Published:Updated:

`தடைகள் தகர்க்கும் முத்துவேலாயுத சுவாமி..!' - இல்லம் தேடிவரும் இறை தரிசனம் #Worshipathome

முத்துவேலாயுத சுவாமி
முத்துவேலாயுத சுவாமி

ஒரே ஆலயத்தில் முத்து வேலாயுதசுவாமியும் அய்யனாரும் இங்கு அருள்பாலிப்பது மிகவும் விசேஷம் என்கிறார்கள். இது இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயமாகும்.

கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச் செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்ல முடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, தண்டந்தோட்டம் முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில்.

கும்பகோணம் வட்டம், கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் அருகே 4 கி.மீ தொலைவில் உள்ளது தண்டந்தோட்டம் கிராமம். இந்தக் கிராமத்தில் புகழ்பெற்ற நடனபுரீஸ்வரர் திருத்தலம் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் நடனபுரீசுவரரும் சிவகாமசுந்தரியும் அருள்புரிகிறார்கள்.

முத்துவேலாயுத சுவாமி
முத்துவேலாயுத சுவாமி

இதே ஊரில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பு மிக்க ஆலயம்தான் ஸ்ரீ முத்துவேலாயுதசுவாமி திருக்கோயில். ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமியை வழிபட்டால் வாழ்வில் உள்ள தடைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

ஒரே தலத்தில் ஐயனாரும் முத்து வேலாயுதசுவாமியும் அருள்பாலிக்கிறார்கள் பக்தர்களுக்கு.

பொதுவாக, ஊருக்கு வெளியே எல்லை தெய்வமாகத்தான் ஐயனார் கோயில் அமைந்திருக்கும். ஆனால், தண்டந்தோட்டத்தில் மட்டும் ஊருக்கு நடுவே அமைந்திருக்கிறது.

300 வருடங்களுக்கு முன்பு வேதம் படித்த அந்தணர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதியாக இது இருந்திருக்கிறது. அந்நியப் படையெடுப்புகளால் அவர்கள் கேரளாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். ஆனால், ஒரு சாது மட்டும் எங்கும் செல்லாமல் இங்கேயே தங்கியிருந்தார். தெய்விக அருள் நிறைந்தவர் அவர்.

அப்போது அவரது கனவில் எழுந்தருளிய முருகப் பெருமான், ‘ஐயனார் கோயில் இருந்த இடத்தில் முத்து வேலாயுதசுவாமியாக என்னை வழிபடவும்’ என்று கூறிவிட்டுச் சென்றார்.

அந்தச் சந்நியாசி ஊர் மக்களிடம் கனவைக் கூறினார். அப்போதிருந்து முத்து வேலாயுதசுவாமியை மக்கள் வழிபடத் தொடங்கினார்கள்.

சாதி, மதம் கடந்து தண்டந்தோட்டத்தில் முத்து வேலாயுதசுவாமி வழிபடப்படுகிறார்.

மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் முத்துவேலாயுதசுவாமி. கருவறையில் முருகப் பெருமான் முத்து வேலாயுதசுவாமியாக அருள்புரிகிறார். அர்த்த மண்டபத்தில் அய்யனார் அருள்புரிகிறார்.

ஒரே ஆலயத்தில் முத்து வேலாயுதசுவாமியும் அய்யனாரும் இங்கு அருள்பாலிப்பது மிகவும் விசேஷம் என்கிறார்கள். இது இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயமாகும்.

worshipathome
worshipathome

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் பரிவேட்டைத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும்...

ஒருமுறை முத்துவேலாயுத சுவாமியை வழிபட்டால் போதும். நம் வாழ்வில் உள்ள தடைகள் யாவும் விலகிப்போகும்.

அடுத்த கட்டுரைக்கு