Published:Updated:

எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் மகா சுவாதி யாகத்தில் நீங்களும் கலந்து கொண்டு சங்கல்பிக்கலாம்!

மகா சுவாதி ஹோமம்
மகா சுவாதி ஹோமம்

வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இஞ்சிமேடு வரதராஜபெருமாள் திருக்கோயில் நிர்வாகம், சக்தி விகடன் மற்றும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து வழங்கும் மகா சுவாதி ஹோமம் நடைபெறவுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நவநிதிகளுக்கும் தலைவியான திருமகளுக்கு உகந்த நட்சத்திரம் சுவாதி. திருமாலின் பாத கமலம் என்று சுவாதியைச் சொல்வர். ஆபத்தில் உதவும் மகாநரசிம்மர் அவதரித்த நட்சத்திரம் சுவாதி. சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் உள்ளது. ராகு பகவானை அதிபதியாக கொண்ட நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரம் சுவாதி. இது பிரகாசமான உற்சாகமான நட்சத்திரம் எனப்படுகிறது.

பெருமைமிக்க சுவாதி நட்சத்திர நாள் மாதம்தோறும் வரும். இந்த நாளில் நரசிம்மரையும் திருமகளையும் சுதர்சனரையும் துதித்து சிறப்பு யாகங்கள் செய்தால் வேண்டியது நிறைவேறும். கர்ம வினைகள் யாவும் நீங்கி, சௌபாக்கியங்கள் நிலைக்கும் என்பது சாஸ்திரங்கள் சொல்லும் தகவல். வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இஞ்சிமேடு வரதராஜபெருமாள் திருக்கோயில் நிர்வாகம், சக்தி விகடன் மற்றும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து வழங்கும் மகா சுவாதி ஹோமம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீவரதராஜ பெருமாள்
ஸ்ரீவரதராஜ பெருமாள்

வந்தவாசி-சேத்துப்பட்டு வழித்தடத்தில் வருவது சின்ன கொழப்பலூர் கூட்டுச் சாலை. இங்கே இடதுபுறமாக பிரியும் சாலையில் சுமார் 10 கி.மீ. தொலைவு பயணித்தால் இஞ்சிமேடு என்ற திருத்தலத்தை அடையலாம். அங்குதான் மூலவராக ஸ்ரீவரதராஜ பெருமாள் பெருந்தேவி தாயார் சமேதராக எழுந்தருளி உள்ளார். இதே ஆலயத்தில் திருமகளை மடியில் எழுந்தருளச் செய்தபடி காட்சி தருகிறார் ஸ்ரீசெஞ்சுலட்சுமி சமேத கல்யாண நரசிம்மர். நரசிம்மருக்கு அருகே பிரகலாதன் தொழுதவாறு நின்று கொண்டிருக்கிறார். அதுபோலவே பரத்வாஜ முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமச்சந்திர மூர்த்தி, ஶ்ரீசுதர்சன ஆழ்வார் ஆகியோரும் இங்கு அருள்பாலிக்கிறார்கள். மேலும் இங்குள்ள பெருந்தேவித் தாயாருக்கு மஞ்சள் மாலை சாற்றுவதாக வேண்டிக் கொள்ளுவது இங்கு சிறப்பான வழிபாடு. தினமும் ஒவ்வொரு மஞ்சளாக எடுத்து வைத்து வழிபட்டு, அதை 48-வது நாளில் இங்கு கொண்டு வந்து மாலையாக தொடுத்து தாயாருக்கு சாத்துகிறார்கள். இதனால் வேண்டிய விண்ணப்பங்கள் நிறைவேறுகிறது என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.

கல்யாண நரசிம்மர்
கல்யாண நரசிம்மர்

பெருமைகள் பல கொண்ட இந்த திருத்தலத்தில் ஆடி மாதம் சுவாதித் திருநாளன்று (14.8.2021 சனிக் கிழமை) இங்கு நடைபெறும் மகாசுவாதி ஹோம வைபவத்தில் வாசகர்களும் சங்கல்பித்து பலன் பெறலாம். அன்று காலை தொடங்க உள்ள இந்த மகா யாக விழாவில் பிரமாண்ட சுவாதி ஹோமமும், ஶ்ரீகல்யாண நரசிம்மருக்குத் திருமஞ்சனமும், விசேஷ ஆராதனைகளும் நடைபெறும். யாகங்களில் மகத்தானது மகா சுவாதி ஹோமம். 9 ஹோமங்களுடன் இந்த வைபவம் இப்போது நடைபெறுவது என்பது மிகவும் விசேஷம். அரிய வகை மூலிகைகளால் வைணதேய ஆஞ்சநேய யாகம், ஸ்ரீராம யாகம், ஸ்ரீசந்தான கோபால யாகம், பாக்கியலட்சுமி மகா யாகம், லட்சுமி நரசிம்ம யாகம், சுதர்சன மகா யாகம், பூவராக மகா யாகம், லட்சுமி ஹயக்ரீவ யாகம், தன்வந்திரி மகா யாகம் ஆகிய 9 யாகங்கள் நடைபெற உள்ளன.

ஆடி அம்மன் தரிசனம்: கேட்டதையெல்லாம் கொடுப்பாள் கோட்டை மாரி - திண்டுக்கல் கோட்டை மாரியம்மன்!

இந்த பூஜையில் கலந்து கொள்வதால் கடன் தொல்லை நீங்கி செல்வம் நிலைக்கும். வியாபாரம் விருத்தியாகும். மங்கல காரியங்கள் கைகூடும், வெளிநாட்டு வேலை, கல்வி போன்ற ஆசைகள் நிறைவேறும். எதிரிகள் தொல்லை, திருஷ்டி, அச்சங்கள், வீண் சண்டைகள், வழக்குகள் நீங்கி அமைதி கிட்டும், தீராத நோய் தீரும். உறவுச் சிக்கல்கள், பணப் பிரச்னைகள் உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டாகி இந்த வழிபாட்டால் நன்மை சேரும். தீய பழக்கங்களால், தீய உறவுகளால் தவிப்போர் பூரண நலம் பெற்று வாழ்வர். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, உற்சாகம் பெறுவீர்கள். உறவுகளால் மதிக்கப்பட்டு சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். எனவே இந்த மகா யாகத்தில் கலந்து கொண்டு பலன்கள் பெற கேட்டுக் கொள்கிறோம்.

இஞ்சிமேடு
இஞ்சிமேடு
ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் மஞ்சள் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்).
ஶ்ரீசுவாதி மஹா ஹோமம்
ஶ்ரீசுவாதி மஹா ஹோமம்

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு