Published:Updated:

அடியார்க்கு அருளும் அத்திவரதர்... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் வைபவம் ! #Aththivarathar

அத்திவரதர்
News
அத்திவரதர்

கோயில் என்பது திருவரங்கத்தையும் பெருமாள் கோயில் என்பது காஞ்சிவரதராஜப் பெருமாள் கோயிலையும் திருமலை என்றால் திருப்பதியையும் குறிக்கும்...

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ நிகழ்வு அத்திவரதர் வைபவம். அனந்த சரஸ் குளத்தில் அமிழ்ந்திருந்து சேவை சாதிக்கும் அத்திவரதரை எழுந்தருளச் செய்து 48 நாள்கள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்க இருக்கிறார். அத்திவரதர் திருமேனி நேற்று திருக்குளத்திலிருந்து வெளியில் எடுத்து பக்தர்கள் தரிசிக்க, திருக்கோயில் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அத்தி வரதர்
அத்தி வரதர்

வரதராஜப்பெருமாள் கோயிலில் மூலவராக இருந்தவர் அத்திவரதர். காலப்போக்கில் அந்த திருமேனி பின்னமானதால் அதற்கு மாற்றாக சிலாரூபத் திருமேனி செய்து வழிபட்டதாகவும், பழைய அத்திமரத் திருமேனியை, பெருமாளின் திருவுளப்படி அனந்த சரஸ் தீர்த்தத்தில் எழுந்தருளப் பண்ணியதாகவும் தலபுராணம் தெரிவிக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வாய்திறந்து பொங்கலை வேண்டிக் கேட்டு உண்ட அந்த வரதனோ இப்போது வாய்திறவாது நின்று விளையாடினான்...
வரதனின் திருவிளையாடல்

அத்திவரதரும், வரதராஜர் கோயிலும் வைணவ மரபில் மிகவும் விசேஷமானவை. வைணவத்தில் 'கோயில், பெருமாள் கோயில், திருமலை' என்று சொல்வது வழக்கம். கோயில் என்பது திருவரங்கத்தையும் பெருமாள் கோயில் என்பது காஞ்சிவரதராஜப் பெருமாள் கோயிலையும் திருமலை என்றால் திருப்பதியையும் குறிக்கும். அத்தகைய சிறப்பினைப் பெற்ற தலம் காஞ்சிபுரம் கோயில். வைணவம் வளர்த்த அடியவர்களோ காஞ்சியைத் தம் பிறந்த வீடாகவே கருதுவர். ராமாநுஜன் போன்ற அடியவர்கள் எல்லாம் காஞ்சியைத் தம் பிறந்த வீடாகவும், திருவரங்கத்தைத் தம் புகுந்த வீடாகவும் கருதுவர்.

வரதராஜ பெருமாள்
வரதராஜ பெருமாள்

திருமால் அருளும் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர்களுக்கு முக்கியமானவை என்ற போதும், காஞ்சியும், வரதராஜனும் அவர்களுக்கு மிகவும் விசேஷமானவை. அதே போன்று வரதனும் அடியவர்களிடம் அன்பு செய்வதில் ஈடு இணையற்றவனாகத் திகழ்ந்து அவர்கள் மேல் பேரன்பைப் பொழிந்து பேரருளாளன் என்று பெயர் பெற்றான். அப்படி வரதனுக்குக் கைங்கர்யம் செய்து அவனோடு நேரடியாகப் பேசும் சிறப்பினைக் கொண்டிருந்த அடியவர் திருக்கச்சி நம்பிகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராமாநுஜரின் குருவாகக் கருதப்படும் திருக்கச்சி நம்பிகள் சென்னையை அடுத்த பூந்தமல்லியில், வணிகர் குலத்தைச் சேர்ந்த வீரராகவர் என்பவருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர். வீரராகவரின் மூன்று மகன்களும் தம் குலத்தொழிலான வணிகத்தைச் செய்து பொருள் ஈட்டிக்கொண்டிருக்க, திருக்கச்சி நம்பிகளோ வரதனுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்து அருள் ஈட்டிக்கொண்டிருந்தார்.

ராமாநுஜர்
ராமாநுஜர்

ஒருமுறை அவர் ஆலவட்டம் வீசிக்கொண்டிருந்தபோது, கோயில் அர்ச்சகர் ஒருவர் பெரிய பாத்திரம் ஒன்றில் பெருமாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யக் கொண்டுவந்து வைத்தார். புளியோதரை மடப்பள்ளியில் இருப்பதால் அதை எடுத்துவரும்வரை பார்த்துக்கொள்ளுமாறு திருக்கச்சி நம்பிகளிடம் கூறிவிட்டுச் சென்றார்.

அடியவர்களோடு விளையாடுவதையே தன் வாடிக்கையாகக் கொண்ட வரதன் திருக்கச்சி நம்பிகளைநோக்கி, " நம்பிகளே, எனக்கு அந்த சர்க்கரைப் பொங்கலை ஊட்டிவிடு" என்று கேட்டார். ஆண்டவன் கேட்க அடியவர் மறுப்பாரா? ஒரு வாய் எடுத்து ஊட்டினார். வரதனோ அதை ரசித்து உண்டு, 'இன்னும் கொஞ்சம்' என்று கேட்டான். மீண்டும் நம்பிகள் எடுத்து ஊட்டினார். இப்படியே அந்தப் பாத்திரத்தில் பாதி காலியாகிவிட்டது.

பெருந்தேவி தாயார்
பெருந்தேவி தாயார்

திரும்பி வந்த அர்ச்சகர் சர்க்கரைப் பொங்கல் குறைந்திருப்பது கண்டு அதிர்ச்சியானார். 'பெருமாளுக்குரிய நைவேத்தியத்தை உண்டு, பெரும் தவறு இழைத்துவிட்டீர்கள்' என்று கோபித்துக் கொண்டார். வரதந்தான் வாங்கிக்கேட்டு உண்டான் என்று நம்பிகள் சொன்னதை அவர் நம்பவில்லை. 'விக்ரஹம் எவ்வாறு உண்ணும்?' என்று கேட்டார். வாய்திறந்து பொங்கலை வேண்டிக் கேட்டு உண்ட அந்த வரதனோ இப்போது வாய்திறவாது நின்று விளையாடினான்.

உடனே கூட்டத்தைக் கூட்டி, 'இனி வரதன் ஆலயத்துக்குள் நம்பிகள் வரவே கூடாது' என்று தீர்மானம் போட்டான். வேறு வழியின்றி நம்பிகளும் வெளியேறினார். அவர் வருத்தமெல்லாம், 'வரதனுக்குக் கைங்கர்யம் செய்ய வழியில்லாது போனதே' என்பதுதான்.

பெருமாள்
பெருமாள்

மறுநாள் நைவேத்தியம் செய்ய அர்ச்சகரும் மற்றவரும் கூடியபோது, வரதன் பேசினான். 'திருக்கச்சி நம்பிகள் வந்தால்தான் நைவேத்தியத்தை ஏற்பேன்' என்று சொல்ல வேறுவழியின்றி அனைவரும் சென்று நம்பிகளை அழைத்துவந்து வரதனை வழிபட்டனர்.

கள்ளழகருக்கு ஆற்றில் இறங்கும் வைபவம் போல வரதனுக்கு நடவாவி வைபவம். 'வாவி' என்றால் கிணறு. தன்னைக் கொல்ல யாதவப் பிரகாசர் தீட்டிய திட்டம் அறிந்து ராமாநுஜர் தப்பிக் காஞ்சிபுரம் அருகே வந்தபோது, வரதராஜப் பெருமாளும் பெருந்தேவித் தாயாரும் வேடனும் அவன் மனைவியும் போலத் தோன்றி காஞ்சி மாநகருக்கு வழிகாட்டி ராமாநுஜரைக் காப்பாற்றினர். அந்த வைபவமே ஒவ்வொரு சித்ராபௌர்ணமி அன்றும் நடவாவியில் எழுந்தருளும் வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியன்று நிகழும் மற்றுமொரு அதிசயமும் உண்டு.

அடியார்க்கு அருளும் அத்திவரதர்... 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை எழுந்தருளும் வைபவம் ! #Aththivarathar

பிரம்மாவின் யாகத்தில் எழுந்தருளியவர் ஆதிஅத்திவரதர். பிரம்மா இவரைத் தொழுது தன் பாவங்கள் தீர்ந்து வரங்கள் பல பெற்றார் என்பது ஐதிகம். ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று பிரம்மா வரதரை வழிபடுவதாக ஐதீகம். சித்ராபௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு மேல் வரதருக்குப் பூஜைகள் செய்து நிவேதனம் சமர்ப்பிப்பர். பின்பு அர்ச்சகர்கள் அனைவரும் வெளியேறி ஒருநாழிகை நேரம் கருவறைக் கதவுகளை அடைத்துவைப்பர். அந்தக் கணத்தில் பிரம்மா வந்து வரதனை வழிபட்டுச் செல்வதாகக் கருதப்படுகிறது. ஒருநாழிகை சென்று உள்ளே சென்றால் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப் பட்ட பிரசாதம் நறுமணத்துடன் திகழும் என்கின்றனர் அடியவர்கள்.