Published:Updated:

மனத் தூய்மையும் உடல்தூய்மையும் அருளும் காமிகா ஏகாதசி விரதம்... கடைப்பிடிப்பது எப்படி?

காமிகா ஏகாதசி சிறப்பு...

ஏகாதசி
ஏகாதசி

பகவான் விஷ்ணுவை வழிபட உகந்த தினங்களில் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஓர் ஆண்டில் வரும் 24 ஏகாதசி திதிகள் ஒவ்வொன்றும் தனித்துவமான சிறப்புகளைக் கொண்டவை. ஒவ்வொன்றையும் அனுசரிக்க, பிரத்யேகமான பலன்கள் கிட்டும். ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூல் ஏகாதசி திதிகளின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. அவ்வாறு ஆடிமாத தேய்பிறை ஏகாதசியில் வரும் ஏகாதசி பல புண்ணிய பலன்களைத் தரும் `காமிகா ஏகாதசி' என்கிறது அந்த நூல்.

ஆடி மாத காமிகா ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்கள், வாஜ்பேய யாகம் செய்த பலனைப் பெறுவார்கள்...
காமிகா ஏகாதசி மகிமை

மற்ற ஏகாதசிகளைவிட மிகுந்த பலன்களை காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதன்மூலம் பெறமுடியும். ஆடிமாத காமிகா ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்கள், வாஜ்பேய யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். இந்த நாளில் தன் திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய பெருமாள் திருவுருவத்தை வழிபட வேண்டும். அவ்வாறு வணங்க, கங்கையில் நீராடி, காசி, நைமிசாரண்யம், புஸ்கர் ஆகிய புண்ணியத் தலங்களில் தங்கும் பலன்களைப் பெறுவர்.

காமிகா ஏகாதசியைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்கள், தாமரை இலையைத் தண்ணீர் எப்படித் தீண்டுவதில்லையோ அப்படி, பாவம் ஒருபோதும் அவர்களைத் தீண்டுவதில்லை. காமிகா ஏகாதசி நாளில் துளசி இலைகொண்டு பகவான் விஷ்ணுவை வழிபட உடல் தூய்மையும் மனத்தூய்மையும் வந்து வாய்க்கும்.

பெருமாள்
பெருமாள்

முன்னொரு காலத்தில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்த போதும் அவருக்கு, கோபம் என்னும் குறை அவரிடம் இருந்துவந்தது. ஒருமுறை, தன் அண்டை வீட்டு வேதியரோடு சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் அந்த செல்வந்தர் அந்த வேதியரைக் கொன்றார். இதனால் அந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த செல்வந்தர் தன் மன நிம்மதியை இழந்தார். செல்வங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிச் சென்றது. தனக்கு நல்வழிகாட்டுமாறு முனிவர் ஒருவரை சரணடைந்தார். அப்போது அந்த முனிவர் காமிகா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி அதை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்.

Vikatan

செல்வந்தர், முறையாக பக்தியோடு காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, துளசி இலைகளால் திருமாலைப் பூஜித்து வழிபட்டார். அன்றைய இரவு அவரின் கனவில் தோன்றிய ஸ்ரீஹரி, ``எந்தப் பாவத்தையும் போக்கும் காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டதால் உன்னைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. எவன் ஒருவன் அறிந்தே ஒரு பாவத்தைச் செய்து பின்பு அதிலிருந்து தப்ப காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள முயன்றால் அது அவனுக்குப் பலிக்காது. நீ அறியாமல் செய்ததால் அது உனக்கு மன்னிக்கப்பட்டது" என்று சொல்லி அவனுக்கு அருள் செய்தார்.

ஏகாதசி
ஏகாதசி

மறுநாள் முதல் மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் திரும்பப் பெற்ற அந்த செல்வந்தர், பகவான் விஷ்ணுவுக்கு நன்றி சொல்லித் துதித்தார். அவரின் எஞ்சிய வாழ்க்கை முழுவதும் எளிமையும், பக்தியும் கொண்டு வாழ்ந்தார். இந்தக் கதையை நாரதர் உபதேசித்ததாக ஏகாதசி மஹாத்மியம் தெரிவிக்கிறது. நாளை, காமிகா ஏகாதசி (28.7.19) விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிட்டும் புண்ணியமானது பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தைவிடவும் பலமடங்கு புண்ணியத்தை வழங்கவல்லது.

ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி திருமாலை வணங்க வேண்டும். அந்த நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துவருவது மேலும் சிறப்புவாய்ந்தது. இயன்றவர்கள் வெறும் துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி விரதம் இருக்கலாம். மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை நேரத்தில் இறைவனை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம். பகவான் விஷ்ணுவை வழிபட உகந்த தினங்களில் ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஓர் ஆண்டில் வரும் 24 ஏகாதசி திதிகள் ஒவ்வொன்றும் தனித்துவமான சிறப்புகளைக் கொண்டவை. ஒவ்வொன்றையும் அனுசரிக்க, பிரத்யேகமான பலன்கள் கிட்டும். ஏகாதசி மஹாத்மியம் என்னும் நூல் ஏகாதசி திதிகளின் சிறப்புகளை எடுத்துரைக்கிறது. அவ்வாறு ஆடிமாத தேய்பிறை ஏகாதசியில் வரும் ஏகாதசி பல புண்ணிய பலன்களைத் தரும் `காமிகா ஏகாதசி' என்கிறது அந்த நூல்.

ஏகாதசி
ஏகாதசி

மற்ற ஏகாதசிகளைவிட மிகுந்த பலன்களை காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதன்மூலம் பெறமுடியும். ஆடிமாத காமிகா ஏகாதசி விரதத்தை அனுசரிப்பவர்கள், வாஜ்பேய யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். இந்த நாளில் தன் திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்திய பெருமாள் திருவுருவத்தை வழிபட வேண்டும். அவ்வாறு வணங்க, கங்கையில் நீராடி காசி, நைமிசாரண்யம், புஸ்கர் ஆகிய புண்ணியத் தலங்களில் தங்கும் பலன்களைப் பெறுவர். காமிகா ஏகாதசியைத் தொடர்ந்து கடைப்பிடிப்பவர்கள், தாமரை இலையைத் தண்ணீர் எப்படித் தீண்டுவதில்லையோ அப்படி, பாவம் ஒருபோதும் அவர்களைத் தீண்டுவதில்லை. காமிகா ஏகாதசி நாளில் துளசி இலைகொண்டு பகவான் விஷ்ணுவை வழிபட உடல் தூய்மையும் மனத்தூய்மையும் வந்து வாய்க்கும்.

முன்னொரு காலத்தில் செல்வந்தர் ஒருவர் வாழ்ந்துவந்தார். மிகுந்த செல்வச் செழிப்போடு வாழ்ந்த போதும் அவருக்கு, கோபம் என்னும் குறை அவரிடம் இருந்துவந்தது. ஒருமுறை, தன் அண்டை வீட்டு வேதியரோடு சண்டை ஏற்பட்டது. சண்டையில் அந்த செல்வந்தர் வேதியரைக் கொன்றார். இதனால் அந்த பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த செல்வந்தர் தன் மன நிம்மதியை இழந்தார். செல்வங்கள் எல்லாம் அவரிடமிருந்து விலகிச் சென்றது. தனக்கு நல்வழிகாட்டுமாறு முனிவர் ஒருவரைச் சரணடைந்தார். அப்போது அந்த முனிவர் காமிகா ஏகாதசி விரதத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லி அதை மேற்கொள்ளுமாறு உபதேசித்தார்.

செல்வந்தர், முறையாகப் பக்தியோடு காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, துளசி இலைகளால் திருமாலைப் பூஜித்து வழிபட்டார். அன்றைய இரவு அவரின் கனவில் தோன்றிய ஸ்ரீஹரி, ``எந்தப் பாவத்தையும் போக்கும் காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டதால் உன்னைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. எவன் ஒருவன் அறிந்தே ஒரு பாவத்தைச் செய்து பின்பு அதிலிருந்து தப்ப காமிகா ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள முயன்றால் அது அவனுக்குப் பலிக்காது. நீ அறியாமல் செய்ததால் அது உனக்கு மன்னிக்கப்பட்டது" என்று சொல்லி அவனுக்கு அருள் செய்தார். மறுநாள் முதல் மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் திரும்பப் பெற்ற அந்த செல்வந்தர், பகவான் விஷ்ணுவுக்கு நன்றி சொல்லித் துதித்தார். அவரின் எஞ்சிய வாழ்க்கை முழுவதையும் எளிமையும், பக்தியும் கொண்டு வாழ்ந்தார்.

Vikatan

இந்தக் கதையை நாரதர் உபதேசித்ததாக ஏகாதசி மஹாத்மியம் தெரிவிக்கிறது. நாளை, காமிகா ஏகாதசி (28.7.19) விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிட்டும் புண்ணியமானது பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தை விடவும் பலமடங்கு புண்ணியத்தை வழங்கவல்லது.

திருமால்
திருமால்

ஏகாதசி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி திருமாலை வணங்க வேண்டும். அந்த நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துவருவது மேலும் சிறப்புவாய்ந்தது. இயன்றவர்கள் வெறும் துளசித் தீர்த்தம் மட்டுமே அருந்தி விரதம் இருக்கலாம். மறுநாள் துவாதசி திதி அன்று பாரணை நேரத்தில் இறைவனை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

காமிகா ஏகாதசி - ஞாயிற்றுக் கிழமை

28.7.19 ஏகாதசி திதி தொடங்கும் நேரம் : 27.7.19 : 4.26 PM

ஏகாதசி திதி முடிவடையும் நேரம் : 28.7.19 : 3:47 PM

பாரணை நேரம் : 29 - ம் தேதி காலை 6: 00 AM - 7 : 00 AM

பாரணை தினத்தில் துவாதசி முடிவடையும் நேரம் - 29.9.19 12:42 PM