Published:Updated:

வி.ஐ.பி தரிசன நேரம் குறைப்பு எதிரொலி... திருப்பதியில் கூடுதலாக 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

எஸ்.கதிரேசன்

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசும்போது 'வி.ஐ.பிகள் அடிக்கடி திருப்பதிக்கு வருவதைக் குறைத்துக் கொண்டால், பொது மக்கள் அதிக சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யமுடியும்' என்றார்.

திருப்பதி
திருப்பதி

திருப்பதி என்றாலே நம் நினைவுக்கு வருவது லட்டுப் பிரசாதம்தான். பக்தர்களால் பெரிதும் விரும்பப்படும் லட்டுப் பிரசாதம் பிறந்து 300 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

திருப்பதி
திருப்பதி

1715 ஆண்டு ஆகஸ்ட் 2 -ம் தேதிதான் முதன் முதலாக லட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தரத்திலும் சுவையிலும் இதற்கு இணையாக வேறொன்று இல்லையெனும் அளவுக்குப் பிரசித்தியும் மகிமையும் பெற்று விளங்குவதால் 2009 - ம் ஆண்டு புவிசார் குறியீடு இதற்குக் கிடைத்துள்ளது.

தினமும் சுமார் ஒன்றரை லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. ஆந்திராவில் உள்ள திருப்பதி கோயிலில் வெங்கடாஜலபதிக்கு நைவேத்தியப் பிரசாதமாகப் படைக்கப்படும் லட்டு, பெருமாளுக்குப் பிரியமான ஒன்று.

திருப்பதி
திருப்பதி

இதை `ஸ்ரீவாரி லட்டு’ என்றும் சொல்வார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதைத் தயாரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்கிறது.

சமீபத்தில் திருப்பதி வந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

பக்தர்கள் தரிசனம்
பக்தர்கள் தரிசனம்

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் பேசும்போது 'வி.ஐ.பிகள் அடிக்கடி திருப்பதிக்கு வருவதைக் குறைத்துக் கொண்டால், பொது மக்கள் அதிக சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யமுடியும்' என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.

வி.ஐ.பி தரிசன நேரம் அதிகாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்று வந்தது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வலியுறுத்தலாலும்இதை கடந்த ஜூலை 18 -ம் தேதி முதல் ஒன்றரை மணி நேரமாகக் குறைத்துள்ளனர்.

திருப்பதி வேங்கடேசப் பெருமாள்
திருப்பதி வேங்கடேசப் பெருமாள்

இதனால் வழக்கத்தைவிட 5 ஆயிரம் பக்தர்கள் கூடுதலாக தரிசனம் செய்ய முடிகிறதென்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது