Published:Updated:

சென்னையில் ஆன்மிகத் திருவிழா!

இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி

தமிழகத்திலேயே ஆன்மிகம் சார்ந்து நடைபெறும் ஒரே கண்காட்சி என்ற பெருமையைப் பெற்றது

சென்னையில் ஒவ்வோர் ஆண்டும் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று வரும் இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி இந்த ஆண்டு ஜனவரி 28-ம் தேதி வேளச்சேரி குருநானக் கல்லூரியில் தொடங்குகிறது. 11-வது ஆண்டின் தொடக்க விழாவில் மாதா அமிர்தானந்தமயி கலந்துகொள்கிறார். 29-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை பொதுமக்கள் இந்தக் காட்சியைப் பார்வையிடலாம்.

தமிழகத்திலேயே ஆன்மிகம் சார்ந்து நடைபெறும் ஒரே கண்காட்சி என்ற பெருமையைப் பெற்றது, இந்த ஆன்மிகத் திருவிழா.

இதில், அமைக்கப்படும் அரங்குகளில் நூற்றுக்கணக்கான ஆன்மிக சேவை அமைப்புகள் பங்கேற்று தாங்கள் செய்துவரும் சேவைகளைப் பொது மக்களுக்குக் காட்சிப்படுத்துகின்றன. இந்த ஆண்டு ‘பெண்மையைப் போற்றுதல்’ என்ற கருத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

மக்களிடம் இந்தக் கண்காட்சியைப் பிரபலப்படுத்துவதற்காக 10,000 மாணவர் களின் யோகாசனம், 10,000 மாணவிகளின் இசைக் கச்சேரி, பெண் கலைஞர்கள் 2,000 பேர் பங்குகொண்ட பரத நாட்டியம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இத்தகைய நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை. காட்சிக்கு மக்களை ஈர்ப்பதற்காகவும் இந்தக் கண்காட்சியின் அடிப்படையாக உள்ள ஆன்மிகத் தத்துவங்களைப் பொதுமக்களிடம் நேரடி யாகச் சொல்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்பட்டது.

இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி
இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி

இந்த ஆண்டுக்கான ரத யாத்திரைக்காக 25 ரதங்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்பு நிறுத்தப்பட்டு 19.1.2020 அன்று மாலை 6 மணிக்கு அவற்றுக்கான பூஜை நடந்தது. ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தஜி மஹராஜ் ரதங்களுக்கான பூஜையை நடத்தினார். பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜலக்ஷ்மி, பத்மா சேஷாத்ரி பள்ளி தாளாளர் ஷீலா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதைத் தொடர்ந்து அன்று மாலை 7 மணிக்கு திருவல்லிக்கேணி பார்த்த சாரதி திருக்கோயிலுக்கு வந்த ரதங்களில் விவேகானந்தர் மற்றும் கண்ணகியின் திருவுருவச் சிலைகள் அலங்கரித்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியையொட்டி கோலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் தமிழர் பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ரதங்களில் ஆன்மிகக் காட்சியின் அடிப்படைக் கருத்துகளான வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், ஜீவராசிகளைப் பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப் பற்றை ஊட்டுதல் ஆகிய கருத்துகளும், இவற்றை வலியுறுத்தும் விதம் மாணவ மாணவிகள் பண்புப் பயிற்சிகளை மேற்கொள்ளும் படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி
இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி

ஜனவரி 20-ம் தேதி தொடங்கிய இந்த ரத யாத்திரை 30-ம் தேதி வரை சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் சென்று வரவுள்ளன. 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இந்த ரதங்கள் செல்லும். மாணவ மாணவியர் மலர் தூவி ரதங்களை வரவேற்பார்கள்.

அதேபோல், இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண் காட்சியின் முன்னோட்டமாக 20.01.2020 அன்று பம்மலில் விவேகானந்தர் நடைப்பயணம் நடைபெற்றது. மீனாட்சிகிருஷ்ணா பாலிடெக்னிக் முன்பு தொடங்கி பம்மல் சங்கரா பள்ளியில் நிறைவடைந்த இந்த நடைப்பயணத்தில் பள்ளி மாணவ மாணவிகள் 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

விவேகானந்தர் போன்று முகக்கவசமும் உடையும் அணிந்து மாணவ மாணவிகள் அணிவகுத்துச் சென்றனர். இந்தக் கண்கவர் அணிவகுப்பு பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆறு நாள்கள் கண்காட்சியில் கோ வந்தனம், கஜ வந்தனம், துளசி வந்தனம், மாதா - பித்ரு வந்தனம், ஆச்சார்ய வந்தனம், அதிதி வந்தனம், கன்யா வந்தனம், சுவாசினி வந்தனம் போன்ற பெரியோர்களை வணங்கும் நம் பாரம்பர்ய பூஜைகளும் விழாக்களும் நடைபெறவுள்ளன. அத்துடன், நம் மண்ணின் பெருமையைச் சொல்லும் கிராமிய கலைநிகழ்ச்சிகளும் வீரக் கலைகளும் நடைபெறவுள்ளன.

இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி
இந்து ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி

அதேபோல், நம் கலாசாரத்தின் பெருமையைச் சொல்லும் விழா வைபவங்களும், பல்வேறு பரிகார ஹோமங்களும், ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் உள்ளிட்ட தெய்விக நிகழ்வுகளும் நடைபெற வுள்ளன. இந்தக் கண்காட்சிப் பெருவிழாவில் ஏராளமான ஆன்மிகத் தலைவர்களும் மடாதிபதி களும் ஆசார்யர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இங்கு ஒரே திடலில் அபூர்வமான மூலிகைகள், வைத்திய முறைகள், ஆன்மிகப் புத்தகங்கள், கைவினைப் பொருள்கள், ஆன்மிக அமைப்பு களின் சேவைகள் என அனைத்தும் கிடைக்கும் வகையில், பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் வைக்கப்படவுள்ள பிரமாண்ட அரங்குகளும் ஆலயங்களும் உங்களை வியக்கவைக்கும். தமிழகத்தின் அத்தனை சுவையான உணவுகளும் இங்கு கிடைக்கும் என்பதும் கூடுதல் தகவல்.

இங்கு அளிக்கப்படும் சிறிய இலவச புத்தகங்கள், கையடக்கப் பிரதிகள், பிரசாதங்கள் போன்றவை பெரிதும் உபயோகமாக இருக்கும். மேலும் ஏராளமான போட்டிகள், பரிசுகள், வியக்க வைக்கும் பொருள்களின் காட்சிகள் என இந்த ஆறு நாள்களும் இங்கு வருபவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் தெய்விகக் கொண்டாட்ட அனுபவங்களால் நிறைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

சென்னையில் ஆன்மிகத் திருவிழா!

இந்தக் கண்காட்சியைக் காண வரும் மக்களுக்கு வசதியாக வேளச்சேரியைச் சுற்றி பல இடங்களில் இலவச ஷேர் ஆட்டோ வசதிகளை யும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்கள்.

பாதுகாப்பு, குடிநீர், ஓய்வறை என சகல வசதிகளும் இங்கு இருப்பதால் குடும்பத்தோடு இங்கு வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு குதூகலம் அடையலாம் என விழா அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

வாருங்கள் கொண்டாடுவோம். நம் பாரம்பர்யப் பெருமைகளையும் உணருவோம்.

`சக்தியைக் கொண்டாடுவோம்'

``பெயரிலேயே சக்தியை வைத்து பெண்மையைக் கொண்டாடும் சக்தி விகடனின் இதழ் பணி மற்றும் இறைப்பணிகளுக்கு எங்களின் வாழ்த்துகள்.

அறிவியலின் உச்சத்தில், அத்தனை விஷயங் களையும் சாத்தியமாக்கிவிட முடியும் என்ற தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தில் நாம் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையிலும், பெண்மையின் பெருமைகளைத் தெரிந்துகொள்ளாமல் புற நாகரிகங்களின் தாக்கத்தால் சீரழிந்து வருகிறோம். அதனாலேயே ஆங்காங்கே பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

நமது நாகரிகம் பெண்மையை வணங்கக்கூடியது. இந்தியாவே ஒரு தாய், இங்குள்ள சகலமும் தாய் என்று எண்ணி வணங்கும் பாரம்பர்யத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.

சென்னையில் ஆன்மிகத் திருவிழா!

நம் புராணங்களும் வரலாறும் ஞானியர்களின் வாக்கும் வாழ்வியல் நீதிகளும் பெண்களை வணங்கவே வலியுறுத்துகிறது. அதை, காலத்தின் கோலத்தால் மறந்துவிட்டோம் அல்லது மறைத்துவிட்டார்கள். ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்டதொரு விஷயத்தை முன்னிலைப்படுத்தி, அதன் அடிப்படையிலான தலைப்புடன் இந்தக் கண் காட்சியை நடத்துகிறோம். பெண்மையைப் போற்றவே இந்த ஆண்டு `பெண்மையைப் போற்றுவோம்’ என்ற தலைப்பில் 11-வது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் காட்சி நடைபெறவுள்ளது.

நம் பாரம்பர்ய பெருமைகளை மீட்டெடுக்கவும் புராதன சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லவுமே இந்த ஆன்மிகக் காட்சி நடத்தப்படுகிறது. 2009-ம் ஆண்டு

30 அரங்குகளோடு சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, தற்போது இந்தியா முழுக்க பேசப்படும் அளவுக்கு பிரமாண்ட விழாவாக வளர்ந்துள்ளது.

நம் கலாசாரத்தின் பெருமைகளை நினைவுகூரவும் இந்த மண்ணின் அடையாளங்களை இளையவர்களுக்கு எடுத்துச்சொல்லவும் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டு வருகிறோம்.

இந்தப் பணியில் ஏராளமான ஆன்மிகப் பெரியவர்களும் அறிஞர்களும் வழிகாட்டுகிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்த வெற்றி எங்களுக்கு சாத்தியமில்லை.

குடும்பமே சமுதாயத்தின் தொடக்கப் புள்ளி; இங்கு சுயநலத்துக்கு இடமே இல்லை என்று வாழ்பவர்கள் இந்தியர்கள். உற்றார் உறவினருக்காக எந்த தியாகத்தையும் செய்யும் மனப்பாங்குகொண்டவர்கள் நாம். இப்படியான நம்முடைய சிறப்பையும் நம் ஆன்மிக அமைப்புகள் எத்தனைவிதமான சேவைகள், தொண்டுகள், புனரமைப்புகளைச் செய்கிறார்கள் எனும் தகவலையும் உலகுக்குச் சொல்லும் விதம் நடைபெறுகிறது இந்தக் கண்காட்சி.

இந்தக் காட்சியை தொடங்கியதன் நோக்கமே இளைய தலைமுறை நல்ல பண்பாட்டோடும் ஒழுக்கத்தோடும் வளர்க்கப்பட வேண்டும் என்பதற் காகவே. அந்த இலக்கை அடைய வேண்டும் என்பதே எங்கள் ஆசை. அதைநோக்கியே எங்களின் பணி அமையும்.

உலகுக்கே நீதியைச் சொல்லிக்கொடுத்த நம் சமூகம் தனித்த அடையாளத்தோடு விளங்க வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பம். அதற்கு இந்தக் கண்காட்சியும் உதவும். எல்லோரும் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு நம் தர்மங்களின் பெருமையை அறிந்துகொள்ளுங்கள்.

- ராஜலட்சுமி,

நிர்வாக அறங்காவலர்,

பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை