Election bannerElection banner
Published:Updated:

புண்ணிய பலன்கள் அருளும் மாசிமகத்தில் நன்மைகள் தரும் நவநதி வழிபாடு... செய்வது எப்படி?

மாசிமகம்
மாசிமகம்

புனிதம் பெறுவதற்காக ஒன்பது நதிகளும் மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கின்றன. அந்த நதிப் பெண்கள், பெண் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.

கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கு திசையில் அமைந்துள்ளது விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயம். கி.பி. 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் மகாமக வைபவத்தின்போது, யாக சாலைக்கான புற்று மண், இந்தக் கோயிலில் இருந்துதான் எடுத்துச் செல்லப்படுகிறது.

புண்ணியம் வேண்டி பலரும் புனிதநதிகளில் நீராடுகிறார்கள். அதனால் நதிகள் பெரும் பாவச்சுமையைத் தாங்கி நிற்கின்றன. இப்படி மக்கள் பலரும் தங்களிடம் சேர்க்கும் பாவச் சுமைகளை நீக்கி புண்ணியம் பெறும் ஆசை நதிகளுக்கும் இருக்கும் அல்லவா?

மகா மண்டபம்
மகா மண்டபம்

அப்படிப் புனிதம் பெறுவதற்காக ஒன்பது நதிகளும் மகாமக தீர்த்தத்தில் சங்கமிக்கின்றன. அந்த நதிப் பெண்கள், பக்தர்களுக்கு அருள் பாலிப்பது இக்கோயிலின் தனிச் சிறப்பு.

இவர்களை தரிசித்தாலோ, இவர்களின் திருப்பெயர்களை மனமுருகச் சொல்லி வணங்கினாலோ, தடைகளும் தோஷங்களும் நீங்கும். சுபகாரியங்கள் நிறைவேறும்.

நவ நதிப் பெண்களை நாமும் தரிசிப்போமா...

கங்கா

யமுனா

நர்மதா

சரஸ்வதி

காவிரி

கோதாவரி

துங்கபத்ரா

கிருஷ்ணா

சரயு

குறிப்பிட்ட வயது வந்தும் பூப்படையாதவர்கள், திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், கொஞ்சி விளையாடக் குழந்தைச் செல்வம் இல்லையே எனக் கலங்குபவர்கள் இப்படிப் பெண்கள் பலரும் இங்கு வந்து நவ கன்னியரை வணங்கினால் விரைவில் நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. தொடர்ந்து 12 வெள்ளிக்கிழமைகள் மகாமகக் குளத்தில் நீராடி, நவ கன்னியரை வணங்கினால், பிரிந்த தம்பதியர் மீண்டும் ஒன்று சேருவர்.

கங்கா - நவநதி
கங்கா - நவநதி

திருக்குளத்தில் நீராடி பொங்கல் படையலிட்டு நவ கன்னியரை வழிபட, விரைவில் பிள்ளை பாக்கியம் உண்டாகும். இந்த நவநதி தெய்வங்களின் படங்கள் வீட்டில் இருந்தால், அங்கு சுபிட்சம் பொங்கிப் பெருகும் என்பது ஆன்றோர் வாக்கு.

அபூர்வமான நவநதி தெய்வப் படம் உங்களுக்கு வேண்டுமா?

படத்தைத் தரவிறக்கம் செய்ய இங்கே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்...

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு