Published:Updated:

625 காளைகள்.. 500 காளையர்கள்.. தேனி அய்யம்பட்டில் களைகட்டிய ஜல்லிக்கட்டு!

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு

இன்று அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது அய்யம்பட்டி. சுமார் 3,000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் உள்ள ஏழைகாத்தம்மன் வல்லடிகாரசுவாமி கோயில் திருவிழா வருடம் தோறும் மாசி 4-ம் தேதி நடைபெறுவது வழக்கம். ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். திருவிழாவின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும். அதன்படி, வரும் இன்று அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு

மாவட்ட கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி ஆகியோர் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் துவக்கிவைத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜல்லிக்கட்டுக் காளைகள் நேற்று இரவே அய்யம்பட்டி வந்தடைந்தன.

`அன்று ஊசி ஈ.. இன்று குருத்துப்புழு..!’- வேதனையில் தேனி பட்டு விவசாயிகள்

அவற்றுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனம் வசதிகளை விழாக்கமிட்டியினர் செய்துகொடுத்தனர். அதேபோல, மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான சாப்பாடு வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டிருந்தது. நான்கு டி.எஸ்.பி’கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு
அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் பிடித்தது பார்வையார்களை ரசிக்க வைத்தது. அய்யம்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டியில் மொத்தம் 625 காளைகள் கலந்துகொண்டன. 500 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாடுபிடி வீரர்களுக்கு அண்டா, பீரோல், கட்டில், தங்கக் காசு, சைக்கிள் போன்றவை பரிசுகளாக கொடுக்கப்பட்டன. மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 72 பேர் காயமடைந்தனர். இதில், ஒரு காவலரும் காயமடைந்தார். சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தனர். இன்னும் சில தினங்களில், தேனி பல்லவராயன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

`லோனை நான் கட்டிக்கிறேன்; ஆயிரம் ரூபாய் வாங்கிக்கங்க!’ - தேனி பழங்குடியினப் பெண்களை அதிரவைத்த மோசடி
அடுத்த கட்டுரைக்கு