பிரீமியம் ஸ்டோரி

உலகின் முக்தி அளிக்கும் ஏழு தலங்களில் ஒன்று மதுரா. உத்தரப்பிரதேச மாநிலத்தில், ஆக்ராவுக்கு 50 கி.மீ வடக்கிலும், டெல்லிக்கு 145 கி.மீ தென்கிழக்கிலும் அமைந்திருக்கிறது.

கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் இணைந்த பகுதி ‘விரஜபூமி’ எனப்படுகிறது. இந்தப் புண்ணிய பூமியின் மையமாக மதுராவே திகழ்கிறது.

புனித பூமி மதுரா!

துராவைச் சுற்றியுள்ள கோகுலம் எனும் ஆயர்பாடி, பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகிய மூன்று இடங்களையும் இணைத்து, ‘கிருஷ்ண ஜன்ம பூமி’ என்கிறார்கள்.

காபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி சூரசேன வம்சத்தினரின் தலைநகராக இருந்தது இது. ராமாயணத்திலும் மதுராவைப் பற்றிய குறிப்பு வருகிறது. ஶ்ரீராமனின் ஆணைப்படி சத்ருக்னன், லவணாசுரன் என்ற அரக்கனை வீழ்த்தினான். யமுனை நதிக்கரையில் அர்த்தசந்திர வடிவில் மாட மாளிகைகள், தடாகங்களுடன் மதுரா நகரை அமைத்தான். சத்ருக்னனுக்குப் பிறகு, மதுரா நகரம் யாதவர்கள் வசமானது. வசுதேவர் பரம்பரையினர் இந்த நகரை ஆண்டதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன.

புரூரவாவுக்கும் ஊர்வசிக்கும் பிறந்த மூத்த மகனான ஆயுவினால் உருவாக்கப்பட்டதுதான் மதுரா என்றும் புராணங்களில் தகவல் காணப்படுகிறது. கி.மு.1600-களில் இப்பகுதியை ஆட்சி செய்த மது என்ற மன்னனின் பெயரால் இந்த நகர் மதுரா எனப் பெயர் பெற்றதாகச் சொல்வோரும் உண்டு.

புனித பூமி மதுரா!
புனித பூமி மதுரா!

‘மெதோரா’ என்ற பெயரில் மதுரா அழைக்கப்பட்டதாக மெகஸ்தனிஸ் குறிப்பிடுகிறார். ஏராளமான மரங்களைக் கொண்டு இருந்ததால் இந்தப் பகுதி ‘மதுவனம்’ எனப்பட்டது. பின்னர் ‘மதுபுரா’ என்று அழைக்கப்பட்டு, அதுவே இப்போது ‘மதுரா’ ஆனது என்ற தகவலும் உண்டு.

ந்த நகரம் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திவ்ய க்ஷேத்திரம். ஆழ்வார்களால் பாடல்பெற்ற கோயில்கள் தற்போது இல்லை. பிற்காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களே இருக்கின்றன.

புனித பூமி மதுரா!
புனித பூமி மதுரா!
புனித பூமி மதுரா!

துரா கோயிலில் அருளும் மூலவரின் திருநாமம் ஶ்ரீகோவர்த்தநேசன். நின்ற உடனுறைபவர் சத்யபாமா தாயார். ஶ்ரீகிருஷ்ண ஜன்மாஷ்டமி இங்கே விசேஷம். அந்த விழாவின் முதல் ஒரு வாரம் வரை ஶ்ரீகிருஷ்ண சரிதம் முழுவதையும் நாடகமாக நடிக்கிறார்கள்.

துரா கோயில் மிகவும் விஸ்தாரமாக இருக்கிறது. செயற்கையாக ஒரு குன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். குன்றுக்குள் போய்ப் பார்த்துவிட்டும் வரலாம். அங்கே... வெட்டவெளி முற்றத்தில் துளசிச் செடிகளுடன் யாக குண்டம் மற்றும் தேவகி வசுதேவரின் சிற்ப வடிவங்களையும் தரிசிக்கலாம்.

இன்னும் சற்று உள்ளே போனால் வருவது, கல்கோட்டை போன்ற ஒரு பகுதி. வலதுபுறம் இருக்கும் பெரிய கதவுகளை அடுத்து அமைந்திருக்கும் அறையில் ஒரு மேடை இருக்கிறது. எல்லோரும் அந்த மேடையைக் கண்ணில் ஒற்றிக்கொண்டு செல்கிறார்கள். இந்த மேடையே ஶ்ரீகிருஷ்ணர் அவதரித்த இடம் என்கிறார்கள்.

புனித பூமி மதுரா!
புனித பூமி மதுரா!

துரா பரிக்ரமா, வைணவர்களுக்கு முக்கியமான கடமை எனலாம். விரஜ பூமி 285 கி.மீ சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, ‘விரஜ பரிக்ரமா’ எனப்படும். இவ்வளவு பெரிய வலம் வர முடியாதவர்கள், கோவர்த்தன மலையை வலம் வருவர். அதுவும் முடியாதவர்கள், பிருந்தாவனத்தை வலம் வருவர். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பரிக்ரமா செய்வது புண்ணியம்.

துர்கா மந்திர், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திர் என 100-க்கும் மேற்பட்ட கோயில்கள் மதுராவை அலங்கரிக்கின்றன. கேசவதேவ் ஆலயம் (ஶ்ரீகிருஷ்ண ஜன்ம பூமி), துவாரகீஷ் ஆலயம், நாம் யோக் சாதனா மந்திர் (ஶ்ரீபாபா ஜெய் குருதேவ் ஆலயம்), விஷ்ரம் காட் (யமுனை நதிக் கரை), மியூசியம், பிர்லா மந்திர் ஆகியவையும் நாம் காண வேண்டிய முக்கிய இடங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு