பிரீமியம் ஸ்டோரி

`பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ
ஒளியும் நீ போதிக்க வந்த குருவும் நீ...'

`நடராஜப் பத்து' பாடலைப் பாடியபடியே விஜயம் செய்தார் நாரதர். மழையில் நனைந்தபடி வந்தவருக்குத் துவட்டிக்கொள்ள உலர் ஆடை அளித்தோம். தொடர்ந்து சூடாக சுக்குப் பானம் கொடுத்தும் உபசரித்தோம். ஈரம் களைந்து, பானத்தையும் ரசித்துப் பருகியவர் உரையாடலுக்குத் தயாரானார்.

ஆலயங்கள்... 
ஆபரணங்கள்!

``என்ன சுவாமி பொன்னும் பொருளுமாக ஈசனைத் துதிக் கிறீர்களே... ஏதேனும் விசேஷம் உண்டா?''

``பொன்னும் பொருளும்தான் இப்போது அறநிலையத்துறையை ஆட்டிவைக்கிறது. என்ன செய்ய..? திருக்கோயில்களில் சேரும் - பயன்பாட்டில் இல்லாத பொன்னையும் வெள்ளியையும் உருக்கி, வைப்புப் பொருளாக வைத்து நிதி திரட்டி, ஆலயத் திருப்பணிகளுக்குப் பயன்படுத்தலாம் என்று அரசு தரப்பில் உத்தேசித்துள்ளனர் என்பதை அறீவீர்.

ஆனால், `இது தவறாக முடியும்' என்ற தவிப்பில், இந்தத் திட்டத்துக்கு ஆன்மிக அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது.'' என்றவர் அது தொடர்பான விவரங்களை விளக்கினார்.

``இந்தத் திட்டத்தை எதிர்த்து சிலர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. தங்களின் மனுவில் கோயில்களின் நகைகளை உருக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

மேலும் `விதிகளின்படி, கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படாத நிலையில், தங்க நகைகளை உருக்க அனுமதிக்கக் கூடாது என்றும், என்னென்ன நகைகள் உள்ளன என்பது குறித்த போதுமான பதிவேடுகள் இல்லாததால், நகைகளை உருக்கத் தடை விதிக்க வேண்டும்' என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆலயங்கள்... 
ஆபரணங்கள்!

தமிழக அரசுத் தரப்பில், `கோயில் நகைகள் உருக்கப்படாது; காணிக்கையாக வந்த நகைகள்தான் உருக்கப்படும். அதை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவரும், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி இருவரும் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, நகைகள் கணக் கெடுக்கும் பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே 1977-ம் ஆண்டு முதல் கோயில் நகைகள் உருக்கப் பட்டு வரும் விவரத்தையும் தெரிவித்தனர்.

அத்துடன், கோயில்கள் சீரமைப்புக்கு நிதி தேவைப்படுவதாகவும், கடந்த 11 ஆண்டுகளாகத் தங்க நகைகள் மதிப்பீடு செய்யப்படவில்லை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அறங்காவலர்கள் இல்லாமல் நகைகளை உருக்க முடியாது எனக் கூறினர். இதைத் தொடர்ந்து `நகைகளைக் கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறும். அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே நகைகள் உருக்கப் படும்' அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப் பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், கோயிலுக் குக் காணிக்கையாக வழங்கப்பட்ட நகை களைக் கணக்கெடுக்கலாம் எனவும், அறங் காவலர்கள் நியமிக்கும் வரை நகைகளை உருக்கு வது தொடர்பாக எந்த முடிவும் எடுக் கக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேற்கொண்டு, விசாரணையை டிசம்பர் 15-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளனர்'' என்ற நாரதர் பக்தர்கள் தரப்பு ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.

`` இந்த விஷயத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உண்டு என்றுதான் பக்தர்கள் தரப்பில் பெரிதும் ஆதங்கப்படுகிறார்கள்.

`ஏற்கெனவே, உப்பிலியப்பன் கோயிலுக்குச் சொந்தமான புராதனமான ஆபரணங்களை உருக்கிட, விதிகளுக்கு முரணாக அறநிலையத் துறை அனுமதி அளித்தது என்ற சர்ச்சை எழுந்தது. இப்படி வெளியில் வராத பிரச்னை கள் எவ்வளவு உள்ளனவோ... அது ஆண்ட வனுக்கே வெளிச்சம். இப்படியான சூழலில், நகை உருக்கும் விஷயத்தில் அரசுத் தரப்பில் இவ்வளவு வேகமும் அவசரமும் காட்டுவது சந்தேகத்தையே தூண்டும். அரசு அதற்கு இடம் கொடுக்கக் கூடாது' என்பது பக்தர்கள் தரப்பு வாதமாக உள்ளது'' என்றார் நாரதர்.

``அறங்காவலர்களை நியமிக்க அரசு முனைப்பு காட்டி வருவதாகச் சொல்கிறார் களே?''

``ஆமாம்! இந்து சமய அறநிலையத்துறை விதியின்படி ஆண்டுக்கு பத்து லட்சம் ரூபாய்க்கும் கீழ் வருமானம் வரும் ஆலயங் களுக்கு, பரம்பரை முறைவழி சாரா அறங் காவலர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவை உருவாக்கவும், அந்த குழுவுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியும் தொடங்கி உள்ளது. இதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்க லாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் அறங்காவலர் பொறுப்புக்கும் விண்ணப்பிக்கலாம்.

இங்ஙனம் அமைக்கப்படும் அறங்காவலர் தேர்வுக் குழுவும், அவர்களால் தெரிவுசெய்யப் படும் அறங்காவலர்களும் தெய்வபக்தியோடு நேர்மையானவர்களாக இறைப்பணி ஆற்ற வேண்டும் என்பதுதான் சகலரின் விருப்பமாக உள்ளது'' என்ற நாரதர் புறப்படத் தயாரானார்.

கிளம்புமுன், ``ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப, ஆலயத் திருப் பணிகளில் குறிப்பிட்ட சில ஒப்பந்ததாரர் களுக்குச் சாதகமாகவே அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர் செயல்பட்டுவருவதாக பக்தர்கள் தரப்பில் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதுதொடர்பான விவரங்களை விசாரித்து வந்து விரிவாகப் பகிர்கிறேன்'' என்றபடியே விடைபெற்றுக் கொண்டார்.

- உலா தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு