திருக்கதைகள்
திருத்தலங்கள்
ஜோதிடம்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்!

சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிற்பங்கள்

திருச்சி பார்த்திபன்

கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை நம் கலையின் மேன்மையை உலக்குக்கு உணர்த்தும் சிற்பக் களஞ்சியங்களும்கூட. நீண்டநெடிய நம் சரித்திரத்தின் சாதனையை விளக்கும் சாட்சிகளையும் தன்னகத்தே கொண்டவை. சில சிற்பங்கள் கலையைக் காட்டினால், இன்னும் சில சிற்பங்கள் கதையைக் காட்டும்; கல்வெட்டுகளோ சரித்திரத்தைச் சொல்லும். அவ்வகையில் உன்னதத் தகவல்களை நம்மோடு பரிமாறிக்கொள்ளும் சில சிற்பங்களும் சாட்சிகளும் இங்கே உங்களுக்காக!

விளக்குப் பாவைகள்

சேதி சொல்லும் சிற்பங்கள்!
சேதி சொல்லும் சிற்பங்கள்!

ன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ளது, திருவிதாங்கோடு மகாதேவர்கோயில். இக்கோயிலின் வெளிப் பிராகாரத்தில் திகழும் பாவையர் சிற்பங்கள், சுற்று வட்டாரங்களில் மிகவும் பிரசித்தி பெற்றவை. பாவைச் சிற்பம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அமைந்துள்ளன. மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை முதலான பெண்களின் பருவங்களை விளக்குவதாய்த் திகழ்கின்றன இந்த்ச் சிற்பங்கள்.

தேரும் சிறப்பும்!

ம்பி விட்டலா கோயில் வளாகத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது கல்லால் சமைக்கப்பட்ட இந்தத் தேர். சிறிய கோயில் போன்றே பல நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் இந்தத் தேர் செதுக்கப்பட்டுள்ளது. தேரின் சக்கரங்களும் கல்லால் ஆனவை. அத்துடன், இந்தச் சக்கரங்கள் ஒட்டுமொத்த கல் தேரின் எடையையும் தாங்கியபடி நகரும் விதமாகவும் அமைத்தார்களாம்!

12-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, கோயில்களில் கருவறைக்கு முன் சக்கரங்களால் அமைந்த மண்டபங்கள் தேர் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்டன. அம்மண்டபங்களைக் குதிரை, யானை போன்றவை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்படும் கலைப்பாணி தோன்றியது.

சேதி சொல்லும் சிற்பங்கள்!

ஹம்பி கல்தேருக்கு முன்னோடியாக, நம் தமிழகத்தில் பாண்டியர் கால தேர் மண்டபங்கள் உள்ளன, உதாரணமாய்க் குன்னாண்டார்கோயில், குடந்தை நாகேஸ்வரன் கோயிலைக் கூறலாம். அவை வடிவத்தில் புரவிகள் பூட்டப்பட்ட தேர் பாயும் நிலையிலான மண்டபங்களே. ஆனால், ஹம்பி தேரினை இயங்கும் ஓர் தேரினைப் போலவே வடிவமைத்துள்ளனர்.

முன்புறம் இரு யானைகளைப் பூட்டி இழுத்துச் செல்வதுபோல் வடிவமைத்துள்ளனர். தேரினைச் சுற்றிலும் பூதகணங்களில் நாட்டியங்கள், கூத்துச் சிற்பங்கள், அழகிய கொடுங்கைகள் அற்புதம். சக்கரங்களில் கூட வரிவரியாய் சிற்பங்களை இழைத்துள்ளனர்.

இந்தத் தேர் இடிக்கப்படாமல் முழுத்தோற்றத்தில் இருந்த அன்றைய கோலத்தை மனக்கண்ணில் நிறுத்தி பார்த்தால், உண்மையில் அது ஓர் அதிசயம்தான். இத்தகைய சிறப்புகளால், கர்நாடக அரசு சின்னங்களிலும், புதிய 50 ரூபாய் தாளிலும் இத்தேர் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

தலைதூங்கு நெடுமரம்...

கொற்றவையை நினைத்து வீரன் அமர்ந்திருக்க, அருகேயுள்ள மூங்கிலை வளைத்து, அதில் அவன்முடி கட்டப்பட்டிருக்கும். அவன் சுயமாகவோ அல்லது அருகிலுள்ள வீரன் மூலமோ தன் தலையைத் துண்டிப்பான். மணிமேகலை, கலிங்கத்துப்பரணி ஆகியன இந்நிகழ்ச்சியினை ஆவணப்படுத்தியுள்ளன.

`உலையா உள்ளமொடு உயிர்க்கடனிறுத்தோர் தலைதூங்கு நெடுமரம்’ என்றும், `வீங்குதலை நெடுங்கழையின் விசைதொறும் திசைதொறும் விழித்துநின்று தூங்குதலை’ என்றும் விளக்குகின்றன. இவ்வகை வீரர்களுக்கு நடுகற்கள் வைக்கப்படும். தமிழகத்தில் இவ்வகை நடுகற்கள் மிகவும் அரிதாகவே உள்ளன.

சேதி சொல்லும் சிற்பங்கள்!

படத்தில் காண்பது, ஆரணி வட்டம், விண்ணமங்கம் எனும் ஊரில் உள்ளது. பராந்தக சோழன் காலத்தில் இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. இடக்காத்தரையர் நம்பி சோழதேவன் என்பவர் எதன்பொருட்டோ தன் தலையைத் தானமாய்க் கொடுத்து உயிர்விட்டவர் என்று இச்சிலையில் உள்ள கல்வெட்டு வாயிலாக அறியமுடிகிறது. பிறருக்காய் தன் உயிர்நீத்த இவ்வீரனுக்கு ஆயிரத்து நூறு வருடம் கடந்தும் இன்றும் வழிபாடு நடந்து வருவது நெகிழவைக்கிறது.