Published:Updated:

5 தீர்த்தங்கள், 5 பிரகாரங்கள், 5 கொடிமரங்கள் - காசிக்கு நிகரான விருத்தாசலம் திருக்கோயில் சிறப்புகள்!

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்

காசியிலுள்ள கங்கையில் நீராடினால் என்ன பேறு உண்டோ, அவ்வளவு பேறு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அருகே உள்ள புண்ணிய மடுவில் நீராடுவதாலும் கிடைக்கும் என்கிறார்கள்.

5 தீர்த்தங்கள், 5 பிரகாரங்கள், 5 கொடிமரங்கள் - காசிக்கு நிகரான விருத்தாசலம் திருக்கோயில் சிறப்புகள்!

காசியிலுள்ள கங்கையில் நீராடினால் என்ன பேறு உண்டோ, அவ்வளவு பேறு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அருகே உள்ள புண்ணிய மடுவில் நீராடுவதாலும் கிடைக்கும் என்கிறார்கள்.

Published:Updated:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்
விருத்தாசலம், காசிக்கு நிகரான புண்ணியச் சேத்திரம். இங்கே சுவாமிக்கு விருத்தகிரீஸ்வரர் என்பது திருநாமம். அழகு தமிழில் அதை பழைமலைநாதர், முதுகுன்றீசர் என்று போற்றுகிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான இந்த ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகள் திருப்பணி நடைபெற்று வந்தது. திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் ஜனவரி 27-ம் தேதி அன்று கணபதி பூஜை நடைபெற கும்பாபிஷேகத்துக்கான விசேஷ பூஜைகள் தொடங்கின. இதற்காக பிரமாண்ட யாக சாலை நடைபெற்றுக் காலையும் மாலையும் முறையாக பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நல்ல நாளில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் மகிமைகள் சிலவற்றை அறிந்துகொள்வோம்.
விருத்தகிரீஸ்வரர்
விருத்தகிரீஸ்வரர்

தமிழோடு விளையாடிய அம்பிகை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் குரு நமசிவாயர். அவர் ஒருநாள் விருத்தாசலத்தில் தங்கினார். ஊரில் இரவு தங்கினார். கோயிலுக்குச் சென்று சிவபெருமானையும் அம்பிகையையும் தரிசித்தார். வெளியே வந்தார். மண்டபத்தில் படுத்தார். வழக்கமாக அவருக்குப் பசித்தால் அம்பிகையையே அழைப்பார். அன்னை அன்னபூரணி அல்லவா ஓடிவந்து அமுது அளிப்பாள்.

அன்றைக்கு குரு நமசிவாயருக்குப் பசித்தது. அன்னையை நினைத்துத் துதிக்கத் தொடங்கினாள்.

நன்றிபுனையும் பெரியநாயகி எனும் கிழத்தி

என்றும் சிவனார் இடக்கிழத்தி - நின்ற

நிலைக்கிழத்தி மேனி முழுநிலக்கிழத்தி

மலைக்கிழத்தி சோறு கொண்டுவா

என்று பாடி முடித்தார். எப்போதும் உடனே வரும் அம்பிகை அன்று நிதானமாக நடை தளர்ந்து, நரை தோன்றி, கண்களை இடுக்கி, லேசாகச் சாய்ந்து வந்து கொண்டிருந்தாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குரு நமசிவாயருக்கோ ஒரு புறம் வியப்பு; மறு புறம் யோசனை. அன்னை ஏன் இப்படிக் கிழவி போல் வந்திருக்கிறாள் என்று குழம்பினார். அதற்கு பதில் சொல்லும்விதமாக அன்னையே பதில் சொன்னாள்.

‘‘ஏனப்பா... கிழத்தி, கிழத்தி என்று வாய் ஓயாமல் பாடினாயே, கிழவியால் எப்படிச் சாப்பாட்டையும் தூக்கிக் கொண்டு ஓடி வர முடியும்? ’’ என்று கிண்டாலாகக் கேட்டாள். கிழத்தி என்ற சொல்லுக்கு, உரிமை உடையவள், என்று பொருள். ஆனால், அம்பிகை இப்படிக் ‘கிழ’ என்பதற்கு ‘முதிய’ என்ற அர்த்தத்தைக் கொண்டுவிட்டாளே என்று வருந்தினார். உடனே நற்றமிழில் மற்றொரு பாடல் பாடினார்.

முத்திநதி சூழும் முதுகுன்று உறைவாளே

பத்தர் பணியும் பதத்தாளே - அத்தன்

இடத்தாளே முற்றா இளமுலை மேல் ஆர

வடத்தாளே சோறு கொண்டு வா

என்ன ஆச்சர்யம். பாட்டி தன் நரை நீங்குக் குமர் ஆனாள். அந்த இளம் தோற்றத்தோடு பாலாம்பிகை என்னும் திருநாமத்தோடு அங்கு கோயில் கொள்வதாகச் சொன்னாள். பிறகு அத்திருக்கோலத்தோடு குரு நமசிவாயருக்கு உணவிட்டாள் என்கிறது தலபுராணம்.

