Published:Updated:

குலம் தழைக்க அருள் தருவார் குலசேகரநாதர்!

காருகுறிச்சி சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
காருகுறிச்சி சிவாலயம்

காருகுறிச்சி சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு சாய் கார்த்திக், மதுரை

குலம் தழைக்க அருள் தருவார் குலசேகரநாதர்!

காருகுறிச்சி சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு சாய் கார்த்திக், மதுரை

Published:Updated:
காருகுறிச்சி சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
காருகுறிச்சி சிவாலயம்

திருநெல்வேலி - பாபநாசம் செல்லும் சாலையில் சுமார் 26 கி.மீ. தூரத்தில் உள்ள ஊர் காருகுறிச்சி. இத்தலம் காரான்குறிச்சி என்ற பெயர் பெற்று அதுவே மருவி தற்போது காருகுறிச்சி என விளங்குகிறது. மேலும் பிரபல நாகஸ்வர மேதையான அருணாசலம் இவ்வூரில் பிறந்து தன் இசையால் பல பெருமைகளை தேடித்தந்துள்ளார் என்ற சிறப்பும் உண்டு.

குலம் தழைக்க அருள் தருவார் குலசேகரநாதர்!

சிறப்புமிக்க இவ்வூரில், அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேதராகக் கோயில் கொண்டுள்ளார் ஶ்ரீகுலசேகரநாத சுவாமி. கி.பி.655-ம் ஆண்டு இங்கு ஆட்சி செய்த பூதல வீர உதய மார்த் தாண்டன் என்ற மன்னர் கருத்து வேறுபாடின் காரணமாக தன் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். தன் குலம் தழைக்க குலசேகர நாதரை மனமுருகி பிரார்த்தனை செய்தார். பின்பு மன்னர் மேற்கொண்ட கார்த்திகை சோமவார விரதத்தின் பயனாக பிரிந்த தம்பதி மீண்டும் இணைந்து அவர்கள் குலம் தழைக்க குழந்தை வரம் தந்து அருளினார் சுவாமி.

மன்னர் வம்சம் விருத்தியாக அருளியதால் சுவாமிக்கு `வம்ச விருத்தீஸ்வரர்' என்ற பெயரும் உண்டு. மிகச் சிறந்த வரப்பிரசாதியும் பெருங்

கருணை நாயகியுமான இத்தலத்து இறைவி ஶ்ரீ சிவகாமி அம்பாள், வலக்கரத்தில் மலர் ஏந்தி இடக்கரம் தொங்கவிட்ட நிலையில் அருள்பாலிக்கிறாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குலம் தழைக்க அருள் தருவார் குலசேகரநாதர்!

களத்திர தோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஶ்ரீகுலசேகர நாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் ஶ்ரீசிவகாமி அம்பாளையும் ஒரு இடத்தில் நின்றபடி மனமுருகி வழிபட்டால் விரைவில் தோஷம் நீங்கும்; நல்லது நடக்கும்.

குழந்தையின்றி தவிக்கும் தம்பதிகள் தங்கள் பெயர், நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் சுவாமி, அம்பாளின் பரிபூரண அருளால் குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம். மேலும் கருத்து வேறுபாடின் காரணமாக பிரிந்த தம்பதிகள் வந்து வழிபட்டால், விரைவில் அவர்கள் இணைந்து விடுகின்றனர் என்பதும் நம்பிக்கை.

அற்புதமான இந்தத் தலத்தில் வரும் 14.2.22 திங்கள் அன்று 1008 தீப ஒளியின் மத்தியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் கலந்துகொண்டு ஶ்ரீகுலசேகரநாதரையும் அம்பாளையும் வழிபட்டு குலம் செழிக்க வரம் பெறலாம்.