திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

காசி கணேசருக்கு குடமுழுக்கு!

காசி கணேசர்
பிரீமியம் ஸ்டோரி
News
காசி கணேசர்

காசி கணேசர்

காசி கணேசர் கோயில்... 250 ஆண்டுப் பழைமை கொண்ட ஆலயம். புதுக் கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், பிரதான சாலையை ஒட்டியே அமைந்திருந்தது இந்த ஆலயமும் காசியார் மடமும்.

காசிக்குச் சென்று துண்டீர் கணபதியை வணங்க முடியாதவர்களுக்காகவே இந்த ஆலயம் எழுப்பப்பட்டது. மேலும் காசி யிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள், உணவு உண்டு இளைப்பாறிச் செல்லும் தலமாக விளங்கியது காசியார் மடம்.

பிறகு காலப்போக்கில் இந்த ஆலயமும் மடமும் சிதிலமடைந்து இருக்கும் இடம் தெரியாமல் போயின. இது குறித்து சக்தி விகடன் 28.8.2018 தேதியிட்ட இதழில் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் 'திருப்பணிக் குக் காத்திருக்கும் காசி கணபதி’ ஆலயம் என்ற தலைப்பில் எழுதியிருந்தோம். அதில் அந்த ஆலயத்தின் மகிமைகளைக் குறிப்பிட்டு அது புனரமைக்கப்பட வேண்டிய அவசியத் தையும் எழுதி இருந்தோம்.

காசி கணேசர்
காசி கணேசர்

பக்தியும் தாராள குணமும் கொண்ட சக்தி விகடன் வாசகர்களின் பங்களிப்போடும் நல்ல உள்ளங்களின் கொடையாலும் தற்போது அந்த ஆலயம் புனரமைக்கப்பட்டு வரும் 10.9.2021 அன்று குடகுழுக்குக் காண உள்ளது. என்றபோதும் இந்த ஆலயத்தில் தற்போது கோபுரப் பணிகள் சில முடியாமல் தடைப்பட்டுள்ளன.

தடைகளும் சிரமங்களும் நீங்கி குடமுழுக்கு சிறப்பாக நடைபெற காசி கணேசர் திருவருள் புரிவார். கோயில் திருப்பணிக்கு பங்களிப்பது பெரும் புண்ணியங்களைப் பெற்றுத் தரும். நாமும் கும்பாபிஷேகப் பணிக்கு இயன்ற பங்களிப்பை வழங்கி, காசி கணேசரின் திருவருளுக்குப் பாத்திரராவோம் (தொடர்புக்கு - முகேஷ் கண்ணா 9443176687).