Published:Updated:

கண்ணகி தரிசனம்!

கண்ணகி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணகி கோயில்

கண்ணகி கோயில் திருவிழா

கண்ணகி தரிசனம்!

கண்ணகி கோயில் திருவிழா

Published:Updated:
கண்ணகி கோயில்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணகி கோயில்

மேற்குத்தொடர்ச்சி மலை தமிழக -கேரள எல்லையில், விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது சிலப்பதிகார நாயகியாம் கண்ணகியின் கோயில். கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,500 அடி உயரத்தில் இயற்கை எழில்கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

கண்ணகி தரிசனம்!

ண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று கண்ணகிதேவிக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன. கொரோனா நோய் பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நடை பெறாமல் இருந்த திருவிழா, இந்த ஆண்டு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மதுரையை எரித்த கண்ணகி இந்த வனப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள். இங்கிருந்த ஒரு வேங்கை மரத்தின் அடியில் அமர்ந்து, தனக்கு ஏற்பட்ட சோகத்தை எண்ணியபடி மனம் வருந்தியபடி இருந்தாளாம். 14 நாள்கள் இங்ஙனம் அவள் தங்கியிருக்க, இப்பகுதியில் வாழ்ந்த குறவர் இன மக்களின் நடனமும் பாட்டும் கவலையை மறக்க அவளுக்குச் சற்றே உதவின. 14-ம் நாள் மாலை விண்ணில் இருந்து புஷ்பக விமானத்தில் வந்து இறங்கிய கோவலன், கண்ணகிக்கு மங்கல நாண் அணிவித்து, தன்னுடன் அழைத்துச் சென் றான். எனவேதான் இளங் கோவடிகள், கண்ணகியை `மங்கல மடந்தை’ என்று குறிப் பிட்டிருக்கிறார். இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், கண்ணகியின் கற்புத் திறனை எண்ணி வியந்தனர்.

கண்ணகி தரிசனம்!

இந்த அற்புதத்தை மன்னன் சேரன் செங்குட்டுவனிடமும் தெரிவித்தார்கள். கண்ணகியின் கற்புத் திறனைக் காலமெல்லாம் போற்றும்படிச் செய்ய விரும்பிய மன்னன், வடதேசத்துக்குச் சென்று கனக விசயர்களை அடக்கி, இமயத்திலிருந்து கொண்டு வந்த கல்லைக் கொண்டு இப்போது இருக்கும் இடத்தில் கண்ணகிக்குக் கோயில் கட்டினார் என்பது இக்கோயிலின் வரலாறு.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன்பு வரையிலும் மங்கலதேவி கண்ணகி கோயிலில் பௌர்ணமி, நவராத்திரி, சிவராத்திரி, தமிழ் மற்றும் கேரள வருடப்பிறப்பு என வருடத்தில் 24 நாள்கள் திருவிழாக்கள் நடந்திருக்கின்றன. ஆனால் தற்போது சித்திரா பௌர்ணமி அன்று மட்டுமே சென்று வழிபட பக்தர் களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு வழிபாட்டுக்கு இரு மாநிலங் களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந் தனர். கேரளாவின் குமுளி வழியாகவும் தமிழகத்திலிருந்து தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பளியங்குடியில் உள்ள வில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதி மார்க்கமாகவும் பக்தர்கள் கண்ணகி் கோயி லுக்கு வந்து சேர்ந்தனர்.

மங்க தேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட தேவி கண்ணகி பச்சை நிறப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணகி அம்மனை வழிபட்டனர். மங்கல தேவி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism