Published:Updated:

நோய் தீர்க்கும் செய்துங்கநல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

சிவபெருமான்
சிவபெருமான்

இங்கு வழிபட்டால் ஆன்ம பலம் பெருகும். சனிக்கிழமைதோறும் நவகிரங்களைச் சுற்றி வணங்கினால், நவகிரக தோஷம் நீங்கும்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டுவந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

தெந்தில்லை என்று போற்றப்படும் செய்துங்க நல்லூர் தலத்தில் வழிபட்டால் ஆன்ம பலம் பெருகும். சனிக்கிழமை தோறும் நவகிரங்களை...

Posted by Sakthi Vikatan on Friday, April 17, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன் `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, செய்துங்கநல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர் திருக்கோயில்.

பதஞ்சலி முனிவருக்கும் வியாக்கிரபாதீஸ்வரருக்கும், நடராஜப் பெருமான் நாட்டியமாடி திருக்காட்சி தந்தருளிய தலம், செய்துங்கநல்லூர். எனவேதான், இவ்வூர் தென்தில்லை என அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் தற்போது வியாக்கிரபாதீஸ்வரர் சிவனாகவும், சிவகாமி அம்மையார் தாயாராகவும் உள்ளனர். சிறந்த சிவ பக்தனான ஜெயதுங்க பாண்டியன், சிவனை நோக்கி வணங்கி நின்றான். அப்போது, அங்கே வியாக்கிரபாதீஸ்வரரும், பதஞ்சலி முனிவரும் தவமிருந்த காட்சி இவருக்குத் தென்பட்டது.

செய்துங்க நல்லூர்
செய்துங்க நல்லூர்

சிவபெருமானுக்கு வியாக்கிர பாதீஸ்வரர், கூழையாற்று நாதர், திருவரங்கேஸ்வரர், திருப்புலீஸ்வரமுடையார் போன்ற பெயர்கள் உண்டு. தாயார், பெரிய நாச்சியார் மற்றும் சிவகாமி அம்மை என்று அழைக்கப்படுகிறார். இந்த ஊரில் உள்ள கால்வாய், வடக்கிலி ருந்து தெற்கு நோக்கி பாய்வதால், இதை தட்சிண கங்கை என்றும் அழைக்கிறார்கள்.

செய்துங்கநல்லூர் என்றால் சேய் தூங்க நல்லூர். அதாவது குழந்தைகள் (சேய்) தூங்க நல்லூர் என்று பெயரை பிரித்துக் கூறுவார்கள். இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி, வியாக்கிரபாதீஸ்வரருக்கும் பதஞ்சலிக்கும் மோன நிலையில் அருள் உபதேசம் செய்வதாக ஐதிகம்.

எனவே, கல்வி பெருகவும் நினைவாற்றல் பெருகவும், உயர்ந்த நிலையை அடையவும் இந்த தட்சிணாமூர்த்தியை வணங்கிச் செல்கிறார்கள். இந்தக் கோயிலில் பிரதோஷம், திருவாதிரை, நவராத்திரி, சிவராத்திரி, அஷ்டமி பைரவர் பூஜை, சங்கடகர சதுர்த்தி பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெறும்.

யோக நிலையில் இங்கு தட்சணமூர்த்தி இருப்பதால், கல்வி பெருகி, நோய் அறும்.

இந்தக் கோயிலின் தல விருட்சம் வில்வம். சிவபெருமான் சந்நிதி பின்புறம் உள்ளது. இங்கு மகாலிங்க மரம் என்று ஒன்றுள்ளது. இந்த மரம் மருத்தவ குணம் வாய்ந்தாகும். இங்கு சித்த மருந்து தயார் செய்பவர்கள், எந்த நோயாக இருந்தாலும் மகாலிங்க மரப் பட்டையை எடுத்து அதனோடு சேர்த்துக்கொள்கிறார்கள்.

இங்கு ஈசனை வழிபட்டால் ஆன்ம பலம் பெருகும். சனிக்கிழமை தோறும் நவகிரங்களைச் சுற்றி வணங்கினால், நவகிரக தோஷம் நீங்கும். ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்கள் அகலும். யோக நிலையில் இங்கு தட்சணமூர்த்தி இருப்பதால் கல்வி பெருகும், ஆரோக்கியம் மேம்படும். இங்குள்ள சிவனை வணங்கினால் மரண பயம் நீங்கி 16 செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு