Published:Updated:

திருவண்ணாமலை: கொரோனா அச்சத்தால் பௌர்ணமி கிரிவலத்துக்குத் தடை!

திருவண்ணாமலை கிரிவலம்
திருவண்ணாமலை கிரிவலம்

ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வந்து செல்வார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவபெருமான் அருள்புரியும் பஞ்சபூதத் தலங்களில், அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். எம்பெருமான் ஈசனே மலையாய்க் காட்சி தரும் தலம் என்றும், 'நினைத்தாலே முக்தி தரும் மலை' என்றும் பக்தர்களால் போற்றப்படும் சிறப்புமிக்கது இந்த தலம்.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று, அருணாச்சலேஸ்வரரை மனதில் நிறுத்தி, மனமுருக வேண்டி 14 கி.மீ அளவிலான கிரிவலப்பாதையில் வலம் வருவது பக்தர்களிடையே சிறப்பாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வார்கள்.

ஆனால், கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில்கொண்டு, அண்மையில் சில மாதங்களாக கிரிவலம் செல்வதற்கான தடை நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், கொரோனா பரவலை மையப்படுத்தி, இந்த மாதமும் கிரிவலம் செல்வதற்குத் தடைவிதித்து, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை: 1000 ஆண்டுகள் பழைமையான அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு... சிற்பம் கூறும் சேதி என்ன?
திருவண்ணாமலை
திருவண்ணாமலை

இதற்காக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

"பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது திருவண்ணாமலையில் 14 கி.மீ கொண்ட மலையின் சுற்றுப்பாதையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள்களில் கிரிவலம் வருவதற்குப் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான இன்று (சனிக்கிழமை) மாலை 7.19 மணி முதல், 22.08.2021 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.17 மணி வரை, கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.

திருவண்ணாமலை: அக்னி லிங்க சன்னதியில் பாண்டியர்கள் காலத்து கல்வெட்டு - சொல்லும் செய்தி என்ன?
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

எனவே இதன் காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வரவேண்டாம் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசின் கொரோனா மேலாண்மைக்காக தேசிய வழிகாட்டு நெறிமுறைப்படி, கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், பொது மக்களைப் பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்" என கூறப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு