Published:Updated:

ஏழைத் தொழிலாளர்களின் பசிப்பிணி தீர்க்கும் பாபா ஆலயம்

சென்னை தி.நகர் சாயிபாபா கோயில்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை தி.நகர் சாயிபாபா கோயில்

எப்போதும் தன்னைச் சுற்றியிருக்கும் ஏழை - எளியவர்களுக்கும், பறவை களுக்கும் விலங்குகளுக்கும் உணவிட்டு, அவர்களின் பசியாற்றிய பிறகே, தான் உணவு அருந்துவார் ஷீர்டி ஶ்ரீசாயி.

ஏழைத் தொழிலாளர்களின் பசிப்பிணி தீர்க்கும் பாபா ஆலயம்

எப்போதும் தன்னைச் சுற்றியிருக்கும் ஏழை - எளியவர்களுக்கும், பறவை களுக்கும் விலங்குகளுக்கும் உணவிட்டு, அவர்களின் பசியாற்றிய பிறகே, தான் உணவு அருந்துவார் ஷீர்டி ஶ்ரீசாயி.

Published:Updated:
சென்னை தி.நகர் சாயிபாபா கோயில்
பிரீமியம் ஸ்டோரி
சென்னை தி.நகர் சாயிபாபா கோயில்

சென்னை தி.நகர் பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் இருக்கும் மேட்லி சாலையில், பசித்திருக்கும் கூலித் தொழிலாளிகளுக்குத் தினமும் வயிறார உணவிட்டு வருகிறது ஓர் ஆலயம்!

எப்போதும் தன்னைச் சுற்றியிருக்கும் ஏழை - எளியவர்களுக்கும், பறவை களுக்கும் விலங்குகளுக்கும் உணவிட்டு, அவர்களின் பசியாற்றிய பிறகே, தான் உணவு அருந்துவார் ஷீர்டி ஶ்ரீசாயி. அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி பராமரிப்பதுடன், அந்தப் பகுதியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளிகளுக்கு அன்றாடம் மதிய உணவு வழங்கி வருகிறது ‘சர்வஜன ரக்‌ஷா சமிதி’ அமைப்பு.


அண்மையில் ஒரு வியாழக்கிழமை அன்று ‘ஷீர்டி சாய் தியான மையம்’ என்று வழங்கப்படும் சாயி கோயிலுக்குச் சென்றோம். மிகச் சிறிய இடம் என்றாலும் தூய்மையாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் வடநாட்டுப் பாணியிலான விநாயகரின் அழகிய பளிங்குச் சிலை. நடுநாயக மாக இருக்கும் மேடையில், ஷீர்டியில் இருப்பது போன்று மூலவர் பாபாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரின் திருவடியின் கீழ், பளிங்குப் பாதங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பாத பூஜை செய்ய விரும்புவோர் செய்யலாம் என்ற அறிவிப்பும் காணப்படுகிறது.

இடது புறமுள்ள கூடத்தில் அபிஷேகம் செய்யப்படும் பாபாவின் திருமூர்த் தம் உள்ளது. அருகிலேயே பாபா படம் ஒன்றும் பக்தர்களின் கோரிக்கைப் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் உருவாகக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர், ‘விவேகானந்தா இன்ஸ்டிட்யூட்’ மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி வகுப்பு களை 45 ஆண்டு காலமாக நடத்திவரும் வி.ராஜகோபாலன். இவர், தன் மகன் கணேஷ் மற்றும் தங்கை மகன் விஜய் துணையுடன், சுமை தூக்கும் தொழிலாளர்களின் பசியைப் போக்கு வதற்காகவே இந்தக் கோயிலை நிர்மாணித்திருக்கிறாராம்.

“இங்கே பக்கத்தில்தான் மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன், மார்க்கெட் எல்லாம். மார்க்கெட்டுக்கு, லோடு லாரிகள் நிறைய வரும். மூட்டைகளை இறக்கவும் ஏற்றவும் நிறைய கூலித் தொழிலாளிகள் இருக்காங்க. அவர்களில் சிலருக்குத்தான் வேலை கிடைக்கும். வேலை கிடைக்காத தொழிலாளிகள் பட்டினிதான். இவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு ரொம்ப நாளா ஒரு எண்ணம் எனக்குள். ஆனாலும் தினமும் அவர்கள் எல்லோரையும் தேடிச் சென்று உணவு கொடுப்பது முடியாதே! என் தங்கை பையன் விஜய்தான் இந்த யோசனையைச் சொன்னான். இந்த இடத்தில் பாபா கோயில் கட்டினால், அதன் மூலம் தினமும் அந்தத் தொழிலாளிகளுக்கு அன்ன தானம் பண்ணலாமேன்னு சொன்னான்.

ஏழைத் தொழிலாளர்களின் பசிப்பிணி தீர்க்கும் பாபா ஆலயம்


எங்கள் இன்ஸ்டிட்யூட் இருந்த இடத்திலேயே கீழ் தளத்தில் ஒரு இடம் இருந்தது. அங்கே, வேற ஒருத்தர் இருந்தார். முதலில் அதைக் கேட்டபோது அவர் காலி பண்ணல. அதோடு தொகையும் அதிக மாகச் சொன்னாங்க. நான் விட்டுட்டேன். அப்புறம் திடீர்னு ஒருநாள் அந்த ஓனர் போன் செய்தார்.

‘அவர் காலி பண்ணிட்டார். நீங்க எடுத்துக்கிறீங் களா?’ன்னு கேட்டார். இது பாபா நடத்திய அற்புதம்தான்னு சொல்லணும். உடனேயே அந்த இடத்தைச் சுத்தம் செய்து கோயில் கட்டும் வேலைகளைத் தொடங்கினோம். ஷீர்டியிலிருந்தே பாபா மற்றும் விநாயகர் சிலைகள் வந்தன. கோயில் வேலை கள் முடிந்து, 2017 முதல் இங்கே வழிபாடுகள், ஆரத்தி மற்றும் அன்னதானம் தொடர்ந்து நடந்துட்டிருக்கு.

முதலில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. தினமும் சுமார் 100 பேருக்கான சாப்பாட்டை வெளியிலிருந்து சமைச்சு ஒருத்தர் அனுப்பிட்டிருந்தார். அப்புறம் கொஞ்சம்கொஞ்சமா நன்கொடைகள் வர ஆரம்பிச்சுது. பல பக்தர்கள் அரிசி, பருப்பு, எண் ணெய் எல்லாம் நன்கொடையாகக் கொடுத்தாங்க.

இந்த நேரத்துல மேல்தளத்தில் எங்க இன்ஸ்டிட்யூட்டில், கொரோனா காரணமாக மாணவர்கள் நேரில் வருவது குறைந்து, ஆன்லைன் கிளாஸ் ஆரம்பிச்சது. அதனால, காலியாகக் கிடந்த வகுப்பறையைக் கிச்சனாக மாத்திட்டோம். தினமும் ஒரு கலவை சாதம். விசேஷ தினங்கள் மற்றும் யாராவது ஸ்பான்ஸர் செய்யும் தினங்களில் 2, 3 சாத வகைகள் வந்துடும். அதோடு கேசரி மாதிரி இனிப்பும் சேர்ந்துக்கும். இப்ப இந்தப் பகுதியில் லேபர்ஸ் பட்டினி கிடப்பது இல்லை. எல்லாமே சத்குரு சாயிநாதரின் லீலை!” என்கிறார் ராஜகோபாலன்.

விநாயகர்
விநாயகர்
சாயிபாபா பாதுகை
சாயிபாபா பாதுகைகோயிலில் வழங்கப்படும் பிரசாதத் துக்கும் அளவு இல்லை. தேவையான அளவு வாங்கிச் சாப்பிடலாம். பிரசாதத்தை வாழையிலையில் வைத்துக் கொடுக்கிறார்கள்.

