Published:Updated:

ராமநாத சுவாமி கோயில்: ` நன்றிக் கடன் செலுத்த வந்துள்ளேன்'- எஸ்.ஏ.சந்திரசேகர் சிறப்புப் பூஜை

ராமேஸ்வரம் கோயிலில் ருத்ர பூஜை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்

"சிவன் எல்லா இடத்திலும் இருக்கிறார், இருந்தாலும் அந்தந்தக் கோயிலில் உள்ள சிவனை வழிபட்டு, அங்கு சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தால் புதிய எனர்ஜி கிடைக்கிறது" என்றார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திரைப்பட இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார். அக்னி தீர்த்தம் உள்ளிட்ட அனைத்து தீர்த்தங்களிலும் புனித நீராடிய அவர், குடும்ப நலன், மன அமைதி வேண்டி ருத்ர பூஜை செய்து வழிபட்டார்.

கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், "திட்டமிட்டு எந்தக் கோயிலுக்கும் நான் செல்ல மாட்டேன். கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனத் தோன்றினால் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று விடுவேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேதர்நாத் கோயில் சென்றிருந்தேன். அதேபோல் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்துள்ளேன்.

இங்குள்ள தீர்த்தங்களில் புனித நீராடியது எனது உடலுக்கும், மனதுக்கும் அமைதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உழைக்கும் எல்லோரும் உயர்ந்துவிடவில்லை, யாரோ ஒருவரைத்தான் கடவுள் உயர்த்துகிறார்.

ருத்ர பூஜை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்
ருத்ர பூஜை செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்

எங்கோ பிளாட்பாரத்தில் கிடந்த நான் இந்தளவிற்கு உயர்ந்துள்ளேன் என்றால் அது கடவுளின் ஆசிர்வாதம்தான். சிவன்தானே எல்லாம். அவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக இங்கு வந்துள்ளேன். அதுவும் நான் சிம்ம ராசிக்காரன். சிவனுக்கு உண்டான ராசி. சிவன் எல்லா இடத்திலும் இருக்கிறார், இருந்தாலும் அந்தந்தக் கோயிலில் உள்ள சிவனை வழிபட்டு, அங்கு சிறிது நேரம் அமர்ந்து பிரார்த்தனை செய்தால் புதிய எனர்ஜி கிடைக்கிறது. எங்களுடைய பிரார்த்தனையும் விஜய்யின் உழைப்பும் அவரை இந்தளவிற்கு உயர்த்திக் கொண்டு சென்றுள்ளது" என்றார்.