Published:Updated:

கதிர்காமம் முருகனுக்கு ஆடிப் பெளர்ணமித் திருவிழா!

கதிர்காமம் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
கதிர்காமம் திருவிழா!

இலங்கை தரிசனம் படங்கள்: என்.கார்த்திக்

கதிர்காமம் முருகனுக்கு ஆடிப் பெளர்ணமித் திருவிழா!

இலங்கை தரிசனம் படங்கள்: என்.கார்த்திக்

Published:Updated:
கதிர்காமம் திருவிழா!
பிரீமியம் ஸ்டோரி
கதிர்காமம் திருவிழா!

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து 228 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கதிர்காமம். இங்குள்ள பழைமையும் பெருமையும் வாய்ந்த முருகப்பெருமான் கோயிலில், ஆடி மாதம் பௌர்ணமி நாளில் நடைபெறும் திருவிழா மிகவும் முக்கியமானது!

கதிர்காமம் முருகனுக்கு  
ஆடிப் பெளர்ணமித் திருவிழா!

இங்கு முருகப்பெருமானின் சந்நிதியில் விக்ரகம் ஏதும் இல்லை. முருகன் வள்ளி தேவசேனாவுடன் மயில் மீது ஏறிவரும் திருக்கோலம் தாங்கிய ஒரு திரை மட்டுமே உள்ளது. பக்தர்கள் அதைத்தான் தரிசனம் செய்துவருகிறார்கள். திரைக்குப் பின்னே முருகப்பெருமானுக்குரிய ஷடாக்ஷர யந்திரம் வைக்கப்பட்டிருக்கும் பேழை ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதுவும், பக்தர்கள் காண்பதற்கு அனுமதியில்லை. இந்தத் தலத்தில்தான் முருகப்பெருமான் வள்ளியைக் கண்டு காதல் மணம் புரிந்தார் என்கிறது தலபுராணம். இங்கே வள்ளி அம்மனுக்கும் தேவயானை அம்மனுக்கும் தனித் தனி சந்நிதிகள் உள்ளன. அச்சந்நிதிகளிலும் விக்ரகங்கள் இல்லை. மாறாகத் திரைகளே காணப்படுகின்றன.

கதிர்காமம் முருகன் கோயில் திரைச் சீலை!
கதிர்காமம் முருகன் கோயில் திரைச் சீலை!
கதிர்காமம் - யானையின் அலங்காரப் பவனி
கதிர்காமம் - யானையின் அலங்காரப் பவனி

அற்புதமான கதிர்காமம் முருகன் ஆலயத்தில், அழகன் முருகனுக்கு ஆடிப்பௌர்ணமியை ஒட்டி நடைபெறும் திருவிழா அற்புதமானது. சுமார் ஐந்து லட்சம் பேர் கூடும் இந்தத் திருவிழாவில் நடைபெறும் பெரேஹரா எனப்படும் ஊர்வலம் மிக பிரமாண்டமாக இருக்கும். அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாரம்பர்ய நடனங்கள், பாரம்பர்ய வாத்தியங்கள், வீர விளையாட்டுகள் என இரண்டு மூன்று கி.மீ. தூரத்துக்கு ஊர்வலம் நீளும். இந்தக் கண்கவர் ஊர்வலம் மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை நீளும். வண்ண மயமான இந்த ஊர்வலத்தை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு களிப்பார்கள்.

கதிர்காமம் வழிபாடு
கதிர்காமம் வழிபாடு

இந்தத் திருவிழாவின்போது, கருவறையில் முருகப்பெருமானின் யந்திரம் இருக்கும் பேழையை வெளியே கொண்டுவந்து யானை மீது வைத்து ஊர்வலமாகக் கொண்டுவருவர். இதைத் தரிசிப்பது புண்ணியம் எனக் கருதி, தரிசித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்!

இந்தத் திருவிழாவுக்காக உலகெங்கிலும் இருந்து தமிழ் மக்கள் கதிர்காமத்துக்கு வருவார்கள். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வாழும் மக்கள், ஒரு மாத காலம் பாத யாத்திரையாக வந்து முருகனுக்குக் காவடி எடுத்தல், அலகு குத்துதல், அக்கினிச் சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களைச் செலுத்துகிறார்கள்.