Published:Updated:

திருப்பதி, சபரிமலை, ஷீர்டி கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கைகளும்!

திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி தேவஸ்தானம்

இந்தியாவிலுள்ள உலகப் பிரசித்திபெற்ற கோயில்களின் நிர்வாகங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

டந்த டிசம்பரில் தொடங்கி உலக நாடுகளையெல்லாம் அச்சுறுத்தி வருகிறது, கொரோனா வைரஸ். இதன் தாக்கம் தற்போது இந்தியாவையும் பெரிதும் பாதித்து வருகிறது.

சபரிமலை
சபரிமலை

ஆன்மிகம் தழைக்கும் நாடான இந்தியாவில் கோயிலிலும் திருவிழாக்களிலும் மக்கள் திரள் நிறைந்திருக்கும். மாசி மாதம், ஹோலிப் பண்டிகை என ஆன்மிக உற்சவங்களும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ள இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தியாவிலுள்ள உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களின் நிர்வாகங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன.

இந்தியாவிலேயே முதல் பாதிப்பு ஏற்பட்டது, கேரளாவில். இன்னும் பாதிப்புகள் அங்கே தொடர்ந்து வருகின்றன. இந்த நிலையில், மார்ச் 13-ம் தேதி மாதாந்திர மண்டலகால பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்படுகிறது. அனால், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் ஐயப்ப தரிசனம் செய்ய மலைக்கு வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது, திருவாங்கூர் தேவசம்போர்டு.

சபரிமலை
சபரிமலை
`27 நாள்களுக்குப் பின்னரே கொரோனா அறிகுறி!' - தகர்ந்த 14 நாள்கள் நம்பிக்கை; அதிர்ச்சியில் சீனா

கேரளம் பத்தனம்திட்டாவில் புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல்விழா நடைபெற்று வருகிறது. பெண் பக்தர்கள் கோயில் தொடங்கி நகர் முழுவதிலும் அம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபடுவர். தற்போது கொரோனா பரவுகிறது என்றாலும், திருவிழாவுக்கு மக்கள் வருவதைத் தவிர்க்க முடியாது என்பதால், முடிந்தவரை நோய் பரவாமல் தடுக்க மருத்துவ, சுகாதார வசதிகள் செய்திருக்கிறது, மாவட்ட நிர்வாகம்.

நோய் அறிகுறி தென்பட்டால் மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்துகொள்ளவும், சாதாரணக் காய்ச்சல் இருந்தால்கூட பொது இடங்களைத் தவிர்த்து அவர்களின் வீட்டு வாசலிலேயே பொங்கல் வைத்துக்கொள்ளவும் சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ராமேஸ்வரம் கோயில்
ராமேஸ்வரம் கோயில்

ராமேஸ்வரத்துக்கு வருகிற சுற்றுலாப் பயணிகளையும் வெளிநாட்டவர்களையும் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ராமேஸ்வரத்தில் சீனப்பெண் ஒருவர் ஹோட்டல் அறையொன்றில் தங்கியிருந்ததும், அதையறிந்த அதிகாரிகள், `நோய் அறிகுறி இல்லை' என முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததும்தான் அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடநாட்டவர்கள், வெளிநாட்டவர்கள் எனப் பல்வேறு தரப்பு பக்தர்களும் வருவது வழக்கம் என்பதால் கொரோனா பரவலைத் தடுக்க ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உச்சக்கட்ட கண்காணிப்பு வளையத்துக்குள் உள்ளது.

திருப்பதி
திருப்பதி
TTD_PHOTO
கொரோனா வைரஸ்: திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு! #Tirupati

திருப்பதி திருமலைக் கோயிலில் கொரோனாவைத் தடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருமலையில் பக்தர்கள் எவருக்கேனும் நோய் அறிகுறிகளான காய்ச்சல், சளி ஆகியவை ஏற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடனடி பரிசோதனை செய்ய நவீன மருத்துவக் கருவிகளுடன் மருத்துவக் குழுக்கள் இயங்கி வருகின்றன. அறிகுறி தென்படுகிற பக்தர்கள் திருப்பதியிலுள்ள ஸ்ரீவேங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலைக்கு வருகிற பக்தர்கள் முகக்கவசம், கையுறைகள் ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்துவர வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, நோயின் அறிகுறி உள்ளவர்கள் திருப்பதி திருமலைக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தங்களது ஸ்ரீ வேங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட ஊடகங்கள் மூலமாகவும், திருமலை ஊழியர்கள் மூலமாகவும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி, சபரிமலை, ஷீர்டி கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கைகளும்!
`வெளிநாட்டவர் புனிதப் பயண  அனுமதி நிறுத்தம்' -கொரோனாவால் சவுதி அரசு அதிரடி!

மதுராவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகெங்கிலும் பல நாடுகளில் கிளைகள் கொண்டது இஸ்கான் கோயில். நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இஸ்கான் கோயில்களுக்கு வந்துசெல்வார்கள். இந்த நிலையில், இஸ்கான் கோயில்களில் வெளிநாட்டுப் பக்தர்கள் வந்து வழிபடுவதை 2 மாதகாலத்துக்குத் தவிர்க்க வேண்டும் என இஸ்கான் கோயில் தலைமை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், கோயில் ஊழியர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டுமெனவும், வருகிற பக்தர்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை அளிக்க வேண்டுமெனவும் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

புகழ்பெற்ற ஷீர்டி சாய்பாபா கோயிலில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கோயிலுக்குள் நுழையவோ, சாய்பாபாவை தரிசிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அச்சம் தணிகிற வரையிலும் இந்தத் தடை அமலிலிருக்கும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பக்தர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். ஹோலிப் பண்டிகைக்குக் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

சாய்பாபா
சாய்பாபா
`புனிதநீர் கொடுப்பது தற்காலிக நிறுத்தம்!'- கொரோனா காரணமாக கத்தோலிக்க தேவாலயங்களில் கட்டுப்பாடு

சீனத் தலைநகர் பீஜிங்கில் ஹோலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பை டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் களைகட்டும் ஹோலிப் பண்டிகை உற்சாகமிழந்து காணப்படுகிறது. இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மெதினாவுக்கு உம்ராவுக்கு வரும் பக்தர்களின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டதால், அந்தப் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

மொழி, மதம், நாடு கடந்து பாதித்து வருகிறது, கொரோனா! இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வழிபாட்டிடங்களும் களையிழந்துள்ளன.

அடுத்த கட்டுரைக்கு