Published:Updated:

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...
பிரீமியம் ஸ்டோரி
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

நம் பாரம்பர்யம் சார்ந்த கதைகளை அவர்களுக்கான நவீன வடிவில் சொல்லிப் புரியவைக்கவேண்டியது நம் கடமை

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

நம் பாரம்பர்யம் சார்ந்த கதைகளை அவர்களுக்கான நவீன வடிவில் சொல்லிப் புரியவைக்கவேண்டியது நம் கடமை

Published:Updated:
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...
பிரீமியம் ஸ்டோரி
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

ன்மிகம் நம் தேசத்தின் வேர். பல்லாயிரம் ஆண்டுக்கால பக்தி மரபைத் தன்வசம்கொண்ட பாரம்பர்யம் நம்முடையது. இதைத் தாங்கிப்பிடிப்பவை நம் குடும்ப அமைப்புகள். முன்பெல்லாம் குழந்தைகளாக இருக்கும்போதே வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டிகள் புராண இதிகாசக் கதைகளைச் சொல்லி ஆன்மிகச் சிந்தனைகளை விதைப்பார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர் களாகும்போது பாரம்பர்யம் மற்றும் ஆன்மிக நம்பிக்கை உள்ளவர்களாவார்கள். ஆனால், நவீன காலத்தின் சவால் நம் குடும்பங்களையும் விட்டுவைக்கவில்லை. கூட்டுக் குடும்பங்கள் கலைந்து, தனிக்குடித்தனங்களாகிவிட்டன. பெரும்பாலான வீடுகளில், கதைசொல்லி வளர்க்க தாத்தா பாட்டிகள் இல்லை. குழந்தைகள் சின்சானோடும், டோராவோடும் வளர்கிறார்கள். இவர்களுக்கு நம் பாரம்பர்யம் சார்ந்த கதைகளை அவர்களுக்கான நவீன வடிவில் சொல்லிப் புரியவைக்கவேண்டியது நம் கடமை.

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

இந்தச் சிந்தனை 1990-களில் காஞ்சிப் பெரியவர் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்குத் தோன்றியது. குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும்வகையில் கதைகளைக் காட்சிப்படுத்திவைக்க விரும்பினார். கொல்கத்தாவுக்கு ஒருமுறை விஜயம் அவர் செய்தபோது, அங்கு மின்சாரத்தால் இயங்கும் பகவான் கிருஷ்ணரின் பொம்மை ஒன்றைக் கண்டார். அது மிகவும் அழகாக இருந்ததோடு, சிறுசிறு அசைவுகளும் செய்து அவர் கவனத்தைக் கவர்ந்தது. உடனே சுவாமிகள் அந்தப் பொம்மையைச் செய்த கலைஞர்களிடம் பேசினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘இதேபோன்று அசையும் பொம்மைகளாக ராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆதிசங்கரர் வரலாறு ஆகிய பொக்கிஷங்களைக் காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும்’ என்ற ஆசையை வெளிப்படுத்தினார்.

சுவாமிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று அந்தக் கலைஞர்கள் குழு காஞ்சிபுரத்துக்கு வந்து சுமார் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி ஜயேந்திரரின் கனவை நிறைவேற்றினார்கள். அதுவே வேடலில் இன்றும் இருக்கும் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கரா கலை அருங்காட்சியகம். 1998-ம் ஆண்டு, இந்தக் கண்காட்சி மக்களின் பார்வைக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

சென்னையிலிருந்து சுங்குவார்சத்திரம் வழியாக காஞ்சிபுரம் செல்லும் சாலையில் (காஞ்சிபுரத்திலிருந்து 9 கி.மீ தொலைவு) அமைந்துள்ளது வேடல் கிராமம். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியே கண்காட்சி வளாகம் அமைந்துள்ளது.

வளாகத்தின் வாசலிலேயே பிரமாண்ட ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் விக்கிரகமும் அவருக்கு முன்பாக நந்திதேவரின் திருவுருவமும் அமைந்துள்ளன. ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் சுமார் 65 அடி உயரத் திருமேனியராகக் காட்சியளிக்கிறார். கைகளில் மானும் மழுவும் தாங்கி சடையில் பிறைச் சந்திரனைச் சூடி அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிரே 45 அடி உயர பிரமாண்ட தத்ரூபத் திருமேனியராய்க் காட்சியளிக்கிறார் நந்தி.

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் விக்கிரகத்துக்குக் கீழே அஷ்டதிக் பாலகர்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். தஞ்சை பெரியகோயிலுக்கு அடுத்து விசேஷமாக அஷ்டதிக் பாலகர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் தலம் இது என்கிறார்கள். ஒவ்வொரு பிரதோஷத்தின்போதும் இங்கு சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடை பெறுகின்றன.

சிவனை வழிபட்டு அருங்காட்சியகத்துள் நுழைகிறோம். உள்ளே காஞ்சி மடத்தின் ஆசார்யர்கள் மூவரும் கைகளை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தபடி காட்சியளிக்கிறார்கள். தத்ரூபமான அந்த தரிசனத்தைக்கண்டு மெய்சிலிர்த்தபடி அடுத்தடுத்த காட்சிகளைக் காண நகர்கிறோம்.

முதலில் ராமாயணக் காட்சிகள். பாலகாண்டத் திலிருந்து பட்டாபிஷேகம் வரையிலான ராமாயண நிகழ்வுகள், அசையும் பொம்மைகளால் சித்திரிக்கப்பட்டுள்ளன. ராமரின் வில்லிலிருந்து அம்பு புறப்பட்டு சீறிப்பாய்ந்து ராவணனின் தலையைக் கொய்யும் காட்சி பிரமிப்பூட்டுகிறது.

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

ராமாயணத்தை அடுத்து மகாபாரதக் காட்சிகள், கிருஷ்ணாவதாரக் காட்சிகள் காண்போரின் கருத்தைக் கவர்கின்றன. குறிப்பாக வசுதேவர் குழந்தையைத் தூக்கிக்கொண்டுபோகும் காட்சி, குட்டிக் கிருஷ்ணனின் அழகு, ராட்சசர்கள் குழந்தையைக் கொல்லவந்து தோற்கும் காட்சிகள் என அத்தனையும் எழில்கொஞ்சும் அழகுடன் வடிக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரரின் வாழ்வைச் சித்திரிக்கும் காட்சிகள் சிலிர்ப்பூட்டும் விதமாக அமைந்துள்ளன. பொம்மைகளின் அசைவுகள் காட்சிகளை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றுகின்றன.

இந்த அருங்காட்சியகத்தின் முக்கியப் பகுதி மகா பெரியவரின் புகைப்படக் காட்சியாகும். அவர் பயன்படுத்திய பொருள்களின் வரிசைகள், இளம் வயதில் சந்நியாசம் பெற்றுக்கொண்டது முதல் அவர் மகா சமாதியானது வரையிலான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு புகைப்படத்தையும் கண்டு லயிக்கும் பக்தர்கள், அகல மனமின்றி அடுத்ததுக்கு நகர்கிறார்கள். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இங்குள்ளன.

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

இந்த வளாகத்தில் வேத பாடசாலையும் கோ சாலையும் உள்ளன. பசுக்களுக்கான தீவனங்கள் ஆர்கானிக் முறையில் இங்கேயே பயிர் செய்யப்படுகின்றன. பசுக்களும் ஆரோக்கியமான முறையில் பராமரிக்கப்படுகின்றன. இங்கு 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களையும் நட்டு வளர்க்கிறார்கள். இந்த வளாகத்தைப் பராமரித்து வரும் கிருஷ்ணனிடம் பேசினோம்.

ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...
ராமாயணம் முதல் மகா பெரியவா வரை...

“இந்த அருங்காட்சியகம், வரும் தலைமுறைக்கு ஆன்மிகம் போய்ச்சேரணும் என்கிறதுக்காக பெரியவாளோட (ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்) முயற்சியில் உருவானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் காட்சியில் இருந்த சில சாதனங்கள் பழுதாகிவிட்டன. இப்போது அவற்றைச் சரிசெய்து புதுப்பித்திருக்கிறோம். சுற்றுலாப் பயணிகள் இதைக் கண்டு மகிழ்வதோடு கோசாலை, பாடசாலை ஆகியவற்றைப் பராமரிக்கும் பணிகளிலும் பங்கெடுக்கிறார்கள்” என்றார்.

அழிவுறாது நம் மதம் நிலைத்திருக்கக் காரணம், நம் பெரியவர்களின் காலத்துக்கேற்ற சிந்தனையும் செயல் பாடுகளுமே. அப்படி ஓர் அற்புத சிந்தனை உருக்கொண்டிருக்கும் இடமே, வேடல் சங்கரா கலை அருங்காட்சியகம். நீங்களும் ஒருமுறை உங்கள் குழந்தைகளோடு சென்று பார்வையிட்டு அருளையும் மகிழ்வையும் பெற்று வாருங்கள்.

திறந்திருக்கும் நேரம் : காலை 9 முதல் மாலை 5 மணி வரை.

எப்படிச் செல்வது ?: சுங்குவார்சத்திரத்திலிருந்து காஞ்சிபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், `எல்&டி' தொழிற்சாலைக்கு அருகில் உள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 9 கி.மீ தொலைவு.

சர்வ யக்ஞ பீடம்!

திசங்கரர் யாகம் செய்த இடம் கொல்லூர் - குடகாத்திரி மலை. இதன் உச்சியில் உள்ள சிறிய கருங்கல் மண்டபத்தில் ஆதிசங்கரர் உலக நலனுக்காக பல யாகங்கள் செய்தார். அந்த இடம் ‘சர்வ யக்ஞ பீடம்’ எனப் படுகிறது.

இங்கிருந்து மேற்குப் பக்கம் உள்ள மலைச்சரிவின் கீழே ஒரு கி.மீ தூரம் சென்றால், ஒரு குகை உள்ளது. இந்தக் குகையிலும் ஆதிசங்கரர் தவம் செய்திருக்கிறார். இது ‘சித்திர மூலைக் குகை' என வழங்கப்படுகிறது.

- சக்தி.விண்மணி, போடி