Published:Updated:

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

எல்லோரா குகைக் கோயில்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
எல்லோரா குகைக் கோயில்கள்

வேணு, போஜன்பள்ளி

காலங்கள் கடந்தும் நம்மை வியக்கவைக்கும் கலைப் படைப்புகள் இந்தியாவில் அதிகம் உண்டு. அவற்றில், `இவை மனிதர்களால் உருவாக்கப்பட வாய்ப்பே இல்லை' என்று அதிசயிக்க வைக்கும் பிரமாண்ட படைப்பு எல்லோரா குகைக் கோயில்கள். இது மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்துக்கு 30 கி.மீ வடமேற்கு திசையில், ஒளரங்காபாதுஸா லிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய எல்லோரா குடைவரைக் குகைக் கோயில்களின் எழிலை இங்கே நாம் தரிசித்து மகிழ்வோமா!

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

பாற்கடலில் எழுந்து வந்த அலைமகள் தாமரை பீடத்தில் அமர்ந்துள்ள எழில் தோற்றம். கஜலட்சுமியாகத் திகழும் அழகிய சிற்பமிது. இந்தியாவின் பழைமையான திருமகள் தோற்றங்களில் இது முதன்மையானது என்பர்.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

ந்தாம் நூற்றாண்டு தொடங்கி ஏழாம் நூற் றாண்டுக்குள் பௌத்த குகைகள் உருவாகி உள்ளன. இவையே இங்குள்ளவற்றில் பழைமையானவை. இந்தக் குகைகள் சிலவற்றில் புத்தர், போதிசத்துவர் ஆகியோரின் உருவங்கள், மரத்தால் செய்தாற்போன்று மென்மையாக பாறையில் செதுக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

சிவபெருமானின் போர்கோலக் காட்சி. கண்களில் அனல் பறக்க 10 கரங்களுடன் திரிபுராந்தகராக நிற்கும் பிரமாண்ட கோலம் இது.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

கருவறையின் மத்தியில் பிரமாண்ட சிவலிங்கத் திருமேனி. இங்குள்ள கயிலாசநாதர் கோயிலில் எல்லாமே பிரமாண்டம். கல் தூண்கள், ஜன்னல்கள், உள் மற்றும் வெளி பிராகாரங்கள், மிகப்பெரிய மண்டபம், மிகப்பெரிய சிவலிங்கம் போன்றவை குடைவரைக் கட்டடக்கலையின் உச்சம் எனலாம்.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

இந்தியாவில் உள்ள பல்வேறு குடைவரைக் கோயில்கள் எல்லாம் அடியிலிருந்து - தரையிலிருந்து மேலாக கட்டப்பட்ட தரைதளக் கோயிலாகும். எல்லோரா குகைக் கோயில்கள் மட்டும் மேலிருந்து கீழாக குடைந்து கட்டப்பட்டது என்பதுதான் வியப்பானது.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

இந்த சிற்பங்கள் குடையும் காலங்களில் இந்தப்பாறைகள் அவ்வளவு திண்மையாக இருக்கவில்லை என்றும் இதனால் குடைவு எளிதாக இருந்தது என்றும் கூறுகிறார்கள். நாளாக நாளாகவே இது இறுகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

காண்பவரை வியக்கச் செய்யும் இந்தக் குகைகள் குடையப்பட்ட மலைகள் சாயாத்ரி மலைத் தொடரைச் சேர்ந்தவை. இந்த மலைகளுக்கு வயது 65 மில்லியன் ஆண்டுகள் என்கிறார்கள். இந்த மலைத்தொடரின் மேற்குப்பகுதி மலைகள்தாம் அழகிய குகைகளாகக் குடையப்பட்டுள்ளன.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

நமது மாமல்லை சிற்பங்களைப்போலவே இங்குள்ள குகைக் கோயில்களைக் கட்டவும், வெளியிலிருந்து சிறு கல்லைக்கூட எடுத்துவரவில்லை என்பதே உண்மை. இந்தக் கோயிலில் உள்ள அனைத்தும் இதே மலையின் கற்களாலானவை என்பது ஆச்சர்யமான உண்மை.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

`குகை எண் 16' எனப்படும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கயிலாசநாதர் கோயில் குகை உலகப்புகழ் பெற்றது. ஈசனின் இருப்பிடம் எனப்படும் கயிலாச மலையைக் குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இக்குடைவரை, பல மாடிகளைக்கொண்ட கோயில் வளாகமாக உள்ளது.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

இந்து சமயக் குகைகள் கி.பி 7-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அமைக்கப்பட்டவை. இவை சிறப்பான வடிவமைப்பையும், வேலைத்திறனையும் கொண்டு விளங்குகின்றன. சிவன் பார்வதி திருமணம், நடராஜர் தாண்டவம், கயிலையைத் தூக்கும் ராவணன் போன்ற சிற்பங்கள் உயிரோட்டம் கொண்டவை என்கிறார்கள்.

எங்கள் ஆன்மிகம்: எல்லோரும் மயங்கும் எல்லோரா குகைக் கோயில்கள்!

ஆலய வெளிப்புறச் சுவரெங்கும் கோஷ்ட தெய்வங்கள். கந்தர்வர்கள் விண்ணில் பறக்க கல்லில் வடிக்கப்பட்ட அந்த மாடங்களின் அழகு, எழுத்தில் வடிக்க இயலாதது.