Published:Updated:

குபேர சம்பத்து அருளும் புளியங்குடி லட்சுமி நரசிம்மர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

நரசிம்மர்
நரசிம்மர்

சுவாதி நட்சத்திரத்தன்று இங்கு லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு குபேர சம்பத்து கிடைக்கும்...

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்ல முடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

நரசிம்மர்
நரசிம்மர்

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, புளியங்குடி ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயம்.

தென்காசியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ தொலைவி இருக்கிறது புளியங்குடி. புளியங்குடி பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரம் பயணித்தால் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் ஆலயத்தை அடையலாம்.  

நான்கு யுகங்களுள் முதலாவதான கிருத யுக காலத்தில் நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது. இரண்டே நாழிகைக்குள் தனது நரசிம்ம அவதாரத்தை நிகழ்த்தி முடித்தார் நரசிம்மர். இதனால் நரசிம்ம அவதாரம் `பூரண அவதாரம்’ என்றும், நரசிம்மர் ‘பெரிய பெருமாள்’ என்றும் பக்தர்களால்அழைக்கப்படுகிறார்.

தென்காசியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ தொலைவி இருக்கிறது புளியங்குடி. புளியங்குடி பேருந்து...

Posted by Sakthi Vikatan on Friday, May 8, 2020

இரணிய வதம் முடிந்தும், ஆவேசம் தணியாமல் இருந்தார் நரசிம்மர். அவரது கோபம் அதிகமாகிக்கொண்டிருந்தது அப்போது மகாலட்சுமியின் நிழல் நரசிம்மரின் மீது படர அவர் சாந்த சொரூபியாக மாறினார். தம்மீது படர்ந்த அந்த நிழலுக்கு உயிர் கொடுத்து, மகாலட்சுமியை ஆலிங்கனம் செய்து மனநிறைவு கொண்டு அனைவருக்கும் காட்சியளித்தார். இந்தப் புராணப் பின்னணி கொண்ட தலம், புளியங்குடி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்பம்சங்களைக் கொண்டது இந்த ஆலயம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் என்றாலும், அது பூர்த்தியானது புளியங்குடியில்தான் என்கிறது தல புராணம். எனவே ‘தட்சிண அகோபிலம்’ என்றும் அழைக்கப்படுகிறது இந்தத் திருத்தலம். 

புளியங்குடி தலத்தில் நரசிம்மர் மகாலட்சுமி தாயாரை தன் மடியில் அமர்த்தி, இடது கரத்தால் அணைத்தபடி கிழக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இவரை ஒருமுறை தரிசித்தாலே போதும்  உடனேயே நம் கவலைகள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி பிறந்துவிடும்.

லட்சுமி நரசிம்மர்
லட்சுமி நரசிம்மர்

இந்தத் திருத்தலத்தில் சங்கடரஹர சதுர்த்தி நரசிம்ம பிரதோஷமாகக் கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலத்தில் மூலவருக்கும், மகாமண்டத்தில் உள்ள படிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பிரதோஷம் அன்று நந்தியின் கொம்புகளுக்கு மத்தியில் சிவபெருமானைக் காண்பது போல நரசிம்ம பிரதோஷத்தன்று படியின் மேல் இறைவனைக் காண்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  நரசிம்ம பிரதோஷம் மற்றும் சந்தியா வேளையில் நரசிம்மரை இந்தத் தலத்தில் வழிபட்டால் சிறப்புப் பலன்களைப் பெறலாம் என்கிறார்கள் பக்தர்கள்.

எதிரிகளால் பாதிக்கப்படுபவர்கள், வயிற்றுவலியால் அல்லல்படுபவர்கள், கடன் சுமையால் நிம்மதி இழந்தவர்கள், கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நரசிம்ம பிரதோஷத்தன்று ஒருமுறை புளியங்குடி நரசிம்மரைத் தரிசித்தாலே போதும். நம் துயரங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்களைப் பெற முடியுமாம். நரசிம்மரின் சினம் தணிந்த தலம் என்பதால் இங்கு கோபமுள்ளவர்கள் வழிபட்டு அமைதியாகலாம். 

worshipathome
worshipathome

சுவாதி நட்சத்திரத்தன்று இங்கு நரசிம்மரை வழிபட்டால் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு குபேர சம்பத்து கிடைக்கும் என்கிறார்கள். மேலும் புளியங்குடி நரசிம்மரை புதன் கிழமையன்று வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் நீங்கி அரசாளும் யோகம் கிடைக்கும்.

புதன்கிழமை சுக்ர ஓரையில் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் நரசிம்மருக்கு அர்ச்சனை செய்பவர்களுக்குத் திருமணத் தடைகள் விலகி சுப காரியங்கள் விரைவில் நடைபெறுகின்றன.

நரசிம்மர், பானகப் பிரியர். எனவே, பானகம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகித்தால் நினைத்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

நரசிம்மர்
நரசிம்மர்

அதனால், இங்கு பக்தர்களுக்குத் தித்திப்பான தீர்த்தம் வழங்கப்படுகிறது. அவதாரம் பூர்த்தியான அதி உன்னதத் தலமான இங்கு நரசிம்மரை வழிபட்டால், அகோபிலத்தில் உள்ள நவ நரசிம்மர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதும் ஐதிகம்.

அடுத்த கட்டுரைக்கு