திருத்தலங்கள்
குருப்பெயர்ச்சி பலன்கள்
Published:Updated:

அபூர்வ மூலிகைகளோடு அற்புதமாய் நடந்தேறியது ஶ்ரீவராஹி ஹோமம்!

vikatan
பிரீமியம் ஸ்டோரி
News
vikatan

வாராஹி ஹோமம்

வாராஹி, ஆதிசக்தியின் படைத் தலைவி. அசுர சக்திகள் - தீய சக்திகளை வதைத்து அடியார்களை ரட்சிப்பவள். இந்த அன்னையைப் போற்றி வழிபடும் அன்பர்களுக்கு, சகல காரியங்களிலும் வெற்றி உண்டாகும். ஶ்ரீவாராஹி வழிபாடு, அனைத்து பிரச்னை களிலிருந்து விடுதலை தரும் வழிபாடாகவே அமையும்.

அபூர்வ மூலிகைகளோடு 
அற்புதமாய் நடந்தேறியது ஶ்ரீவராஹி ஹோமம்!

குறிப்பாக மகா வாராஹி ஹோமம் செய்து வழிபட்டால், நம்முடைய சங்கடங்கள், மனச் சஞ்சலங்கள் யாவும் விலகுவதோடு, வாழ்வில் சகல விதமான செல்வ வளங்களும் சேரும். அவ்வகையில் சக்திவிகடன் வாசகர்களின் நன்மையை முன்னிட்டும் அவர்களின் உறவு, சுற்றத்தார் மற்றும் நட்புகளின் நலம் நாடியும் சென்னை - கோடம்பாக்கம் ஶ்ரீதேவி கருமாரி அம்மன் மகா பிரத்யங்கிரா தேவி கோயிலில் வாராஹி மகாஹோமம் நடத்தப்பட்டது.

தெய்வச் சாந்நித்தியம் நிறைந்த ஆலயம் இது. இங்கு 15.10.21 - விஜய தசமி நன்னாளில், காலை 10 மணிக்கு ஹோம வைபவங்கள் தொடங்கின. கோயிலில் அருளும் வாராஹி, குட்டிக் கருக்காத்தம்மன், பிரத்யங்கரா தேவி, குலசை முத்தாரம்மன், பதினெட்டாம்படிக் கருப்பு, ஐயப்ப சாமி, கருமாரியம்மன், சாயிபாபா உள்ள சகல தெய்வங்களுக்கும் சிறப்பு ஆராதனையுடன் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. தொடர்ந்து ஶ்ரீகருமாரியின் உத்தரவோடு ஶ்ரீவாராஹி மகாஹோமம் தொடங்கியது.

அபூர்வ மூலிகைகளோடு 
அற்புதமாய் நடந்தேறியது ஶ்ரீவராஹி ஹோமம்!
SAI RAMANATHAN

வாசகர்களின் பெயர்-நட்சத்திரத்துடன் அவர்களின் பிரார்த்தனைகள் முறைப்படி சங்கல்பிக்கப்பட்டன. வாராஹி மூலமந்திரத் தோடு பல்வேறு மூலிகைகளும் அபூர்வ திரவியங்களும் ஹோமத்தில் சமர்ப்பிக்கப் பட்டன. சரபேஸ்வர, சூலினி, பிரத்யங்கிரா நாமார்ச்சனைகளும் நடைபெற்றன. பின்னர் பூர்ணாகுதியோடு சிறப்புற நிறைவுற்றது வாராஹி மகாஹோமம்.

கோடம்பாக்கம் ஶ்ரீகருமாரி அம்மன் ஆலயம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆலயத்தைச் சேர்ந்த அன்பர் சங்கர் இந்த ஹோமத்தைச் சிறப்பாக நடத்திவைத்தார்.

வல்லமை மிக்க இந்த ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால், சகல உபாதை களும், தோஷங்களும், சத்ரு பயமும் நீங்கும். ஆயுள் விருத்தி; ஆரோக்கிய வாழ்வும் கிடைக்கும்; சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என்கின்றன ஞான நூல்கள். அவ்வகையில் இந்த ஹோமத்தில் சங்கல்பித்த வாசகர்களின் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும்; அன்னையின் அருளால் அவர்களுக்குச் சகல நலன்களும் உண்டாகும் என்பது நிச்சயம்!