“மார்க்கெட்டில் வாழையிலை கடை வச்சிருக்கும் ஒருத்தர்தான் இலைகளை இலவசமா கொடுக்கிறார். தனியார் கல்லூரி நிர்வாகம் ஒன்று வியாழக்கிழமைதோறும் அன்ன தானம் ஸ்பான்சர் செய்றாங்க. இப்படிப் பல நல்ல உள்ளங்களின் உதவியால் 5 வருடங்களாக எந்தவித இடையூறும் இல்லாமல் அன்னதானம் நடந்திட் டிருக்கு” என்கிறார் விஜய். கோயிலின் மேலாளர் ராமன், தான் இங்கே பணியில் சேர்ந்ததே பாபா நிகழ்த்திய அற்புதம்தான் என்கிறார்.

“கல்ஃபில் வேலை பார்த்துட்டிருந் தேன். திடீரென வேலை போய்ட்டதால் தாயகம் திரும்ப வேண்டிய நிலை. இங்கே தற்காலிகமாக ஒரு வேலையில் சேர்ந்தேன். வேலை நேரம் போக மீதி நேரங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து சர்வீஸ் பண்ணிட்டிருந்தேன். திடீர்னு கொரோனாவால் அந்த வேலையும் பறிபோனது. நான் உடைஞ்சுபோய் நின்ன நேரம்... ராஜகோபாலன் சார் என்னைக் கூப்பிட்டு, இங்கே என்னை மேலாளரா நியமிச்சார். பாபாவின் கருணை இது!” என்று நெகிழ்கிறார்.

பரபரப்பாக இருக்கும் தி.நகர் பகுதியில், சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ய ஏற்ற இடம் இந்த ஆலயம் என்கிறார்கள், பக்தர்கள். கோரிக்கைப் பெட்டியில் போடப்படும் பக்தர்களின் கோரிக்கைக் கடிதங்களை, வியாழக்கிழமைகளில் பாபாவின் பாதங்களில் வைத்து பூஜிக்கின்றனர். பாபா அருளால் பலருடைய கோரிக்கைகள் நிறைவேறி இருக்கின்றனவாம்.

பீகாரைச் சேர்ந்த பூசாரி ஒருவர் நியமிக்கப்பட்டு, தினசரி ஆரத்தி மற்றும் பூஜைகளை நியமத்துடன் நடத்திவருகின்றனர். பெளர்ணமிதோறும் சத்யநாராயணா பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

“இங்குள்ள பிள்ளையாரும் சக்தி மிகுந்தவர். சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இங்கே வந்து பூஜை யில் கலந்துகிட்டு, பிள்ளையாரை வேண்டிகிட்டுப் போனால், நினைச்ச காரியம் கட்டாயம் கைகூடி வருது..” என்று கூறுகிறார் ரமேஷ் என்னும் அன்பர்.

தி.நகர் சாயிபாபா கோயில்
தி.நகர் சாயிபாபா கோயில்
தி.நகர் சாயிபாபா கோயில்
தி.நகர் சாயிபாபா கோயில்

ஆனந்தி என்னும் பக்தை, “நான் ஒரு நாள் யதேச்சையாக, ‘பாபா காலில் கொலுசு இருந்தால் நல்லா இருக்குமே’ன்னு எனக்குள்ளே நினைச்சிட்டிருந் தேன். அடுத்த நாளே கோயிலுக்கு வந்தப்ப பூசாரி என்னிடம், ‘பாபாவுக்கு கொலுசு கொண்டு வந்திருக் கீங்களா’ன்னு கேட்டார். எனக்கு தூக்கி வாரிப் போட்டுச்சு. அப்புறம் நானே வாங்கிக் கொடுத்துட் டேன். என் பையன் இன்னிக்கு நல்லபடியா இருக்கான்னா அதுக்கும் இந்த பாபாதான் காரணம்!” என்கிறார்.

இப்படி பல்வேறு பக்தர்கள்... அனுபவங்கள்..!

பசித்தீயுடன் இருப்போருக்கு உணவளிக்கும் பாபா, பக்தர்களின் மற்ற துயரங்களையும் போக்கிடும் அதிசயமும் இங்கே நடக்கிறது.. நம்பிக்கையுடன் தொழுவோருக்கு ‘நான் இருக்கிறேன்’ என்று அபயக் கரம் நீட்டும் ஆபத்பாந்தவன் அல்லவா அந்த சச்சிதானந்த சொரூபம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism