Published:Updated:

மாசி அமாவாசை... காலசர்ப்ப தோஷம்... வாருணியோகம்! - கடைப்பிடித்துப் பலன் பெறுவது எப்படி?

சிவபெருமான்
சிவபெருமான்

நாளைய கரணம் நாகவ கரணம். நாகம் என்றாலே அது பாம்பையும் ராகுவையும் குறிக்கும். ராகுதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டியது சிவபெருமானையே. சதய நட்சத்திரத்தை நூறு வைத்தியர்களின் கூட்டம் என்று சொல்வதுண்டு.

ராசிக்கட்டத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுவுக்குள்ளாக இருந்தால் அது, கால சர்ப்ப தோஷம் என்பது ஜோதிட விதி. தற்போது தனுசில் கேதுவும் மிதுனத்தில் ராகுவும் இருக்க, அத்தனை கிரகங்களும் அவற்றுக்கிடையே உள்ள வீடுகளில் உள்ளன. எனவே, நாளை கால சர்ப்ப தோஷம் உண்டாகுகிறது. இத்தகைய காலத்தில், நாளை (23.02.2020) மாசிமாத அமாவாசையும் வருகிறது.

வாருணியோகம்
வாருணியோகம்

பகல் 2.10 வரை அவிட்ட நட்சத்திரமும், அதன்பிறகு சதய நட்சத்திரமும் வருகிறது. மேலும், நாளை சிவநாம நித்திய யோகமும் நாகவ கரணமும் இணைந்துள்ளது. இத்தனை சிறப்புகளையுடைய இந்த நாளின் முக்கியத்துவம் என்ன என்று வித்யாவாரிதி சுப்பிரமணிய சாஸ்திரிகளிடம் கேட்டோம்.

”சதய நட்சத்திரத்துக்குரிய தேவதை வருணன். வருணனின் மனைவியே வாருணி என்கின்றன சாஸ்திரங்கள். வாருணியே அமிர்தமயமான நீராக இருப்பவள். எனவே, அமாவாசையுடன் சதய நட்சத்திரம் இணைந்துவரும் தினமே வாருணியோக தினம் என்று சொல்லப்படுகிறது.

அமாவாசை
அமாவாசை

மேலும், நாளைய கரணம் நாகவ கரணம். நாகம் என்றாலே அது பாம்பையும் ராகுவையும் குறிக்கும். ராகுதோஷம் உள்ளவர்கள் வழிபட வேண்டியது சிவபெருமானையே. சதய நட்சத்திரத்தை நூறு வைத்தியர்களின் கூட்டம் என்று சொல்வதுண்டு. எனவே, விஷ சந்துக்களால் பிரச்னை உள்ளவர்கள், நாளைய தினம் தவறாமல் சிவனை வழிபட வேண்டும். மேலும், ராகு தோஷமுள்ளவர்கள் நாளை சிவபெருமானை தவறாமல் வழிபாடு செய்வதன்மூலம் தோஷ நிவர்த்திபெறலாம்.

வழக்கமாக அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு செய்பவர்களும் தவறாமல் நாளை அவற்றைச் செய்து, மேலும் பலன்பெறலாம். ஆண்டில் பிற மாதங்களில் தர்ப்பணம் முதலியன செய்ய இயலாதவர்கள், நாளை அவற்றைச் செய்வதன் மூலம் குறைகள் நீங்கப்பெறலாம். பித்ருக் காரியங்களை மதியவேளையில் செய்வதே உத்தமம். நாளை மதியம் சதய நட்சத்திரம் சேர்ந்து வருவதால், செய்யும் சடங்குகளின் பலன் பன்மடங்காக உயரும்.

குறிப்பாக, குழந்தை வரம் வேண்டுபவர்கள், நோய்களால் துன்பப்படுபவர்கள், நாளை பித்ருக்காரியங்களைச் செய்ய அதன் பலன் பன்மடங்கு உயர்ந்து, சகல நன்மைகளும் கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.

முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரி
முனைவர் வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரி

ஓர் ஆண்டில் 96 சிரார்த்தங்கள் செய்ய வேண்டும் என்பது விதி. அவ்வாறு செய்வதை ஷண்ணவதி ஸ்ரார்த்தம் என்று கூறுவார்கள். அவ்வாறு செய்பவர்கள், இந்த வாருணியோகத்தைப் பொருட்படுத்தத் தேவையில்லை. அவ்வாறு செய்யாதவர்கள், வாருணி யோக தின வழிபாட்டைக் கடைப்பிடிப்பதன் மூலம் ஷண்ணவதி ஸ்ரார்த்தம் செய்த பலனைப் பெறலாம்.

மேலும் ஆலய வழிபாடு, பசுமாட்டுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் முதலியன தருவது ஆகியன மிகுந்த பலன்களைத் தரும். வினைப்பயன்களால் உண்டாகும் துன்பங்கள் தீர்வதற்காகவே இத்தகைய யோக தினங்களை நம் முன்னோர்கள் கண்டு வகுத்து வைத்துள்ளனர். எனவே, நாளை தவறாமல் வாருணி யோக தினத்தைக் கடைப்பிடித்து நற்பலன்களைப் பெறலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு