய தலம் இது. இங்கு சென்று வழிபட்டால், நவகிரக தலங்கள் அனைத்துக்கும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்கின்றன புராணங்கள்.

கோயிலின் கருவறையில் சூரிய பகவான் நின்ற கோலத்தில் இரண்டு கரங்களுடன் தாமரை மலரை ஏந்தியபடி அருள்கிறார்.உஷாதேவி, சாயாதேவி ஆகிய இரு தேவியரும் சூரியனாருக்கு இருபுறமும் காட்சி தருகின்றனர். இங்கு வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு