Published:Updated:

நோய் தீர்க்கும் மருத்துவனுக்கு ஆலயம் எழும்பட்டும்!

ஶ்ரீசங்கரேஸ்வரர் ஆலயம்
சித்தஞ்சி கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசங்கரேஸ்வரர் ஆலயம் சித்தஞ்சி கிராமம்

ஆலயம் தேடுவோம்

நோய் தீர்க்கும் மருத்துவனுக்கு ஆலயம் எழும்பட்டும்!

ஆலயம் தேடுவோம்

Published:Updated:
ஶ்ரீசங்கரேஸ்வரர் ஆலயம்
சித்தஞ்சி கிராமம்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீசங்கரேஸ்வரர் ஆலயம் சித்தஞ்சி கிராமம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவர்களும் சோழர்களும் எழுப்பிய ஆலயங்கள் எல்லாம் இன்றும் பல இடங்களில் சிதைந்தும் அழிந்தும் வருகின்றன என்பது வேதனையான விஷயம். பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பழைமையான ஆலயங்களைக் கண்டறிந்து தங்களால் ஆன உதவிகளைச் செய்து அந்த ஆலயத்தையும், ஆலயத்தின் நிலங்களையும் பாதுகாத்து வருகிறார்கள்.

நோய் தீர்க்கும் மருத்துவனுக்கு ஆலயம் எழும்பட்டும்!

துபோல சதிஷ் என்ற ஒரு அடியார் தொண்டை மண்டலத்தில் பல ஆலயங்களைக் கண்டறிந்து உதவி வருகிறார். அவர் நமக்கு அடையாளம் காட்டிய திருக்கோயில் ஓச்சேரி - சித்தஞ்சி கிராமத்தில் உள்ள ஶ்ரீயோகாம்பாள் - ஶ்ரீபோகாம்பாள் உடனுறை ஶ்ரீசங்கரேஸ்வரர் ஆலயம்.

பல்லவர்கள், சோழர்கள், கங்கர்கள், சம்புவரையர்கள், விஜயநகரப் பேரரசர்களும் கொண்டாடியக் கோயில், இன்று ஊருக்குள் ஒடுங்கி ஆள் நடமாட்டமின்றி இருந்தது. சிறிய அழகான கோயில். எதிரே நந்தி மண்டபத்துடன் சுவாமி, அருகில் அம்பாள் சந்நிதிகள், சுற்று பிராகாரத்தில் நவகிரக சந்நிதி. கணபதியும் முருகப்பெருமானும் ஈசனின் சந்நிதிக்கு முன்னால் இடமும் வலமுமாக வீற்றிருக்கிறார்கள். மூன்றாம் நந்திவர்மன் ஆட்சி காலத்தில் (கி.பி.825-850) கட்டப்பட்டக் கோயில் இது என்றும், விஜயாலயச் சோழனின் மகன் ஆதித்த சோழன் சோழ அரசனாக கி.பி. 871 முதல் 907-ம் ஆண்டு வரை ஆண்டபோது தொண்டை மண்டலத்தில் பல சிவாலயங்களைக் கட்டுவித்தான், அதில் இந்த கோயிலும் ஒன்று என்றும் கூறுகிறார்கள்.

ஈசன் மேற்கு நோக்கிய அபூர்வ ஆலயம் இது. ஆயிரம் கிழக்கு நோக்கு நோக்கிய ஆலயங்களுக்கு இணையானது ஒரு மேற்கு நோக்கிய ஆலயம் என்பார்கள். ராவணன் நாள்தோறும் ஒரு மேற்கு நோக்கிய ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டே உணவு எடுத்துக் கொள்வான் என்றும் அதற்காகவே புஷ்பக விமானத்தை வடிவமைத்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் தேவப் பிரச்னம் பார்க்கையில் இங்குள்ள சங்கரேஸ்வரரை 999 ருத்ரர்கள் வழிபட்டார்கள் என்றும் இன்றும் அரூபமாக அவர்கள் வழிபாடு செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

மிக அரிதாக இங்கு இரண்டு அம்பாள்கள் யோக-போக சக்திகளாக எழுந்தருளி இருக்கிறார்கள்.

ல ஆண்டுகளுக்கு முன்னாலே இந்த ஆலயம் அழிந்து போக, இங்கிருந்த கலைச் செல்வங்களும் கல்வெட்டுகளும் காணாமல் போயின. பிறகு சிறிய அளவில் விஜயநகர காலத்தில் ஆலயம் எழும்பியது. அதுவும் சிதைந்து போக, தற்போதைய ஆலயம் 150 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். ஆலயத்தின் சாந்நித்யமும் அமைதியும் நம்மை வியக்க வைத்தது.

நோய் தீர்க்கும் மருத்துவனுக்கு ஆலயம் எழும்பட்டும்!

எந்தவித வரலாற்று ஆவணங்களும் இல்லை என்றாலும் கோயில் பல நூற்றாண்டுகளைக் கடந்தது என்பதை லிங்கமூர்த்தமே சொல்லியது. அது பல்லவர் காலத்துத் திருமேனி என்றே உணர முடிந்தது. முடிந்தவரை சுவாமியை நன்கு அலங்கரித்து அழகாக வைத்து இருந்தார்கள்.

நோய் தீர்க்கும் மருத்துவனாக சுவாமியும், திருமண வரம் அருளும் நாயகியாக போகசக்தியும், மனஅமைதி; நிம்மதி அருளும் தேவியாக யோகசக்தியும் விளங்குகிறார்கள். எந்த வியாதி ஆனாலும் இங்கு வந்து வேண்டிக்கொள்ள நிச்சயம் தீரும் என்கிறார்கள்.

'நமது அடிப்படையான தர்மங்களை எல்லாம் மறந்து விட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனிக்கத் தவறுகிறோம். இப்போது ஒரு ஊரில் யார் ரொம்ப அழுக்குத் துணி கட்டிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் ஸ்வாமிதான் என்று தெரிகிறது. நம் ஊர் கோயிலில் எல்லாம் சிறப்பாக நடைபெறுகிறதா என்று கவனித்தாலே நம் கவலைகள் யாவும் பறந்துவிடும்' என்பார் காஞ்சி மாமுனிவர்.

நோய் தீர்க்கும் மருத்துவனுக்கு ஆலயம் எழும்பட்டும்!
நோய் தீர்க்கும் மருத்துவனுக்கு ஆலயம் எழும்பட்டும்!
நோய் தீர்க்கும் மருத்துவனுக்கு ஆலயம் எழும்பட்டும்!

தமிழகமெங்கும் நடைபெற்று வரும் ஆலயப் பணிகளில் எந்த கூலியும் வாங்காமல் பல அடியார்கள் உழைத்து வருகிறார்கள். கூடுமானவரை கட்டமானப் பொருள்கள் கூட அவர்களாலேயேத் திரட்டவும் படுகிறது. இவற்றை மீறியும் ஆலயத் திருப்பணிக்கு பெரும் பண உதவி தேவைப்படுகிறது. அதை ஓரளவு நம்முடைய வாசகர்களும் தந்து உதவி பல ஆலயங்களில் குடமுழுக்கு நடைபெற உதவி உள்ளார்கள். இந்த கோயிலும் எழும்ப வேண்டும். ஈசனும் அம்பிகையும் எழிலாக ஆலயத்தில் எழுந்தருளினால் நிச்சயம் இந்த ஊர் வளர்ச்சி பெறும். இந்த தெய்வீகப் பணிக்கு உதவிய அனைவரின் வாழ்க்கையும் சிறப்பு பெறும்.

நம்மிடம் வசதி இல்லை. இவ்வளவு எல்லாம் தரலாமா என்று யோசிக்காதீர்கள். ராமாயண அணில் தான் நமக்கெல்லாம் முன்னுதாரணம். அந்த சிறிய ஜீவன் புராணத்தில் பதிந்து போனது தொண்டின் அளவால் அல்ல, தொண்டு செய்ய எண்ணிய குணத்தால்! எனவே முடிந்தவர்கள் உதவுங்கள். சிவனருள் உங்களை நிச்சயம் காக்கும்.

எப்படிச் செல்வது? சென்னை - பெங்களூரு சாலையில், ஓச்சேரிக்கு முன்பாக சித்தஞ்சி கிராமம் உள்ளது. இடது புறமாக கிராமத்தில் சென்று ஆலயத்தை தரிசிக்கலாம்.

தொடர்புக்கு:

பாபு - 90035 80200
பார்த்தசாரதி - 74025 83796