Published:Updated:

யம பயம் நீங்கும்... சனி தோஷம் விலகும்!

அகத்தீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
அகத்தீஸ்வரர்

ஒரு திருத்தலத்துக்குச் சென்று வந்த பிறகு, நம் வாழ்வில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பெறுகிறோம் எனில் அது ஒரு பாக்கியம்.

நம் நாடெங்கும் பல்வேறு புண்ணியத் தலங்களும் பரிகாரத் தலங்களும் உள்ளன. இவை யாவும் மனித குலத்துக்குத் தெய்வத்தால் வழங்கப்பட்ட வரப்பிரசாதங்கள்.

துன்பம் நேரும்போது சென்று சரணடைந்து தொழுவதற்காக அமைந்திருக்கும் ஆற்றல் மையங்கள். ஒரு திருத்தலத்துக்குச் சென்று வந்த பிறகு, நம் வாழ்வில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் பெறுகிறோம் எனில் அது ஒரு பாக்கியம். அப்படியொரு பாக்கியம் அருளும் தலம்தான் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ள திருக்கொடியலூர். இங்குதான் ஶ்ரீஆனந்தவல்லி சமேத ஶ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

யம பயம் நீங்கும்... சனி தோஷம் விலகும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யமதர்மனும் சனீஸ்வரனும் அவதரித்த தலம் இதுவெனச் சொல்லப்படுகிறது. சனி தோஷமும் யம பயமும் பீடிக்கும் காலகட்டமே ஒருவருக்கு வாழ்வில் மிகவும் கஷ்டமான காலகட்டம். அப்படிப்பட்ட காலகட்டத்தை ஆட்சிசெய்யும் சனியும் யமனும் இந்தத் தலத்தில் அனுக்கிரக மூர்த்திகளாக விளங்குகிறார்கள். அதனால்தான் இத்தலத்தில் கால்வைத்த உடனேயே அனைத்துத் துன்பங்களும் நீங்கிவிட்ட உணர்வு மேலிடுகிறது.

சூரியனுடைய மனைவியரான உஷாதேவியும் சாயாதேவியும் இத்தல இறைவனிடம் புத்திர பாக்கியம் வேண்டி வழிபட்டனர். அதற்கு இறைவன் “உங்கள் கணவரோடு பூலோகம் சென்று திருமீயச்சூரில் தீர்த்த நீராடி, என்னையும் லலிதாம்பிகையையும் பூஜித்து வாருங்கள். உங்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்கும்” என வரம் அளித்தார்.

அருள்மிகு அகத்தீஸ்வரர், அருள்மிகு ஆனந்தவல்லி
அருள்மிகு அகத்தீஸ்வரர், அருள்மிகு ஆனந்தவல்லி

அதன்படியே சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் திருமீயச்சூருக்கு வந்து சூரிய புஷ்கரணியில் நீராடி பூஜை செய்தனர். அதன் பயனாக உஷாதேவிக்கு யமதர்மனும் சாயாதேவிக்கு சனீஸ்வரனும் பிறந்தனர்.

திருமீயச்சூரில் வழிபட்ட பிறகு சூரியன், உஷாதேவி, சாயாதேவி மூவரும் கூடிய ஊர் என்பதால் இத்தலம் ‘கூடியலூர்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப் போக்கில் மருவி ‘கொடியலூர்’ என்றானது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஹயக்ரீவர் கூறியபடி திருமீயச்சூர் வருகை தந்த அகத்தியர், லலிதாம்பிகையை தரிசித்து வணங்கினார். அங்கு அன்னையை மனமுருக வேண்டி லலிதா நவரத்தின மாலை பாடி அம்பாளின் பேரருளைப் பெற்றார். அதன்பின் அவர் சிவபூஜை செய்ய எண்ணிக் கொடியலூருக்கு வந்தார். இத்தலத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் ‘அகத்தீஸ்வரர்’ என்றழைக்கப்படுகிறார்.

சனிபகவான், ஶ்ரீ பைரவர்
சனிபகவான், ஶ்ரீ பைரவர்

ஈசனோடு அன்னை லலிதாம்பிகையையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். தேடிவந்து வணங்கும் பக்தர்களுக்கு அருள் தரும் அம்மைக்கு ‘ஆனந்தவல்லி’ எனப் பெயரிட்டார். திருமீயச்சூர் ஆலயத்தில் லலிதா பரமேஸ்வரி தவக்கோலத்தில், மனோன்மணி சொரூபமாக அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறாள். கொடியலூரில் லலிதா பரமேஸ்வரி ஆனந்தவல்லியாக, பரிபூரணியாகக் காட்சித் தந்து அருளாசி வழங்குகிறாள்.

அன்னை ஒரே எல்லையில் திருமீயச்சூரில் அமர்ந்த கோலத்திலும் கொடியலூரில் நின்ற கோலத்திலும் தரிசனம் அருள்வது சிறப்பாகும். இக்கோயிலின் தென் புறத்தில் யமதர்ம ராஜனும், வடபுறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பம்சம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு வழிபட சனிதோஷம் நீங்குவதோடு, யம பயமும் நீங்கி தீர்க்க ஆயுள் உண்டாகும் என்கின்றனர் பக்தர்கள்.

கோயில் சிவாசார்யரிடம் பேசினோம்...

“வியாழக் கிழமைதோறும் யமதர்மனுக் கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக் கும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப் படுகின்றன. தேய்பிறை அஷ்டமி, பிரதோஷம் உட்பட அனைத்துப் பூஜை களும் இங்கு சிறப்பாக நடைபெறுகின்றன.

ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ பாலசுப்பிரமணியர்
ஶ்ரீ விநாயகர், ஶ்ரீ பாலசுப்பிரமணியர்
ஶ்ரீ எமதருமர், ஶ்ரீ விஜயலட்சுமி
ஶ்ரீ எமதருமர், ஶ்ரீ விஜயலட்சுமி

இங்குள்ள யமதர்மன், சனீஸ்வரர், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருள் களையும், இன்பத்தையும் திரும்பப் பெறலாம் என்பது நம்பிக்கை.

ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகலத் தடைகளையும் இந்தத் தலம் களைகிறது. இங்கு வந்து இறைவனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால், அனைத்து பிரச்னைகளும் நீங்கும். இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரப்பேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு அருளும் சிறப்புத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங் களும் அகலும்” என்றார்.

விமான கோபுரம்
விமான கோபுரம்

நீங்களும் ஒருமுறை திருக்கொடியலூர் சென்று வழிபட்டு, வாழ்வு செழிக்க வரம் பெற்று வாருங்கள்.

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: திருக்கொடியலூர்

ஸ்வாமி: அருள்மிகு அகத்தீஸ்வரர்

அம்பாள்:அருள்மிகு ஆனந்தவல்லி.

ஸ்தலச் சிறப்புகள்:

அருள்மிகு லலிதாம்பிகை, பரிபூரணியாய் அருளும் திருத்தலம். யமதருமனும், சனி பகவானும் அனுக்கிரக மூர்த்தியராய் திகழும் க்ஷேத்திரம். இங்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளை வழிபட்டால் புத்திரப்பேறு வாய்க்கும். தோஷங்கள் நீங்கும்.

எப்படிச் செல்வது ?

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் 25 கி.மீ தொலைவில் பேரளம் உள்ளது. இங்கிருந்து மேற்கே 2 கி.மீ தொலைவில் திருமீயச்சூர் திருத்தலமும், அதன் அருகிலேயே கொடியலூர் திருத்தலமும் அமைந்திருக்கிறது. பேரளத்திலிருந்து மினி பஸ் வசதி மற்றும் ஆட்டோ வசதியுண்டு.

ஏழு வகை விமானங்கள்!

மானம் என்றால் அளவு என்பர். விமானம் என்றால், மேலான அளவு என்று பொருள். அவற்றின் இறையம்சம் காரணமாக `ஶ்ரீ' எனும் அடைமொழி சேர்ந்து ஶ்ரீவிமானம் என்று பெயர் பெற்றன, திருக்கோயிலின் விமானங்கள்.

சிவாகமங்கள் ஏழுவகை கோயில் விமானங்களைக் குறிப்பிடுகின்றன. அவை: விஜயம், ஶ்ரீபோகம், ஶ்ரீவிலாசம், ஸ்கந்த காந்தம், ஶ்ரீகரம், ஹஸ்தி பிருஷ்டம், கேசரம்.

யம பயம் நீங்கும்... சனி தோஷம் விலகும்!

அனுதினமும் பூஜையில் விமானத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சிக் கலசம் வரையிலான பகுதிகளின் பெயர்களைச் சொல்லி பூஜிக்க வேண்டும் என்று பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன. ஶ்ரீவிமானத்தின் அங்கங்கள் (கீழிருந்து மேலாக): அதிஷ்டானம், உபபீடம், கமலம், பட்டிகை, கால்கள், கோட்டம், கும்பபஞ்சரம், மகரதோரணம், கபோதவரி, தளம், நிலை, கிரீவம், சிகரம், கலசம்.

குறிப்பிட்ட காலம் வரையிலும் விமானங்கள் பெரிய அளவிலும், கோபுரங்கள் சிறியளவிலும் அமைக்கப்பட்டன. தஞ்சை பெரிய கோயில், தாராசுரம், திரிபுவன கம்பகரேசுவரம் ஆகிய தலங்களில் விமானங்களே பிரதானம்.

ஓவியம்: கார்த்தியாயினி