Published:Updated:

அலை வடிவில் கடல் தேவதைகள் வழிபடும் ஈஸ்வரன்!

தரங்கம்பாடி தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
தரங்கம்பாடி தரிசனம்

தரங்கம்பாடி சிவாலயம்

அலை வடிவில் கடல் தேவதைகள் வழிபடும் ஈஸ்வரன்!

தரங்கம்பாடி சிவாலயம்

Published:Updated:
தரங்கம்பாடி தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
தரங்கம்பாடி தரிசனம்

கிழக்குக் கடற்கரையின் ராணி, அலைபாடும் நகரம், தமிழில் அச்சு இயந்திரத்தை முதலில் பயன்படுத்திய ஊர், வரலாற்றுச் சின்னமான டேனிஷ்கோட்டையால் புகழ்பெற்ற ஊர்... இத்தகைய பல சிறப்புகளைக் கொண்டது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள தரங்கம்பாடி.

அலை வடிவில் 
கடல் தேவதைகள் வழிபடும் ஈஸ்வரன்!

வ்வூருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது, கடலோரம் அமைந்துள்ள ஶ்ரீஅறம் வளர்த்தநாயகி சமேத ஶ்ரீமாசிலாநாதர் கோயில். முற்காலத்தில் இவ்வூர் ‘அளப்பூர்’ என்று அழைக்கப்பட்டது. `அளம்' என்றால் உப்பளத் தைக் குறிக்கும். இக்கோயிலுக்குச் சொந்தமாக பல உப்பளங்கள் இருந்தன. அதனால் அளப்பூர் என்ற பெயர் ஏற்பட்டதாம்.

வேதங்களின் அங்கங்களுக்கு மூலம் இறைவனே ஆதலால் இவ்வூருக்கு அரங்கன்பாடி என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். அதுவே ‘தரங்கம்பாடி’ என்று மருவியது எனச் சொல்வோரும் உண்டு.

அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற இந்தக் கோயிலைச் சிவபக்தனான குலசேகர பாண்டியன் கட்டியதாக வரலாறு. இந்த மன்னன், தன் கனவில் கிடைத்த உத்தரவுப்படி இந்த நகரை நிர்மாணித்துக் கோயிலையும் கட்டினான் என்கிறது தலவரலாறு.

கோயிலின் கட்டுமானம் தனித்துவம் வாய்ந்தது. தமிழ் பாணியுடன் சீனப் பாணியும் இணைத்துக் கட்டப்பட்டிருக்கிறது என்கிறார்கள். காலப்போக்கில் இந்தக் கோயில் கடல் சீற்றங்களால் மெள்ள மெள்ள சிதிலமடைந்து இடிபாடுகளுக்கு உள்ளானது. எனினும் மூலவர் மாசிலாநாதர் மற்றும் அறம் வளர்த்த நாயகி ஆகியோரின் திருமேனிகள் சிறிதும் பங்கமின்றி பொலிவுடன் திகழ்வது இறை அதிசயம்தான்.

கடலோரத்தில் சிவாலயம் அமைந்திருப்பதே சிறப்பு. அதிலும் ஈசன் கிழக்கு நோக்கி அருள்வதால், மிகவும் விசேஷத் தன்மையும் திகழ்கிறது இந்த ஆலயம். கடல் தேவதைகளே அலைகளாக மாறி வந்து இந்த ஈசனை இடைவிடாது வணங்குவதாக ஐதிகம். ஆகவே புயல் சூறாவளி என எது நிகழ்ந்தாலும் கருவறையில் எவ்வித பாதிப்பும் உண்டாகாது, காற்றின் சீற்றம் கருவறைக்குள் இருக்காது. 2004-ல் கடலோரக் கிராமங்களைக் கபளீகரம் செய்து, பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பறித்த ஆழிப்பேரலைகளாலும் இந்த மூலவர் சந்ததியை அசைக்க முடியவில்லை என்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

ஶ்ரீமாசிலாநாதர் கோயில்(ஆதி மூலவர்)
ஶ்ரீமாசிலாநாதர் கோயில்(ஆதி மூலவர்)
ஶ்ரீஅறம் வளர்த்தநாயகி
(ஆதி அம்பாள்)
ஶ்ரீஅறம் வளர்த்தநாயகி (ஆதி அம்பாள்)

மூலவர் சந்நிதியைத் தவிர ஆலயத்தின் பிற பாகங்கள் பெரும்பாலும் சிதலமடைந்து இடிபாடுகளுக்கிடையே கடலில் கிடக்கின்றன. சில வருடங் களுக்குமுன் காஞ்சி சங்கராசார்ய சுவாமிகள் தலைமையிலான குழுவின் ஆலோசனைப்படி, இதன் அருகிலேயே புதிதாகக் கோயில் கட்டி இங்குள்ள சிலைகளை அங்கு எழுந்தருளச் செய்தார்களாம். அப்போதும் இக்கோயில் மூலவரையும், அம்பாளையும் இடம் பெயர்க்க முடியவில்லையாம்.

எனவே அங்கு வேறு சிலைகளைப் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார்கள். பழைய கோயிலில் இன்றும் இந்த மூலவருக்கும், அம்பாளுக்கும் வழிபாடுகள் தொடர்கின்றன.

புதிய கோயிலில் விநாயகர், தேவியருடன் அருளும் முருகப்பெருமான், அகிலாண்டேஸ்வரி, மகாலட்சுமி, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பைரவர், நந்திகேஸ்வரர், நவகிரகங்கள் ஆகியோரை தரிசிக்கலாம். சூரியன், சந்திரன், சனிபகவான் ஆகியோர் தனிச் சந்நிதிகளிலும் அருள்கிறார்கள்.

ஶ்ரீஅறம் வளர்த்தநாயகிஶ்ரீமாசிலாநாதர் கோயில்கோயில் குருக்கள் ஹரிமோகனிடம் பேசினோம்.

“கடலோரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு இணையான தலம் இது. அங்கு ஈசன் மேற்கு நோக்கி அருள்வார். இங்கோ கிழக்கு நோக்கி அருள்கிறார். விசேஷ அம்சம் இது. சர்வ தோஷ நிவர்த்தித் தலம் இது.

இங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், வேண்டிய பலன் கிட்டும். இங்குள்ள துர்கைக்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

படிப்பு, பதவி, திருமணம், புத்திரப் பாக்கியம் ஆகிய வரங்களை வேண்டும் அன்பர்கள், இந்தக் கோயிலுக்கு வந்து 21 தீபங்கள் ஏற்றிவைத்து, 21 முறை வலம் வந்து மனம் உருகிப் பிரார்த்தித்துக் கொண்டால் கேட்ட வரங்கள் கேட்டபடி கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு. எல்லாவற்றுக்கும் மேலாக... மனக் கவலைகளைப் போக்கும் தலமாகத் திகழ்கிறது இந்த ஆலயம். எனவே, சங்கடங்கள் தீர, அன்பர்கள் ஒருமுறையேனும் இங்கு வந்து மாசிலாநாதரை வழிபட்டு வரம்பெற்றுச் செல்ல வேண்டும்'' என்கிறார் ஹரிமோகன்.

எப்படிச் செல்வது?: சீர்காழி - காரைக்கால் பேரூந்து வழித்தடத்தில் உள்ளது தரங்கம்பாடி. மயிலாடுதுறை - திருக் கடையூர் - காரைக்கால் வழித்தடத்திலும் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism