கி.பி.1310-ஆம் ஆண்டில் அலாவுதீன்கில்ஜியின் தளபதியான மாலிக்காபூரின் படையெடுப்பால் பேரழிவுக்கு உள்ளானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயம். இங்கிருந்த அம்பாள்- சுவாமி சந்நிதிகளும், சுற்றிலும் இருந்த ஒருசில மண்டபங்கள் மட்டுமே அப்போது தப்பித்தன. இதன் பிறகு 68 ஆண்டுகள் மூடியே கிடந்தது மீனாட்சியம்மன் கோயில். 1378-ல் விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த குமார கம்பண்ணன் என்பவர் அவர்களை வென்று, பாண்டிய நாட்டை மீட்டார்.

நியூஸிலாந்து நாட்டின் கோடீஸ்வரரான பெர்னார்டு வெப்பர், 2005-ஆம் ஆண்டில் உலக அதிசயங்கள் குறித்த புதிய பட்டியலைத் தயாரிக்கத் திட்டமிட்டார். அதில் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலையும் சேர்த்தார். தனது பரிந்துரையை ஐ.நா. கலாசார அமைப்பான யுனெஸ்கோவிடம் அளித்தார். அவர்களது பரிசீலனைப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் 25-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு வந்த வெளி நாட்டு பயணிகளான கிரேக்க அறிஞர் மெகஸ்தனீஸ் (கி.மு.320), கிரேக்க அறிஞர் பிளினி (கி.பி.75), பேரறிஞர் தாலமி (கி.பி.140) ஆகியோர் தங்களது பயணக் குறிப்புகளில் மதுரையைக் குறித்து சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மூர்த்தி நாயனார், சந்தனக் கட்டை கிடைக்காததால் அதற்கு பதிலாக தன் முழங்கையைச் சந்தனம் தேய்க்கும் கல்லில் வைத்துத் தேய்க்கத் தொடங்கினார். இறைவன் அவரைத் தடுத்து, அரசனாக்கி அருள் புரிந்தார். மூர்த்தி நாயனார் கையைத் தேய்த்த அந்தக் கல், மீனாட்சியம்மன் சந்நிதியில் இன்றும் இருக்கிறது என்பர்.

குருவாயூரில் துலாபாரம் பிரசித்தமானது. அதேபோல் அனுதினமும் இங்கு நடைபெறும் அன்னப் பிராசனம் வைபவத்தையும் நாமறிவோம். இதுபோல் இன்னும்பல சிறப்புப் பிரார்த்தனைகள் இத்தலத்தில் உண்டு.

அடிமை கிடத்தல்: குழந்தைகளை பகவானின் குழந்தையாக பாவித்து, நடையில் கிடத்திவிட்டுத் திரும்புவர். பின் மற்றொருவர் மூலமாகக் குழந்தையை எடுத்து வரச் செய்வர். அதற்கான காணிக்கையை உண்டியலில் செலுத்துவர். இதற்கு அடிமை கிடத்தல் அல்லது நடை தள்ளுதல் என்று பெயர்

ஆள் ரூபம்: அங்கங்களில் நோய் நொடி உள்ள பக்தர்கள் தங்களது குறை தீர்ந்தால் குறிப்பிட்ட கண், கை, கால் போன்ற அங்கங்களை மரம், வெள்ளி மற்றும் தங்கம் போன்றவற்றில் செய்து சமர்ப்பிப்பதை ஆள் ரூபம் சமர்ப்பித்தல் என்பர்.

குந்துமணி: மூலவருக்கு முன்புறம் தென் பகுதியில் வாணலி போன்ற பெரிய பாத்திரத்தில் குந்துமணிகள் இருக்கும். பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பின், தங்கள் குழந்தைகளை அந்த குந்துமணிகளை வாரி எடுத்து, மீண்டும் அதிலேயே போடச் செய்வர். இதனால் குழந்தைகள் துறுதுறுப்புடன் திகழ்வர் என்பது ஐதிகம்.

திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலின் பரப்பளவு சுமார் 20 ஏக்கர். சுமார் 25 ஏக்கர் - கமலாலயத் தெப்பக்குளம். மூலவரான வன்மீகநாதர் சுயம்புத் திருமேனி. தியாகராஜர் சோமாஸ்கந்தராகக் காட்சி தருகிறார்.

தியாகராஜ சுவாமியின் திருமேனிதான் திருவாரூர் ரகசியம். இதைச் சோமகுல ரகசியம் என்பர். எல்லா சிவன் கோயில்களிலும் பாடும்முன் திருச்சிற்றம்பலம் என்பர். இங்கு ‘ஆரூரா தியாகேசா’ என இரு முறை கூறுவர். தில்லை நடராஜ சபை- பொன் அம்பலம். ஆரூர் ஶ்ரீதியாகராஜ சபைக்கு ‘பூ அம்பலம்’ என்று பெயர். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுவதால் இந்தப் பெயர்.

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் சிவபெருமானுக்குப் பொதுவான தச அங்கங்களை அருளியுள்ளார். ஆனால், இந்த தியாகராஜருக்குத் தனியான தச அங்கம் உண்டு. அவை: 1. பெயர்- ஆரூரன், 2. நாடு- அகளங்க நாடு, 3. ஊர்- ஆரூர், 4. ஆறு- ஆனந்தம், 5. மலை- அருள்மலை, 6. படை- வீரகட்கம், 7. பறை- பஞ்சமுக முரசு, 8. மாலை- செங்கழுநீர், 9. கொடி- தியாகக்கொடி, 10. குதிரை- வேதம்.

தியாகேசர் சந்நிதியில் மேல் வரிசையில் ஒன்பது விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் பெருமானை வழிபடுவதாக கூறுவர். பெருமானுக்கு முன் ஆறு மற்றும் ஐந்து அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களைக் குறிக்கும்.

சமயபுரம் மாரியம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கியவளாக இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள். இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம். கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவாசார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

தைப்பூசத்தின்போது திருவரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் ‘மகமாயி’க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது ‘பச்சைப் பட்டினி விரதம்’ எனப்படுகிறது.

சமயபுரம் மகமாயிக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்: சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் - தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.