Published:Updated:

மருந்தாகும் வெட்டிவேர் பிரசாதம்... ஆரோக்கியம் அருளும் திருஊட்டத்தூர் நடராஜர் மார்கழி தரிசனம்!

திருஊட்டத்தூர்

உடல் பிணிகளை, குறிப்பாக சிறுநீரகப் பிரச்னைகளைப் போக்கும் தலமாகத் திகழ்கிறது, ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்

மருந்தாகும் வெட்டிவேர் பிரசாதம்... ஆரோக்கியம் அருளும் திருஊட்டத்தூர் நடராஜர் மார்கழி தரிசனம்!

உடல் பிணிகளை, குறிப்பாக சிறுநீரகப் பிரச்னைகளைப் போக்கும் தலமாகத் திகழ்கிறது, ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்

Published:Updated:
திருஊட்டத்தூர்

உள்ளத்துப் பிணிகள் மட்டுமல்லாமல் உடல் பிணிகளையும் போக்குபவை கோயில்கள். கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் மனதில் அமைதி நிலவும்; நோய்கள் குணமாகி ஆரோக்கியம் பெருகும் என்பது அடியவர்களின் நம்பிக்கை. அத்தகைய மகிமை வாய்ந்த தலங்களுள் ஒன்றுதான் திருஊட்டத்தூர்.

திருஊட்டத்தூர்
திருஊட்டத்தூர்

உடல் பிணிகளை, குறிப்பாக சிறுநீரகப் பிரச்னைகளைப் போக்கும் தலமாகத் திகழ்கிறது, ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில் என்பது பக்தர்களின் கருத்து. மேலும் இந்திரன், தான் இழந்த பதவியை வேண்டிக்கொண்டு மீண்டும் தன் பதவியை அடைந்த தலம் இது என்பதால் பக்தர்களும் இங்கு வந்து வேண்டிக்கொள்ள இழந்த பதவி மீண்டும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருச்சியிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது பாடாலூர். இந்த ஊரிலிருந்து இடதுபுறம் பிரியும் சாலையில் 5 கி.மீ தொலைவுக்குப் பயணித்தால் திருஊட்டத்தூரை அடையலாம். உள்ளத்துக்கு ஊட்டம் தரும் ஊர்தான், ஊட்டத்தூர். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால், `ஊற்றத்தூர்’ என்றழைக்கப்பட்டுப் பின்னாளில் ஊட்டத்தூர் என்றானது. தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று என்பது இதன் சிறப்பு. வேறு ஒரு தலத் தேவாரப் பாடலில் பிரிதொரு தலத்தைப் பற்றிய சிறப்பை வைத்துப் பாடியிருப்பதால்தான் அதுவே `வைப்புத் தலம்’ என்று போற்றப்படுகிறது.

மார்கழி தரிசனம்
மார்கழி தரிசனம்

அப்பர் பெருமான், சுத்தரத்தினேஸ்வரரை தரிசிக்க எண்ணி ஊட்டத்தூருக்குப் பயணித்தார். அவர் ஊரின் எல்லையை அடைந்ததும் அப்படியே திகைத்து நின்றுவிட்டார். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவருக்கு முன்பாக நீண்டிருந்த பாதை முழுவதும் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. மேற்கொண்டு அடியெடுத்துவைத்தால் சிவலிங்கங்கள் மீது கால்களை வைக்கவேண்டியிருக்கும். அப்படியே விழுந்து ஊட்டத்தூரை வணங்கினார். எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்துப் பாடினார். அவர் எல்லையில் நின்று பாடிய இடம்தான் பாடலூர் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் பாடாலூர் என்றானது.

கி.பி 7-ம் நூற்றாண்டுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இந்தத் தலம் ராஜராஜ சோழன் காலத்தில் கற்கோயிலாக எழுப்பப்பட்டது. அவருக்குப் பிறகு அவருடைய மகன் முதலாம் ராஜேந்திர சோழன், அவரின் பேரன் ராஜாதிராஜன் ஆகியோர்வரை இந்தக் கோயில் சீரும் சிறப்புமாக பராமரிக்கப்பட்டிருக்கிறது.

சுத்த ரத்தினேஸ்வரர்
சுத்த ரத்தினேஸ்வரர்

ஒருமுறை ராஜராஜ சோழன் நோய்வாய்ப்பட்டதாகவும், இந்தத் தல தீர்த்தத்தைப் பருகித்தான் குணமடைந்தாராம். அதனால்தான் ராஜராஜன் இங்கு கோயில் எடுப்பித்தான் என்கிறது தலபுராணம். இந்தத் தல மகாமண்டபத்தின் மேற்கூரையில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 15 திதிகள் ஆகியவை சதுர வடிவில் செதுக்கப்பட்டுள்ளன. அருகிலேயே நவகிரகங்களும் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் நின்று வேண்டிக்கொண்டால் நவகிரக தோஷங்கள் யாவும் விலகி, சகல மங்கலமும் வந்துசேரும் என்பது ஐதிகம்.

அனைத்து நட்சத்திரக்காரர்களுக்குமான பரிகாரத்தலமாக விளங்கும் இந்தத் தலத்துக்கு வந்து இறைவனை தரிசித்து வேண்டிக்கொள்ள திருமணத் தடை அகலும்; புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்தத் தலத்தில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

பஞ்சநதன நடராஜரை வழிபட்டுவிட்டு, சுத்த ரத்தினேஸ்வரரை வேண்டிக்கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிட்டும்; பதவி உயர்வு பெறலாம்.
- தல மகிமை

இந்தத் தலத்து தீர்த்தம் பிரம்மதீர்த்தம் எனப்படுகிறது. ஆணவம் கொண்ட பிரம்மன் ஈசனின் முடியைக் காண முடியாமல் தாழம்பூ துணையுடன் பொய் கூறினான். அதனால், ஈசனாரால் தண்டிக்கப்பட்டான். பிறகு, இந்தத் தலத்தில்தான் ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றான். அதனால், பிரம்மனின் சாபத்தைத் தீர்த்த ஈசனிடம் வேண்டிக்கொண்டால் தலையெழுத்தை மாற்றி வாழ்க்கையைச் சிறப்பாக்குவான் என்கிறார்கள்.

இந்தத் தலத்தில் அருள்பாலிக்கும் பஞ்சநதன நடராஜர் மிகவும் விசேஷமானவர். இந்தப் பஞ்சநதன நடராஜரை வேண்டித்தான் இந்திரன் தனது இழந்த பதவியைத் திரும்பவும் பெற்றான் என்கிறது தலவரலாறு. அதனால், பஞ்சநதன நடராஜரை வழிபட்டுவிட்டு, சுத்த ரத்தினேஸ்வரரை வேண்டிக்கொண்டால் இழந்த பதவி மீண்டும் கிட்டும்; பதவி உயர்வு பெறலாம் என்பது ஐதிகம். இந்தப் பஞ்சநதன நடராஜர் உடல்நலக் கோளாறுகளைப் போக்கி நல்லருள்புரிகிறார். குறிப்பாக சிறுநீரகப் பிரச்னைகளைப் போக்குகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பஞ்சநதன நடராஜர்
பஞ்சநதன நடராஜர்

பஞ்சநதன நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி, பிரம்ம தீர்த்தத்தால் அபிஷேகம் செய்தபிறகு தீர்த்தம் மற்றும் மாலையை வாங்கிச் செல்கிறார்கள் பக்தர்கள். வெட்டிவேர் மாலையில் 48 துண்டுகள் இருக்கும். அதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு வெட்டிவேர் வீதம் எடுத்து பிரம்மதீர்த்த நீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாள்கள் பருகி வர சிறுநீரகப் பிரச்னை காணாமல் போய்விடும் என்கிறார்கள் நம்பிப் பலன்பெற்ற பக்தர்கள்.

இவ்வாறு வேண்டிக்கொண்டு சிறுநீரகப் பிரச்னை தீர்ந்ததும் மீண்டும் இந்தத் தலத்துக்குவந்து நடராஜரை மனமுருகி வேண்டி நன்றி செலுத்துகிறார்கள் பக்தர்கள். சிறுநீரகப் பிரச்னை மட்டுமல்லாமல் உள்ளப் பிணிகள், தோஷங்கள், கிரக கோளாறுகள் என்று அனைத்து பிரச்னைகளையும் போக்கி நல்லருள் புரிகிறார் பஞ்சநதன நடராஜர்.

சிறுநீரகப் பிரச்னையைப் போக்கியருளும் திருஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் மகிமைகள்... சக்தி விகடன் ’மார்கழி தரிசனம்’ யாத்திரையில் பங்குகொள்ள... http://bit.ly/margazhitharisanam

Posted by Sakthi Vikatan on Monday, December 16, 2019

வழிபட்டால் எல்லாவிதமான நன்மைகளும் ஏற்படும். இதே மார்கழி மாதம் மாலவனுக்கும் உகந்தது. நடராஜரையும் மாலவனையும் மார்கழி மாதத்தில் ஒருசேர தரிசிக்கும் வண்ணம் சக்தி விகடன் சார்பில், `மார்கழி தரிசனம்’ ஜனவரி 3, 4, 5 ஆகிய மூன்று நாள்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.