Published:Updated:

இடி வடிவில் இந்திரன் வழிபடும் அதிசயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
திருக்கழுக்குன்றம் மலைக்கோயில்
திருக்கழுக்குன்றம் மலைக்கோயில்

வேதங்கள் போற்றிய திருக்கழுக்குன்றம் படங்கள் சொ.பாலசுப்ரமணியன்; ஹரீஷ்குமார்

பிரீமியம் ஸ்டோரி

தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் முக்கியமானது திருக் கழுக்குன்றம். சதுர் யுகங்களாக நிலைத்திருக்கும் இந்தத் தலத்தின் மகிமைகளைப் புராணங்களும் வரலாறும் வியந்துரைக்கின்றன. நால்வர் பெருமக்களும் பாடிய அபூர்வ தலம் இது.

இடி வடிவில் 
இந்திரன் வழிபடும் அதிசயம்!

முன்னொரு காலத்தில் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் தங்களுடைய தலைவன் யார் என்று சந்தேகம் கொண்டு பூவுலகம் முழுக்க வலம் வந்தனவாம். அப்போது, இந்தத் தலத்தில் சிவபெருமானை தரிசித்து தங்களின் ஐயம் நீங்கப் பெற்று, இங்கேயே மலை வடிவம் கொண்டனவாம். அதனால் இங்கு கோயில் கொண்டருளும் ஈசனுக்கு வேதகிரீஸ்வரர் என்று திருப்பெயர்.

தர்வண வேத பாறை உச்சியில் வேதகிரீஸ்வரர் கோயில் கொண்டு அருள்கிறார் என்று தலபுராணம் சொல்கிறது. இத்தலத்துக்கு வேதகிரி, பட்சி தீர்த்தம், ருத்ரகோடி, கழுகாசலம், உலகளந்த சோழபுரம், கதலிவனம், சங்கு புரம் என்னும் பல்வேறு திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.

நான்கு யுகங்களிலும் இரண்டு கழுகுகள் தினமும் இந்த மலைக்கு வந்து ஈசனை வழிபட்ட காரணத்தால் இந்தத் தலத்துக்குத் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் உண்டானது. கிருத யுகத்தில் சண்டன், பிரசண்டன் என்ற கழுகுகளும், திரேதா யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்ற கழுகுகளும், துவாபர யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்ற கழுகுகளும், கலியுகத்தில் சம்பு, ஆதி என்ற கழுகுகளும் நாள்தோறும் உச்சிப் பொழுதில் மலை உச்சியில் வழிபட்டு சாப விமோசனம் பெற்றன எனத் தலவரலாறு கூறுகிறது.

சங்கு தீர்த்தம்
சங்கு தீர்த்தம்

சுமார் 4 கி.மீ. சுற்றளவும், 500 அடி உயரமும் கொண்டு திகழ்கிறது மலை. செங்குத்தான மலைப்படிகளைக் கடந்தால் மேலே ராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கே மூலவர் வேதகிரீஸ்வரர், வாழைப் பூங்குருத்துப் போன்ற தோற்றத்தில் சுயம்புலிங்க மூர்த்தியாக அருள்கிறார். அம்பிகைக்கு ‘சொக்கநாயகி’ என்றும் ‘பெண்ணின் நல்லாளம்மை’ என்றும் திருப்பெயர்கள் விளங்குகின்றன.

ண்ணாமலையைப் போன்றே இங்கும் மலை உச்சியில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபம் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. மலைக் கோயிலில் இருந்து கீழே இறங்குவதற்கு வேறொரு வழியும் உள்ளது. இவ்வழியில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் எழுப்பிய (கி. பி. 610 - 640) அழகிய குடைவரைக் கோயில் ஒன்று சிவலிங்கத் திருமேனியோடு அமைந்துள்ளது.

லையின் கீழே ஊரின் மத்தியில் பிரமாண்டமான தாழக் கோயில் உள்ளது. சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் - நான்கு புறமும் கோபுரங்கள், மூன்று பிராகாரங்கள், எண்ணற்ற சந்நிதிகளுடன் அமைந்துள்ளது இந்த ஆலயம். கிழக்குக் கோபுரம் ஏழு நிலைகளுடன் திகழ்கிறது.

ந்தத் தாழக்கோயிலில் பக்தவசலேஸ்வரர் எனும் திருப்பெயருடன் அருள்கிறார் ஸ்வாமி. கருவறையின் விமானம் கஜப் பிரஷ்ட அமைப்பில் காணப்படுகிறது. அம்பிகை நின்ற திருக்கோலத்தில் திரிபுரசுந்தரி என்ற திருநாமம் கொண்டு அருள்கிறாள். மார்பில் ஶ்ரீசக்கரப் பதக்கம் தாங்கிய இந்த அன்னையை தரிசித்தாலே பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

தாழக்கோயில் ஶ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள்
தாழக்கோயில் ஶ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள்

ங்கு அன்னைக்கு தினமும் பாதத்தில் மட்டுமே அபிஷேகம் நடைபெறும். ஆடிப்பூரம் 11-ம் நாள், நவராத்திரி 9-ம் நாள், பங்குனி உத்திரம் தினத்தில் இரவு பூஜைகளில் மட்டுமே முழுத் திருமேனிக்கும் அபிஷேகம் செய்யும் வழக்கம் இங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. அபூர்வ வகைக் கல்லால் செய்யப்பட்டது இந்த அன்னையின் திருமேனி என்பதால் இந்த ஏற்பாடாம்.

ழகிய மண்டபங்களும் சிற்பங்களும் கொண்ட தாழக் கோயிலில் நந்தி தீர்த்தமும், அதன் கரையில் நந்தியும் அமைந்துள்ளன. பிராகாரங்களில் சோமாஸ்கந்தர், ஆத்மநாதர், மாணிக்கவாசகர், ஏகாம்பரநாதர், வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணா சலேஸ்வரர், ஆறுமுகப் பெருமான், நடராஜ சபை, அகோர வீரபத்திரர், சூரியன், பைரவர் சந்நிதிகளும், 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன.

ந்தத் தலத்தில் உள்ள இந்திர தீர்த்தம், சங்கு தீர்த்தம், சம்பு தீர்த்தம், நந்தி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், அகத்திய தீர்த்தம், மெய்ஞ்ஞான தீர்த்தம், கௌசிக தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பக்ஷி தீர்த்தம் ஆகிய 12 தீர்த்தங்களும் பிரசித்தமானவை.

தாழக் கோயில் திருக்கழுக்குன்றம்
தாழக் கோயில் திருக்கழுக்குன்றம்
Harrish_Nayak_Photography

குறிப்பாக சங்கு தீர்த்தம் அற்புதம் நிறைந்தது. தாழக்கோயிலின் ராஜகோபுரத்திற்கு நேர் எதிரே உள்ளது சங்குத் தீர்த்தம். மார்க்கண்டேய ரிஷி இங்குள்ள ஈசனை அபிஷேகிக்கப் பாத்திரமின்றித் தவித்தபோது, ஈசன் இக்குளத்தில் சங்கு வரவைத்ததாகத் தலபுராணம் சொல்கிறது. அதன் அடிப்படையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தீர்த்தத்தில் சங்கு பிறக்கும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது என்கிறார்கள்.

2011-ம் ஆண்டு இக்குளத்தில் சங்கு கிடைத்துள்ளது. நன்னீர் குளத்தில் சங்கு பிறப்பது பூலோக அதிசயமே. இந்தத் தீர்த்தத்தில் நீராடி, மலையை வலம் வந்து பக்தவத்சலரையும் வேதகிரீஸ்வரரையும் வணங்கினால் தீராத நோய்கள் நீங்கும், ஜன்ம வினைகள் யாவும் போகும் என்பது நம்பிக்கை.

ங்கு தீர்த்தத்துக்கு சற்றுத் தொலைவில் ருத்ரகோடி என்ற தேவார வைப்புத் தலம் உள்ளது. மிகப்பழைமையான இந்த ஆலயம் ஏகாதச ருத்திரர்கள் எனப்படும் மகாதேவன், ருத்ரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விஜயன், வீமதேவன், சௌம்யதேவன், பலோத்பவன், கபாலிகன், ஹரன்ஆகியோர்களால் உருவானது என்கிறார்கள்.

ங்குள்ள ஈசன் ருத்ரகோடீஸ்வரர், இறைவி அபிராம சுந்தரி. தற்போது இந்தக் கோயில் ருத்ராங்கோயில் எனப்படுகிறது. இங்கு அமர்ந்து ஒருமுறை சிவமந்திரம் ஜபித்தால், ஒரு லட்சம் முறை ஜபித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ங்கு 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர்கள் முதல் சோழர், பாண்டியர், ராஷ்ட்ரகூடர் வரையிலான பல்வேறு மன்னர்களின் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

தாழக் கோயில்
தாழக் கோயில்
Picasa

ணிவாசகருக்கு ஈசன் குரு வடிவாய்க் காட்சி தந்த இரண்டாவது தலம் இது. `12’ என்ற எண்ணில் பல அதிசயங்களைக் கொண்ட இந்த ஊருக்கு வந்து 3 சிவமூர்த்தங்களையும் தரிசித்தால், 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

‘கல்லாடை புனைந்தருளுங் காபாலியைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே...’ என்ற வரிகளால் மயிலை கபாலீஸ்வரை மீண்டும் தரிசிக்க அப்பர் விரும்பியபோது, இங்குள்ள ஈசன் கபாலியாக அவருக்குக் காட்சி தந்த அதிசய தலம் இது.

திருவண்ணாமலையைப் போலவே இந்த திருக்கழுக்குன்ற மலையையும் கிரிவலம் வரும் வழக்கம் உள்ளது. இந்த கிரிவலப் பாதையில் பல சிறு கோயில்களும் உள்ளன. இத்தலத்தில் சித்திரை மாத தேர்த் திருவிழாவும், கார்த்திகை மாத ஆயிரத்தெட்டு சங்காபிஷேகமும் விசேஷம். ஆண்டுக்கு ஒருமுறை இந்திரன் இங்கு ஈசனை மின்னல் வடிவில் வழிபடுவதாகவும் ஐதிகம்.

ன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு, கன்னியில் பிரவேசிக்கும் நாளன்று மாலையில், இங்கு லட்சதீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், கன்னி ராசியில் குருபகவான் சஞ்சரித்த 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி இங்கு லட்ச தீபத் திருவழா கொண்டாடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு