Published:Updated:

வெற்றி அருளும் தெற்கு காரச்சேரி குலசேகர நாதர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

சிவபெருமான்
சிவபெருமான்

குலசேகர மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்னை வரும் போதெல்லாம் இக்கோயிலில் வந்து வணங்கிதான் வெற்றி பெற்றுள்ளார்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ளது தெற்கு காரசேரி. தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய...

Posted by Sakthi Vikatan on Thursday, April 23, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, தெற்கு காரச்சேரி குலசேகர நாதர் திருக்கோயில்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் உள்ளது தெற்கு காரசேரி. தேரோடும் வீதிகள் நிறைந்த பெரும் பட்டணமாக விளங்கிய நல்லூர் இது. இந்த கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் குலசேகர நாதர் என்றும் இறைவியார் குலசேகர நாயகி என்றும் அருள்பாலிக்கிறார்கள்.

worshipathome
worshipathome

குலசேகரப் பட்டணத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் ஒரே நேரத்தில் 9 சிவன் கோயில்கள் கட்டினார். அக்கோயில்களில் ஒரே நேரத்தில் பூஜை செய்து மகிழ்ந்தார். குலசேகரபட்டிணத்தில் இருந்து திருவாங்கூர் வரை இந்த 9 கோயில்களும் அமைந்திருந்தன. அந்த ஒன்பது கோயில்கள் வரிசையில் இதுவும் அடங்கும்.

கோயிலில் சிவ பெருமான் கிழக்கு நோக்கிச் சற்று இடது புறம் சாய்ந்து பக்தர்கள் கோரிக்கையைக் கேட்கும் விதமாகக் காட்சியளிக்கிறார். அம்மை குலசேகர நாயகி தெற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.

சனி பகவான், பைரவர், சூரியன், சந்திரன், அதிகாரநந்தி, நவக்கிரகம் என எல்லா தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.

தொடர்ந்து கோயிலைச் சுற்றி வந்தால் சுர தேவர், தட்சிணாமூர்த்தி ஆகியோர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். கன்னிமூலையில் விநாயகப் பெருமான், மறுபுறம் வள்ளி தெய்வானையும் சமேத முருகபெருமானும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே காசி விசுவநாதர் - விசாலாட்சி, சோமசுந்தரர் - மீனாட்சி அருள் பாலிக்கிறார்கள். அதைத் தொடர்ந்து சண்டிகேஸ்வரர்,

குலசேகர மன்னன், தனக்கு எதிரிகள் மூலம் பிரச்னை வரும் போதெல்லாம் இக்கோயிலில் வந்து வணங்கித்தான் வெற்றி பெற்றுள்ளார். வெற்றியைப் பெற்றுத் தரும் தலமாக இது விளங்கி வருகிறது. எனவே, அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றி பெறவும், மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறவும் இங்கே வந்து வணங்கிச் செல்கிறார்கள்.

குலசேகரநாதர்
குலசேகரநாதர்

இங்குள்ள சிவனை வணங்கி வேண்டிக்கொண்டால் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக்கொண்டிருப்பவர்களுக்கும் குணம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. நாள் பட்ட நோய்கள் தீர்கின்றன. இங்குள்ள வள்ளி தெய்வானை சமேத முருகன் முன்பு, பக்தர்கள் திருமணம் செய்துகொண்டால் திருமண வாழ்வு சிறப்பதோடு குழந்தைபேறும் விரைவில் கிடைக்கும்.

அடுத்த கட்டுரைக்கு