Published:Updated:

`வி.வி.ஐ.பி க்யூவில் அடித்த ஷாக்!’ - தற்காலிக மேம்பாலப் பணியால் தாமதமாகும் அத்திவரதர் தரிசனம்!

சி.வெற்றிவேல்
JAYAVEL B

மின்கசிவு காரணமாக அத்திவரதரை தரிசிக்கச் செல்லும் வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பிகள் பாதைகளான மேற்கு ராஜகோபுரம் வழியில் மேம்பாலம் வடிவில் பாதை அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.

தற்காலிக  மேம்பாலப் பணிகள்
தற்காலிக மேம்பாலப் பணிகள்

அத்திவரதர் வைபவத்தில், மேற்குக் கோபுரம் அருகே வி.வி.ஐ.பி தரிசனம் நுழைவாயிலில் ஏற்பட்ட மின் தாக்குதல் காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இந்த மின் விபத்தால் மேற்குக் கோபுரத்தைச் சுற்றியிருக்கும் பகுதியில் மின்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்திவரதர்
அத்திவரதர்

கடந்த மூன்று நாள்களாகவே மேற்குக் கோபுரம் அருகேயிருக்கும் வி.வி.ஐ.பி தரிசன நுழைவாயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது. வி.ஐ.பி பாஸ் வைத்திருப்பவர்கள், இல்லாதவர்கள் என்று பலரும் ஒரே நுழைவாயில் வழியே உள்ளே செல்ல முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.

காவல் துறையினர் கூட்டத்தைக் கலைக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் கூட்டம் பெருகத் தொடங்கியது. மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் வி.வி.ஐ.பி நுழைவாயிலில் முண்டியடித்துக்கொண்டு கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். அதனால், கோயிலுக்கு உள்ளிருந்து வெளியேயும், வெளியேயிருந்து உள்ளேயும் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மின்தடை
மின்தடை

அப்போது திடீரென்று சில பக்தர்கள் இரும்புக் கம்பங்களைப் பிடித்தபோது எலக்ட்ரிக் ஷாக்கை உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அபாயத்தில் சத்தம் போட மேற்குக் கோபுரத்தில் திரண்டிருந்த அனைவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஓடத் தொடங்கினார்கள். இதனால், அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 21 பேர் காயமடைந்தார்கள். மின்சாரத்தால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கூட்டத்தில் காயமடைந்தோர் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எலெக்ட்ரிக் ஷாக் காரணமாக தற்போது மேற்கு கோபுரத்தைச் சுற்றியிருக்கும் அத்திகிரி தெரு, அமுதப்படி தெரு, செட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்பட்டிருக்கிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்...

காத்திருக்கும் பக்தர்கள்
காத்திருக்கும் பக்தர்கள்

பதினைந்து நாள்களுக்கு முன்பே இதே இடத்தில் மின்கசிவு ஏற்பட்டிருக்கிறது. அதைத் தெரியப்படுத்தியும் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறையினர் ஆகியோரின் கவனக்குறைவே இந்த விபத்துக்குக் காரணம் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்நிலையில் மின்கசிவு காரணமாக அத்திவரதரை தரிசிக்க செல்லும் வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பிகள் பாதைகளான மேற்கு ராஜகோபுரம் வழியில் மேம்பாலம் வடிவில் பாதை அமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது. அதிகாலை முதல் வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி வரிசையில் யாரையும் அனுமதிக்கவில்லை. காலை சுமார் 9 மணிக்கு தரிசனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்காலிக  மேம்பாலப் பணிகள்
தற்காலிக மேம்பாலப் பணிகள்

இதனால் வி.வி.ஐ.பி மற்றும் வி.ஐ.பி பாஸ் வைத்திருக்கும் பலரும் தரிசனம் செய்யமுடியாமல் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலை 5 மணிக்குத் தொடங்க வேண்டிய பொது தரிசனமும் 7.30 மணிக்குத்தான் தொடங்கியது. நேற்று இரவு தரிசனம் கிடைக்காதவர்கள் பலரும் இன்று அதிகாலை தரிசனத்துக்காகக் காத்திருந்தனர். ஆனால், தரிசனம் தாமதமானதால் பலரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க செல்லும் வி.ஐ.பி மற்றும் வி.வி.ஐ.பிகள் பாதைகளான மேற்கு ராஜகோபுரம் வழியில் மேம்பாலம்...

Posted by Vikatan EMagazine on Wednesday, August 7, 2019