Published:Updated:

குடமுழுக்கின் போது எந்தெந்த இசைக் கருவிகள் வாசிக்க வேண்டும்? |Doubt of Common Man

குடமுழுக்கு - Doubt of Common Man

நம் எண்ணங்களையும் மனநிலையையும் மாற்றக்கூடிய சக்தி இசைக்கு உண்டு. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் சேர்த்து வழிபடும் ஓர் இடம் ஆலயம்.

Published:Updated:

குடமுழுக்கின் போது எந்தெந்த இசைக் கருவிகள் வாசிக்க வேண்டும்? |Doubt of Common Man

நம் எண்ணங்களையும் மனநிலையையும் மாற்றக்கூடிய சக்தி இசைக்கு உண்டு. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் சேர்த்து வழிபடும் ஓர் இடம் ஆலயம்.

குடமுழுக்கு - Doubt of Common Man
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் ‘குடமுழுக்கின் போது எந்தெந்த இசைக் கருவிகள் வாசிக்க வேண்டும்?’ என்று வாசகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அக்கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

பொதுவாக ஆலயங்களில், குடமுழுக்கின்போது இசைக் கருவிகள் வாசிப்பது வழக்கம். அதில் எந்த மாதிரியான இசைக்கருவிகள் வாசிக்க வேண்டும் என்பது குறித்தான சந்தேகத்தை சென்னை காளிகாம்பாள் கோயில் சண்முக சிவாச்சார்யரிடம் முன்வைத்தோம். இது தொடர்பாக அவர் கூறியது,

“ நம் எண்ணங்களையும் மனநிலையையும் மாற்றக்கூடிய சக்தி இசைக்கு உண்டு. உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் சேர்த்து வழிபடும் ஒரு இடம் ஆலயம். எந்த ஒரு காரியத்தையும் காரணமில்லாமல் செய்யக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இசைக்கருவிகள் (வாத்தியங்கள்) என்பது வெறும் சப்தம் மட்டும் எழுப்பக்கூடியவை அல்ல. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். அதில் சப்தம் என்பது ஆகாயத்தில் உள்ளடங்கும்.

கோவில் குடமுழுக்கு
கோவில் குடமுழுக்கு
குடமுழுக்கின் போது வாசிக்க வேண்டிய இசைக்கருவிகள்:

மத்தளம், தாளம், படகம், பேரி(தவில்) டக்கா(உடுக்கை), எக்காளம் (குழாய் கருவி: ஊதுகுழல் ), ஜல்லரி (ஜால்ரா), கடம், நாடி வாத்தியங்கள் (வயலின் கித்தார்), தம்புரா, வீணை புல்லாங்குழல், தபேலா, பறை, தப்பட்டை சங்கு, பெரிய வெங்கல மணி ஆகிய இசைக் கருவிகளை வாசிக்க வேண்டும். பல இசைக்கருவிகள் வாசிக்கும்போது அதன் சப்தங்கள் மாறுபடாமல் வாசிப்பது அவசியம்.

மேற்கண்ட இசைக்கருவிகள் வாசிப்பதன் காரணங்கள் :

மத்தளம் சுகம் தரும், தாளம் சோகங்களை போக்கும், ஜல்லரி (ஜால்ரா) விரும்பியதை தரும், கடம் மோக்ஷம் அளிக்கும், நாடி வாத்தியங்கள் (வயலின் கித்தார்) ஆகியவை மனோலயம் தரக்கூடியவை. பறை, தப்பட்டை வெற்றியைத் தரக்கூடியவை, கைத்தாளம் ஆரோக்கியம் மற்றும் சந்தோசத்தை தரும்.” இவ்வாறு கூறினார் அவர்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!