Published:Updated:

நாச்சியார் கோவிலில் இன்று கருடசேவை கோலாகலம்... இத்தலத்தின் சிறப்புகள் என்னென்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நாச்சியார் கோயிலில் இன்று கருடசேவை
நாச்சியார் கோயிலில் இன்று கருடசேவை

நாச்சியார் கோயிலில் இன்று கருடசேவை - கோலாகலமாய் நடைபெறுகிறது.

கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார் கோயிலில் இன்று கருட சேவை மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோயிலின் மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீவாசுதேவனாக திருமணக் கோலத்தில் ஸ்ரீ வஞ்சுளவல்லித் தாயாருடன் அருள் பாலிக்கிறார். இங்கு சகல மரியாதைகளும் முதலில் நாச்சியாருக்குத்தான். பெருமாளும் நாச்சியாரும் ஒரே சந்நிதியில் எழுந்தருளியிருப்பது இங்கு தனிச் சிறப்பாகும்.

ஒரு சமயம், மேதாவி என்ற முனிவர் திருமகள் தனக்கு மகளாகவும், ஸ்ரீமன் நாராயணன் தனக்கு மருமகனாகவும் அமைந்திட வேண்டும் என விரும்பித் தவம் செய்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, திருமகள் குழந்தை உருவெடுத்து இத்தலத்தில் அவதரித்தார். அழகேயான அந்தக் குழந்தையை முனிவர் எடுத்து வளர்க்கலானார். குழந்தையும் திருமணப் பருவம் எட்டியது. அப்போது கருடாழ்வார் லட்சுமிதேவி இங்கு வஞ்சுளவல்லியாக வளர்வதை நாராயணனிடம் தெரிவித்தார். முனிவரின் ஆசிரமம் சென்ற. வாசுதேவன் திருமகளின் கரம் பிடித்தார். முனிவர்க்கு தரிசனம் தந்தார்.

நாச்சியார்கோயிலில் இன்று கருடசேவை
நாச்சியார்கோயிலில் இன்று கருடசேவை

தன் தவம் பலித்த மகிழ்ச்சியில் முனிவர் ஐயனிடம், "பெருமானே, எனக்கு நீர் தரிசனம் தந்ததுபோல் இத்தலத்தில் யாவரும் தரிசிக்கும் வண்ணம் என்றென்றும் அருள்புரிய வேண்டும். எனது மகளாய் வளர்ந்த வஞ்சுளவல்லியின் பெயராலேயே இத்தலம் அழைக்கப்படவேண்டும். இத்தலம் வந்து உம்மை தரிசிப்பவர் அனைவருக்கும் முக்தி தர வேண்டும்” என வரங்கள் கேட்டார்.

பரந்தாமனும், "அவ்வாறே ஆகட்டும்" எனக்கூறி முனிவருக்குக் காட்சி தந்த கோலத்திலேயே இத்தலக் கருவறையில் அருள்பாலிக்கிறார். பெருமாள் - வஞ்சுளவல்லி திருமணம் நடந்தேறியது. பெருமானின் திருமணத்திற்கு உதவிய கருடாழ்வாருக்கும் நாச்சியார்கோயிலில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாகச் செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை.

இந்த கருடனை தூக்கிச் செல்ல முதலில் 4 பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும்போது, 8, 16 என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கிச் செல்ல நேரிடுமாம். திரும்பும்போது அதே போல் குறைந்து கொண்டு வந்து 4 பேர் மட்டும் சென்று கருடனை அதன் சந்நிதியில் அமர்த்துவார்களாம். வியக்க வைக்கும் இந்த ஆலய அதிசயம் இது.

நாச்சியார்கோயிலில் இன்று கருடசேவை
நாச்சியார்கோயிலில் இன்று கருடசேவை

இத்தலத்தில் பிரசித்தமான 'கருட சேவை' இன்று நடைபெறுகிறது. இன்றைய நாளில் இவருக்குரிய கஸ்தூரி, குங்குமப்பூ, புனுகுச்சட்டம் முதலியவைகளை வாழை இலையில் கலந்து இவரது திருமேனியில் சாத்தி வழிபடுபவர்கள் அனைத்துவித இஷ்ட ஸித்திகளையும் பெறுவர் என்பது ஐதிகம்.

இவருக்குப் பட்டு முதலிய வஸ்திரங்களைச் சார்த்த நினைத்தவை நடந்திடும். ஆடி மாத சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்க மகப்பேறு கிடைக்கும். மணமாகாத, திருமணம் தடைபட்டு வரும் கன்னிப் பெண்களுக்குத் திருமணம் கை கூடும். இவரது ஜன்ம நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் இவரை அர்ச்சிப்பது மிகச் சிறந்த பலனைத் தரும் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு