Published:Updated:

கேதர்நாத் கோயில்: ஜெர்மனியிலிருந்து செம்பு, பித்தளை; 50 டன் எடையில் உருவாகும் `ஓம்'

கேதர்நாத் கோயில்

மிகவும் புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் 50 டன் எடையில் 'ஓம்' என்ற வார்த்தை பித்தளையில் நிறுவப்படுகிறது.

Published:Updated:

கேதர்நாத் கோயில்: ஜெர்மனியிலிருந்து செம்பு, பித்தளை; 50 டன் எடையில் உருவாகும் `ஓம்'

மிகவும் புகழ்பெற்ற கேதர்நாத் கோயிலில் 50 டன் எடையில் 'ஓம்' என்ற வார்த்தை பித்தளையில் நிறுவப்படுகிறது.

கேதர்நாத் கோயில்
இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையான லிங்கமாக கருதப்படுவது கேதர்நாத் சிவாலயமாகும். உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் இந்தக் கோயில் மே மாதத்தில் இருந்து அக்டோபர் மாதம்வரை மட்டுமே திறந்திருக்கும்.

சொர்க்கத்தின் நுழைவு வாயிலாகக் கருதப்படும் கேதர்நாத் கோயிலில் அதிகமான நாள்கள் பனிப்பொழிவு இருக்கும். இந்தக் கோயிலில் பிரணவ மந்திரமான, 'ஓம்' என்ற வார்த்தையை 50 டன் எடையில் அமைக்கக் கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிந்து, 'ஓம்' திறக்கப்பட்டு விடும் என்று கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.

கேதர்நாத்
கேதர்நாத்

ஓம் சிலை அமைப்பதற்குத் தேவையான 12 பித்தளைத் துண்டுகள் டிராக்டர் மூலம் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. கோயிலில் வைத்து அவை இணைக்கப்பட்டு நிறுவப்படும். செம்பும், பித்தளையும் கலந்த கலவையாக இந்த 'ஓம்' இருக்கும். கேதர்நாத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த ஓம் நிறுவப்படும். இதைச் செய்வதற்குத் தேவையான செம்பும், பித்தளையும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இது குறித்துப் பொதுப்பணித்துறைப் பொறியாளர் ஜிதேந்திரா கூறுகையில், 'ஓம்' சின்னத்தை வைப்பதற்கான ஒத்திகைகள் முடிவடைந்து இன்னும் இரண்டு வாரத்தில் ஓம் நிறுவப்பட்டுவிடும் என்று தெரிவித்தார். கேதர்நாத் கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பாண்டவர்கள் போர் முடிந்த பிறகு தங்களது உறவினர்களைப் போரில் கொன்ற பாவத்தில் இருந்து விடுவிக்கக் கோரி சிவனை வழிபட வந்தனர்.

ஆனால் சிவன் அவர்களை அந்தப் பாவத்தில் இருந்து விடுவிக்க விரும்பாததால் அவர்கள் இமயமலையில் சுற்றிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சிவன் பசு வடிவத்தில் சுற்றிக்கொண்டிருந்தார். எனவே அவர்கள் இங்கே சிவனுக்கு ஆலயம் எழுப்பி வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு 8வது நூற்றாண்டில் ஆதி சங்கரரால் கோயில் புதுப்பித்துக் கட்டப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்தக் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தக் கோயிலின் கருவறை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.