திருத்தலங்கள்
Published:Updated:

`பீமா சங்கர் ' ஜோதிர் லிங்க தரிசனம்!

ஶ்ரீபீமாசங்கரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீபீமாசங்கரர்

புனே அருகில் அற்புதங்கள் நிறைந்த சிவாலயம் படங்கள்: கோவிந்தன் சேவன்

புண்ணிய ஸ்தலங்களால் புகழ்பெற்ற மகாராஷ்டிர மாநிலத்தில் பழைமை வாய்ந்த சிவாலயங்கள் அதிகம். புராணங்களும் ஞான நூல்களும் சிறப்பித்துக் கொண்டாடும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் 3 தலங்கள் மகாராஷ்டிராவில் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் புனே அருகிலுள்ள பீமாசங்கர் திருத்தலம்.

`பீமா சங்கர் '
ஜோதிர் லிங்க தரிசனம்!

யற்கை எழிலார்ந்த சஹாத்ரி மலைப் பகுதியில் தாழ்வான இடத்தில், விருட்சங்கள் பல சூழந்துதிகழ அற்புதமாக அமைந்திருக்கிறது பீமாசங்கர திருத்தலம். தினம் தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

னிமூட்டம் அதிகம் உள்ள பகுதி இது. சில நாள்களில் - மாலை 5 மணிக்கு மேல், எதிரில் உள்ளவரையும் பார்க்கமுடியாதபடி பனி மூடிவிடுமாம். அப்போது தூரத்தில் இருந்து இந்த இடத்தைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கும். அதேபோல், மழைக் காலத்தில் மலைகளிலிருந்து விழும் அருவிகளின் சத்தம் பக்தர்களின் காதில் விழுந்துகொண்டே இருக்கும்!

லைப்புறத்திலிருந்து வரும் பீமாநதி இத்தலத்தின் வழியே பாய்ந்து கிருஷ்ணா நதியுடன் கலக்கிறது. சிவாலயத்தையொட்டி மோட்ச குண்டம் ஒன்று உள்ளது. இது மிகவும் புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில், தன் சீடர்களுடன் கெளசிக முனிவர் வாழ்ந்து வந்தார். இவரின் சீடர்களில் ஒருவர் ருச்சிக். இவருடைய முன்னோர்களில் பலர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் மோட்சகதி பெற உதவும்படி தன் ஆசார்யரைக் கேட்டுக்கொண்டார். உடனே கெளசிக முனிவர், தன் கமண்டல தீர்த்தத்தை எடுத்து பீமா நதியின் மீது தெளித்தார். அந்த இடத்தில் ஒரு குண்டம் உருவானது. அதில் நீராடினால் மோட்சம் கிட்டும் என்று சீடனுக்கு அருள்பாலித்தார் கெளசிக முனிவர். ஆகவே, இந்தக் குண்டம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

மோட்ச குண்டத்தைத் தாண்டினால் ராமர் கோயில் இருக்கிறது. அங்கு ராமர் சீதையுடன் வீற்றிருக்கிறார்.

`பீமா சங்கர் '
ஜோதிர் லிங்க தரிசனம்!

ந்தத் தலத்துக்கு வரும் பக்தர்கள் வாகனங்களிலிருந்து இறங்கியதும் சிறிது தூரம் படிக்கட்டுப் பாதை வழியே சென்றால், சற்றுத் தாழ்வாக அமைந்திருக்கும் கோயிலை அடையலாம். கோயிலில் மூலவர் பீமா சங்கரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

ப்போது நாம் தரிசிக்கும் ஆலயம், 13-வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. 18-ம்நூற்றாண்டில் மராத்திய மன்னர் நானாபட்நவிஸ், கோயில் கோபுரம் மற்றும் மண்டபத்தைக் கட்டினாராம்.

ந்தக் கோயிலின் புராணம் குறித்து பல கதைகள் உண்டு. சஹாத்ரி மலையில் `தகினி’ என்ற இடத்தில் கும்பகர்ணனின் மனைவியான கர்கதி, தன் மகன் பீமாவுடன் வசித்தாள். விஷ்ணுவின் அவதாரமான ராமனால் தன் தந்தை அழிக்கப்பட்டார் என்பதை அன்னையின் மூலம் அறிந்த பீமா, மகாவிஷ்ணுவைப் பழிவாங்க எண்ணினான்.

டும் தவமிருந்து பிரம்மனிடம் அரிய வரங்களைப் பெற்றான். வரத்தின் பலனால் வலிமைப் பெற்றவன் முனிவர்கள், சிவபக்தர்களைக் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். ஒருநாள், வனத்தில் கமருபேஷ்வர் என்ற சிவபக்தரைக் கண்டவன், `இனி முதல் எம்மையே வழிபட வேண்டும்’ என்று வற்புறுத்தினான். அவர் இணங்கவில்லை. ஆகவே அவர் வழிபட்டுக்கொண்டிருந்த லிங்க மூர்த்தத்தை வாளால் தாக்கி அழிக்க முற்பட்டான். அக்கணத்தில் அதிலிருந்து தோன்றிய சிவனார் பீமாவைச் சாம்பலாக்கினார். பின்னர் முனிவர்கள் தேவர்களின் வேண்டுகோள்படி அங்கேயே கோயில்கொண்டாராம்.

`பீமா சங்கர் '
ஜோதிர் லிங்க தரிசனம்!

யுத்தத்தின்போது சிவனாரின் மேனியில் வழிந்த வியர்வையே பீமா நதியானது என்பது நம்பிக்கை. இதைச் சந்திரபாகா என்றும் அழைக்கிறார்கள். இதில் நீராடி, பீமாசங்கரை தரிசித்தால் நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மூலவர் பீமாசங்கர் லிங்கத் திருமேனியின் அருகில் சென்று பக்தர்களே தொட்டுப் பூஜிக்கவும் அபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு. பக்தர்கள் பலரும் பாலாபிஷேகம் செய்தும் பூ மற்றும் வில்வம் சமர்ப்பித்தும் வணங்கிச் செல்கிறார்கள்.

ருவறையில் பார்வதி தேவியின் அழகிய சிலையையும் தரிசிக்கலாம். அதேபோல், கருவறையில் கண்ணாடி ஒன்றை வைத்துள்ளனர். வெளியே இருக்கும் பக்தர்கள் இந்தக் கண்ணாடி மூலமாகவும் மூலவரைத் தரிசிக்க முடிகிறது.

பீமாசங்கரரை தரிசித்துவிட்டு வெளியே வந்தால் எதிரிலேயே காக வாகனத்தில் அமர்ந்திருக்கும் சனீஸ்வரரை தரிசிக்கலாம். இவரின் அருகிலும் ஒரு சிவலிங்கமும் அம்மனும் காட்சி தருகின்றனர். ராட்சத கல் விளக்கு ஒன்றும் காணப்படுகிறது. இந்த ஆலயத்தில் நந்திதேவர், வெளியே உயரமான பகுதியில் இருந்து மூலவரை தரிசித்துக் கொண்டிருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளார்.

`பீமா சங்கர் '
ஜோதிர் லிங்க தரிசனம்!

ங்கு வரும் பக்தர்கள் பீமாசங்கரரையும் மற்ற தெய்வங்களையும் வழிபட்டுவிட்டு மோட்சக் குண்டத்திற்குச் செல்லவேண்டும். அங்கே பக்தர்கள் மோட்ச குண்டத்தில் தங்களின் பாதங்களை நனைத்துக் கொண்டும் தீர்த்த நீரை தலையில் தெளித்துக்கொண்டும் பிரார்த்தனை செய்கின்றனர். இதனால் பாவங்கள் தொலையும்; புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கை.

பீமாசங்கர் கோயிலுக்குப் புனே நகரிலிருந்து மட்டுமே செல்ல இயலும். மும்பை அருகில் உள்ள கர்ஜத் எனும் இடத்திலிருந்து மலைப் பாதை வழியாகவும் செல்லலாம். ஆனால் அது ஆபத்தானது என்கிறார்கள். புனே - சிவாஜி நகர் அரசுப்பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மினிபஸ் இயக்கப்படுகிறது. இங்கிருந்து கோயிலுக்குச் செல்ல, மலைப்பாதையில் சுமார் 125 கி.மீ. தூரம் - 4 மணி நேரம் பயணிக்க வேண்டும்.

ராத்தியர்களின் ஸ்ராவன் மாதத்தில் அதாவது விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அதிகப்படியான பக்தர்கள் வருகை தருவார்கள். மழைக்காலத்தில் செல்வதைத் தவிர்க்கலாம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சென்றால் பனிமலைப் பிரதேசங்களில் உள்ளதுபோன்று ரம்மியமான அனுபவத்தைப் பெறலாம்.

மிழகத்தில் இருந்து செல்பவர்கள் ரயில், விமானம் மூலம் புனே சென்று அங்கிருந்து பீமாசங்கர் தலத்துக்குச் செல்லலாம். ஷீர்டி பயணத்தோடு இந்தப் பயணத்தையும் திட்டமிடலாம். பீமாசங்கரில் இருந்து மாலை 5 மணிக்குப் பிறகு பஸ் வசதி கிடையாது. எனவே அதற்கு தக்கபடி பயணத்திட்டம் அமைவது சிறப்பு.