Published:Updated:

லோக குரு தட்சிணாமூர்த்தி அவதரித்த குருபூர்ணிமா- குருவை வழிபட உகந்தநாள்!

குருபூர்ணிமா

குரு என்றால் ‘இருளை விலக்குபவர்’ என்று பொருள். பௌர்ணமி என்பது குறைகள் அற்ற முழுமையான ஒளியின் அடையாளம். மனதுள் இருக்கும் இருளை முழுமையான ஞானம் கொண்ட குரு தன் அறிவுக் கிரணங்களால் விலக்குவார்.

லோக குரு தட்சிணாமூர்த்தி அவதரித்த குருபூர்ணிமா- குருவை வழிபட உகந்தநாள்!

குரு என்றால் ‘இருளை விலக்குபவர்’ என்று பொருள். பௌர்ணமி என்பது குறைகள் அற்ற முழுமையான ஒளியின் அடையாளம். மனதுள் இருக்கும் இருளை முழுமையான ஞானம் கொண்ட குரு தன் அறிவுக் கிரணங்களால் விலக்குவார்.

Published:Updated:
குருபூர்ணிமா

பௌர்ணமி என்றாலே விழாக்காலம்தான். ‘முழுநிலவு’ தினம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. முருகன் அவதரித்தது, தாருகாசுரனை வதம் செய்தது, சிவபெருமான் ஜோதி வடிவில் எழுந்தருளியது என்று புராணங்களில் கூறப்படும் அற்புதங்கள் பல நிகழ்ந்தது பௌர்ணமி தினத்தன்றுதான்! இன்று‘குரு பௌர்ணமி.’ இந்த நாள், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையும், ஞானமார்க்கத்தில் வழிநடத்தும் குருக்களையும் வணங்க உகந்த நாள்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

குரு என்றால் ‘இருளை விலக்குபவர்’ என்று பொருள். பௌர்ணமி என்பது குறைகள் அற்ற முழுமையான ஒளியின் அடையாளம். மனதுள் இருக்கும் இருளை முழுமையான ஞானம் கொண்ட குரு தன் அறிவுக் கிரணங்களால் விலக்குவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆன்மிகத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘இறை சாபத்தை குருவருளால் மாற்றமுடியும். ஆனால், குருசாபத்தை இறைவனால் கூட மாற்ற முடியாது’ என்பார்கள். இறைவனையும் அவனை அடையும் வழியினையும் நமக்குக் காட்டியருள்பவர் குரு என்பதால் அவர் இறைவனுக்கு நிகராகவும் கருதப்படுகிறார்.

சிவபெருமான்
சிவபெருமான்

முழுமுதற்கடவுளான சிவபெருமானே உலகிற்கு ஞான ஒளியை அருள லோக குருவான தட்சிணாமூர்த்தியாக அவதரித்தார். அவ்வாறு, ஈசன் அவதாரம் செய்த தினம் ஒரு குரு பௌர்ணமி. பிரம்மனின் குமாரர்களான சனாகதி முனிவர்கள் இல்லற வாழ்வைத் துறந்து, பிரம்ம ஞானத்தைத் தேடி காடுமேடெங்கும் அலைந்தனர். அவர்களின் மன உறுதியையும் ஞானத்தேடலையும் கண்ட சிவபெருமான் அவர்களுக்கு அருள்செய்ய விரும்பினார். கல்லால மரத்தடியில் தெற்கு நோக்கி அமர்ந்து தட்சிணாமூர்த்தியாகக் காட்சிகொடுத்தார். மௌன முத்திரை காட்டி, பாதி விழிப்பு நிலையில் அவர்களுக்கு உபதேசம் செய்தார். லோக குருவான தட்சிணாமூர்த்தி அவதரித்த குருபூர்ணிமா தினத்தில் அவரைப் போற்றி வழிபடுவது மிகவும் சிறப்புவாய்ந்தது.

‘இறை சாபத்தை குருவருளால் மாற்றமுடியும். ஆனால், குருசாபத்தை இறைவனால் கூட மாற்ற முடியாது’
ஆன்மிகப் பழமொழி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஹயக்ரீவரே ஆதிகுருவாகக் கருதப்படுகிறார். குதிரை முகமும் மனித உடலும் கொண்ட ஶ்ரீமன் நாராயணனின் அவதாரம் ஹயக்ரீவர். மது, கைடபர் என்னும் அசுரர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிச்சென்றனர். அவர்களிடமிருந்து வேதங்களை மீட்டுத் தருமாறு பிரம்மா விஷ்ணுவை வேண்டிக்கொள்ள, அவர் ஹயக்ரீவ அவதாரம் எடுத்து வேதங்களைக் காத்தார். ஹயக்ரீவர் கல்வி வரமருளும் அவதாரமாகக் கருதப்படுகிறார். இந்த குருபூர்ணிமா தினத்தில் அவரை வணங்கி வழிபடுவது மிகவும் விசேஷமானது.

ஹயக்ரீவர்
ஹயக்ரீவர்

குரு பௌர்ணமிக்கு 'வியாச பௌர்ணமி' என்றும் பெயர். வேதங்களைத் தொகுத்தவர் வியாசர். பிரம்ம சூத்திரத்தையும் எழுதியவர் அவரே. ஞானத்தின் வடிவான ஆகம சாஸ்திரங்களையும் புராண இதிகாசங்களையும் தொகுத்து வழங்கியவர் வேத வியாசர். இந்த குருபூர்ணிமா தினத்தில் வியாச பூஜை செய்யும் வழக்கம் உண்டு. இது குருவருளை நமக்குப் பரிபூரணமாக அருளும் என்கின்றன சாஸ்திரங்கள்.

'குரு யார் என்பது முக்கியமல்ல. அவர் எத்தகைய வழியை நமக்குக் காட்டுகிறார் என்பதே முக்கியம்' என்பதை அனைவருக்கும் உணர்த்துகிறார், ஸ்ரீதத்தாத்ரேயர். ஸ்ரீ தத்தாத்ரேயர் அனுமன், மார்க்கண்டேயர் போன்ற நித்ய சிரஞ்சீவிகளுள் ஒருவர். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஞானம் பெறத் திருவுளம் கொண்டு, மும்மூர்த்திகளான, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் தங்களின் அம்சங்களை ஒன்றிணைந்து, குருவாகத் தோன்றிய அவதாரமே ஸ்ரீதத்தாத்ரேயர்.

தத்தாத்ரேயர்
தத்தாத்ரேயர்

இவர் ' பூமி, நெருப்பு, காற்று, சந்திரன், சூரியன் என்று தான் கண்ட 24 குருமார்களிடமிருந்து கற்ற பாடமே சிறந்தது' என்கிறார். ஒவ்வொன்றிலுமிருந்தும், ஒவ்வொரு ஞானத்தைக் கற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார். வாழ்வில் நாம் காணும் ஒவ்வொரு பொருளும், சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் நமக்கு ஏதாவதொன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். காணும் ஒவ்வொன்றையும் குருவாக மதிக்க வேண்டும் என்பதே ஸ்ரீ தத்தாத்ரேயர் கற்றுக்கொடுத்த உபதேசம். குருபூர்ணிமா அன்று தத்தாத்ரேயரை வழிபட மெய்ஞ்ஞானம் கிட்டும்.

'குரு யார் என்பது முக்கியமல்ல. அவர் எத்தகைய வழியை நமக்குக் காட்டுகிறார் என்பதே முக்கியம்'
ஸ்ரீ தத்தாத்ரேயர்

பௌத்தர்களுக்கும் இந்தக் குருபூர்ணிமா தினம் மிகச் சிறப்பானது. புத்தர் இந்தத் தினத்தில்தான், சாரநாத் பகுதியில் இருந்த அடர்ந்த வனத்தில் தான்கண்ட ஞான மார்க்கமான ‘தர்மத்தை’ தன் சீடர்களுக்கு முதன் முதலில் உபதேசம் செய்தார். அதனால் குரு பூர்ணிமா தினத்தன்று பௌத்தர்களும் புத்தரை வணங்குகிறார்கள்.

புத்தர்
புத்தர்

இந்தப் புண்ணிய தினமான குருபூர்ணிமா தினத்தன்று தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி தேவி, குரு பகவான், ஸ்ரீ தத்தாத்ரேயர், ஹயக்ரீவர் மற்றும் புத்த பெருமான் ஆகியோரை வணங்கி மனதுள் இருக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி மெய்ஞ்ஞானத்தைப் பெறுவோம். இந்த நாளில் நமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களையும் வணங்கிப் பேறு பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism