இணையில்லா எழில் கோலத்தில் அருளும் இந்தப் பெருமாள் எந்தத் தலத்தில் அருள்பவர் என்று உங்களால் கணிக்க முடிகிறதா?

வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான தலம் இது. நின்றான்- அமர்ந்தான்- கிடந்தான் ஆகிய மூன்று கோலங்களிலும் பெருமாளை இங்கு சேவித்து இன்புறலாம்.

ருக்மிணி பிராட்டி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் சகிதம் குடும்பசமேதராக பெருமாள் அருளோச்சும் அற்புதத் தலம் இது.

திருமங்கையாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார் ஆகியோ ரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை வாய்ந்தது, இந்த உற்சவர் அருளும் திருக்கோயில்!

இன்னும் உங்களால் கணிக்கமுடியவில்லையா... எனில் பக்கத்தைப் புரட்டுங்களேன்!

அல்லிக்கேணி அழகனாம் அருள்மிகு பார்த்தசாரதியின் எழில்கோலம் சிலிர்க்க வைக்கிறதா! ஆம் இந்தத் தலத்தில் மூலவர் வேங்கடகிருஷ்ணனாக அருள, உற்சவர் பார்த்தசாரதியாய் அருள்கிறார். தாயாரின் திருநாமம் - ஸ்ரீவேதவல்லித் தாயார்

அழகிய அல்லி மலர்கள் நிரம்பிய குளத்தைக் கொண்டிருந்ததால் இந்தப் பகுதி, முற்காலத்தில் திரு அல்லிக்கேணி எனப்பட்டதாம். புராணங்கள் இந்தத் தலத்தை பிருந்தாரண்ய க்ஷேத்திரம் (துளசி வனம்) என்கின்றன.

உற்சவ மூர்த்தியான ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் எழுந்தருளி இருக்கிறார். பார்த்தசாரதியின் முகத்தில் யுத்த பாணங்களால் ஏற்பட்ட வடுக்கள் திகழ்கின்றன.

பாரதப் போரில் பீஷ்மர் எய்த அம்புகள், ஸ்ரீபார்த்தசாரதியைக் காயப்படுத்தியதால் அதன் தகிப்பு இன்னும் அடங்கவில்லையாம். எனவே, நைவேத்தியத்தில் நெய்தான் பிரதானம். எண்ணெய் வகையறாக்களை அதிகம் சேர்ப்பதில்லை. சுள்ளென்ற மிளகாய் கிடையாது. வெறும் மிளகுதான்!

மூன்று கோலங்கள் காணக்கிடைக்கும் தலம் என்று பார்த்தோம் அல்லவா? அதன்படி நின்றகோலத்தில் ஸ்ரீவேங்கடகிருஷ்ணன் அருள்கிறார். அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதெள்ளியசிங்கரும் கிடந்த கோலத்தில் மன்னாதர் எனச் சிறப்பிக்கப்படும் ஸ்ரீரங்கநாதரும் அருள்கிறார்கள். மேலும் ஸ்ரீவரதர் மற்றும் ஸ்ரீசக்கரவர்த்தி திருமகன் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.

பேயாழ்வாரின் சிஷ்யரான திருமழிசையாழ்வார், யோக நிலையில் பல ஆண்டுகள் இங்கு தங்கியிருந்தார். ஆசார்யர்களான ஸ்ரீபாஷ்யக்காரர், ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீவேதாந்தாசார்யர் போன்றோரும் சங்கீத மேதைகளான ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீமுத்துசாமி தீட்சிதர் போன்றோரும் இந்தத் தலத்துக்கு விஜயம் செய்துள்ளனர்.