விருத்தாசலம்
விருத்தாசலம்

ஆலய வழக்கம்

ஆலயத்தில் ஒரு பழைய வழக்கம் உண்டு. அதன்படி, கோயிலுக்கு வடக்கே- வடக்கு கோபுரத்துக்கு எதிரில் இருக்கும் புண்ணிய மடுவில் இறங்கி, வழிபட்டு விட்டுத்தான் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஒரு காலத்தில் பெரிய ஆறாக ஓடிக் கொண்டிருந்த மணிமுத்தா நதி, இப்போது சிறிய மடுவாக மட்டுமே காணப்படுகிறது. காசியிலுள்ள கங்கையில் நீராடினால் என்ன பேறு உண்டோ, அவ்வளவு பேறு இந்தப் புண்ணிய மடுவில் நீராடுவதாலும் கிடைக்கும் என்கிறார்கள்.

இங்கு சுவாமி - அம்பாள் எழுந்தருள்வதிலும் ஒரு சிறப்பு உண்டு. பெரிய நாயகர் - பெரியநாயகி இருவரும் உற்சவர்கள்; பெரியநாயகியோடு விருத்தாம்பிகை, பாலாம்பிகை ஆகிய தேவியரும் உடன் அமர புறப்பாடு நடைபெறும். மூன்று சக்திகளுடன் சுவாமி காட்சி கொடுப்பார். ‘இச்சா சக்தியும் கிரியா சக்தியும் ஞான சக்தியும் எல்லாமும் அந்த அம்மையப்பனே!’ என்று விளக்குவதாகவே இந்தக் காட்சி அமையும் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐந்து சிறப்புகள்

ஐந்து பிராகாரங்கள்: ஆலயப் பிராகாரம் மூன்று, தேரோடும் வீதி மற்றும் பஞ்சவர்ணப் பிராகாரம் (மானசிக ஆன்மப் பிராகாரம்).

ஐந்து கோபுரங்கள்: நான்கு கோபுரங்கள் மற்றும் கண்டராதித்த கோபுரம்.

ஐந்து கொடிமரங்கள்: வெளிப் பிராகாரத்தில் நந்தி மண்டபக் கொடி மரம், வன்னியடிப் பிராகாரத்தில் பிரதான கொடிமரம், தெற்கு, மேற்கு மற்றும் வடக்குச் சுற்றுகளில் உள்ள மூன்று கொடிமரங்கள்.

ஐந்து தீர்த்தங்கள்: அக்னி, சக்கர, குபேர, மணிமுத்தா நதி மற்றும் நித்யானந்த கூபம் (இறைவ னோடு இணையும் ஆனந்த ஆன்ம அனுபவம்).

ஐந்து விநாயகர்கள்: ஆழத்துப் பிள்ளையார், வல்லப விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், தசபுஜ விநாயகர், முப்பிள்ளையார்.

ஐந்து தேர்கள்: விநாயகர், பழைமலைநாதர், பெரிய நாயகி, சுப்ரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள்.

ஐந்து தேவர்கள் வழிபட்ட தலம்: திருமால், பிரம்மா, இந்திரன், குபேரன் மற்றும் குபேரனின் தங்கை.

ஐந்து ரிஷிகள் வழிபட்ட தலம்: சுக்கிரன், யாக்ஞ வல்கியர், அகத்தியர், அத்திரி மற்றும் காசியபர்.

ஐந்து மண்டபங்கள்: தீபாராதனை மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், விபச்சித்து மண்டபம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் இசை மண்டபம் (கோயில் முகப்பில் இருக்கும் மண்டபம், அம்மன் சந்நிதி முன் மண்டபம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் இன்னும் அதிகமாகும்).

ஐந்து மகான்கள் வழிபட்ட தலம்: விபச்சித்து, ரோமசர், நாதசர்மா, அநவர்த் தனி மற்றும் குமாரசர்மா.

விருத்தாசலம் பஞ்சலிங்கங்கள்
விருத்தாசலம் பஞ்சலிங்கங்கள்

ஆங்கில அதிகாரியின் திருப்பணி

சோழ மன்னர்களிலிருந்து பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்தது போலவே இங்கே ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒருவரும் திருப்பணிகள் செய்துள்ளார். இங்கு உள்ள கயிலாசப் பிராகாரத்துக்குத் தளம் போட்டவர், ஓர் ஆங்கிலேயர். தென் ஆற்காடு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஹைட். விருத்தாசலம் இறைவரால் ஈர்க்கப்பட்ட ஹைட், பிராகாரத்துக்குத் தளம் அமைத்துக் கொடுத்தார். இன்னும் சில திருப்பணிகளும்கூட ஹைட் செய்துள்ளார். யாத்திரீகர்கள் தங்குவதற்காக ஹைட், சத்திரம் ஒன்றும் கட்டியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism