Published:Updated:

மலைமேல் முருகன்... மலையடிவாரத்தில் சிவன்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம்! #worshipathome

முருகன்
முருகன்

முருகன் சந்நதிக்கு அருகே சுனை ஒன்று உள்ளது. இதை சரவணப்பொய்கை என்றும் கூறுகின்றனர். இந்தத் தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பக்தர்கள் அதைப் பருகினால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

worshipathome
worshipathome

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, மலையக்கோயில் முருகன் தலம்.

புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ தொலைவில் இருக்கிறது, மலையக்கோயில். பார்ப்பதற்குச் சிறியதாகத் தோன்றினாலும், கீர்த்தியில் மிகப்பெரியதாகவும் மிகவும் ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது மலையக்கோயில் மலை. மலையின் மீதுள்ள கோயில் ‘மேல்கோயில்’ என்றும், மலையின் கீழுள்ள கோயில் ‘கீழ்க்கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது. மலை மேல் முருகப் பெருமானும் மலையடிவாரத்தில் சிவபெருமானும் அருள்புரிகிறார்கள். 

வேண்டியவற்றை அருளும் மலையக்கோவில் முருகன்... புதுக்கோட்டையிலிருந்து 15கி.மீ தொலைவில் இருக்கிறது மலையக்கோவில். மலையின்...

Posted by Sakthi Vikatan on Tuesday, May 5, 2020

மலையின் அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்தில் ஒன்றும், தெற்குப்பக்கத்தில் ஒன்றுமாக இரண்டு குடவரைக் கோயில்கள் உள்ளன. கிழக்குக் குடவரைக் கோயில் ஒரே கருவறையையும் அந்தக் கருவறையின் நடுவில் ஆவுடையாருடன் கூடிய லிங்கம் மலைப்பாறையிலேயே செதுக்கப்பட்டிருக்கிறது.

லிங்கத்திற்கு எதிரே கிழக்கு நோக்கிப் பாறையிலேயே  அருள்புரிகிறார் வலம்புரி விநாயகர். தெற்குக் குடைவரைக் கோயிலில் சிவபெருமானும், அவரின் தேவியாகிய உமையவளுக்கும் கற்கோயில் அமைந்திருக்கிறது. 

மலையக்கோயில்
மலையக்கோயில்

இங்குள்ள சிவபெருமான் மேற்கு பார்த்து இருப்பதுதான் விஷேசம். மேற்கு திசையில் இருக்கும் சிவபெருமானை மனமுருகி வேண்டினால் பிரமஹத்தி தோஷம் நீங்குகிறது. இப்படி சிறப்புமிக்க இந்த மலையின் மீதுதான் சுப்பிரமணிய சுவாமி குடி கொண்டிருக்கிறார். மலையில் குடி கொண்டிருக்கும் சுப்பிரமணிய சுவாமியை  தரிசிக்கத் தினம், தினம் ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர். சிவபெருமான், அம்மன், வலம்புரி நாயகரை வணங்கி, சுப்பிரமணிய சுவாமியைத் தரிசிக்க மலையேறுகின்றனர்.

மலையேறியதும் அர்த்தமண்டபத்தில் விநாயகர், உற்சவராக முருகப்பெருமான் ஆகியோர் காட்சியளிக்கிறார்கள். கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியாக பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் முருகப் பெருமான். சுவாமிக்குத் தென்பக்கத்தில் இடும்பர் சந்நதி இருக்கிறது.  

முருகன்
முருகன்

முருகன் சந்நதிக்கு அருகே  சுனை ஒன்று உள்ளது. இதை சரவணப்பொய்கை  என்றும் கூறுகின்றனர். இந்தச் சுனை நீர் கொண்டுதான் சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பக்தர்கள் இதைப் பருனால் தீராத நோய்களும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டிய வரங்கள் யாவற்றையும் அருள்கிறார் முருகப்பெருமான்.

அடுத்த கட்டுரைக்கு