Published:Updated:

சிக்கல்களைத் தீர்க்கும் சிக்கல் சிங்காரவேலர்... இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #worshipathome

சிக்கல் சிங்காரவேலர்
சிக்கல் சிங்காரவேலர்

வேல் வாங்கியவுடன், சிங்காரவேலவரின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

இல்லம் தேடிவரும், சிக்கல்களைப் போக்கியருளும் சிக்கல் சிங்காரவேலர் தரிசனம்...

Posted by Sakthi Vikatan on Monday, April 13, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயில்.

நாகை மாவட்டம் சிக்கலில் புகழ்பெற்ற வேல்நெடுங்கன்னியம்மன் நவநீதேஸ்வர சுவாமி திருக்கோயில் உள்ளது. கோயிலின் ஒரு வளாகத்தில் நவநீதேசுவர் சந்நிதியும், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியும் மற்றொரு வளாகத்தில் விஷ்ணுவின் சந்நிதியும் அமைந்துள்ளது.

worshipathome
worshipathome

சமயக் குரவர்களால் பாடல்பெற்ற பழைமைவாய்ந்த இக்கோயிலில் சிங்காரவேலவர் வீற்றிருக்கும் சந்நிதி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தலத்தில் எழுந்தருளும் சிங்காரவேலவர், அன்னை வேல்நெடுங்கன்னியிடம் வேல் வாங்கிக்கொண்டு திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாகக் கந்தபுராணம் கூறுகிறது.

இந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழாவின்போது அன்னையிடமிருந்து வேல்வாங்கும் வைபவம் நடைபெறுகிறது. வேல் வாங்கியவுடன், சிங்காரவேலவரின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும்.

இந்த கிராமத்தில் வசிஷ்டர் தங்கியிருந்து காமதேனுவின் வெண்ணெயால் சிவலிங்க உருவம் அமைத்து பூஜித்தார். பூஜை முடிவில் சிவலிங்கம் எடுக்க முடியாமல் சிக்கிய காரணத்தால் இந்த ஊர் சிக்கல் என்று பெயர் பெற்றது.

வேல் வாங்கியவுடன், சிங்காரவேலவரின் திருமேனி எங்கும் வியர்வை சிந்தும்.

இந்தக் கோயிலில் முருகப் பெருமான் அம்மை அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்புரிகிறார். அதனால், சிங்காரவேலர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். சிக்கல் சிங்காரவேலரைத் தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு