காளிதேவி வீரத்தை அருளும் தெய்வம். சோழர்களின் இஷ்ட தெய்வம்.

கடல்கடந்து சென்று தங்களின் வீரத்தால் பல தேசங்களை வென்று அவை அனைத்தையும் சோழர்கள் ஒரு குடையின் கீழ் கொண்டுவர அருள்பாலித்தவள். ஆகவேதான், அந்த அன்னையை சோழர்கள் ‘ஏகவீரி’ எனும் ‘அஷ்டபுஜ காளி’யாக வழிபட்டனர்.

அவளுக்கென தனிக்கோயில்களையும் பெருங்கோயில்களில் தனிச் சந்நிதிகளையும் அமைத்து ஆராதித்தனர். அப்படி சோழர்களால் போற்றி வழிபடப்பட்ட ஒரு காளிதேவி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவலஞ்சுழியில் அருள்கிறாள்.

அந்தக் காலத்தில், தமிழகத்தில் சிற்பிகள் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள். அதாவது, ஒரு கோயிலை நிர்மாணிப்பதற்கு முன்னதாக, மாதிரி திருப்பணிகள் சிலவற்றைக் குறிப்பிட்டு, அவை நீங்கலாக மற்றவற்றைச் செய்து தருகிறோம் என்று ஒப்பந்தம் எழுதித் தருவார்களாம்.

அப்படி அவர்கள் குறிப்பிடும் திருப்பணிகள்... ஆவுடையார் கோவில் - கொடுங்கை, திருவீழிமிழலை - வெளவால் நெற்றி (நத்தி) மண்டபம், திருநனிப்பள்ளி - கோடிவிட்டம், தஞ்சை பெரிய கோயில் விமானம். பழங்கால சிற்பிகளையே மலைக்க வைத்த பிரமாண்டமான இந்தத் திருப்பணி வரிசையில், குறிப்பிடத்தக்க மற்றொன்று- திருவலஞ்சுழி கருங்கல் பலகணி (ஜன்னல்)!

சிற்ப வேலைப்பாடுகளால் மட்டுமல்ல, வெள்ளைவெளேர் திருமேனியுடன் சந்நிதி கொண்டி ருக்கும் சுவேத விநாயகரும் இந்தத் தலத்தின் சிறப்பம்சமே. அவர் குடியிருக்கும் அருள்மிகு பெரியநாயகி சமேத அருள்மிகு சடைமுடிநாதர் கோயிலில்தான் சோழர்கள் வழிபட்ட அஷ்டபுஜ காளியும் சந்நிதி கொண்டிருக்கிறாள்.

சோழ மாமன்னர்களான ராஜராஜனும் அவர் மைந்தன் ராஜேந்திரனும் போருக்குக் கிளம்புமுன், இந்த மாகாளியின் சந்நிதியில் தங்களின் வாள், வேல் போன்ற ஆயுதங்களை வைத்து வழிபட்டு, இந்த அன்னையிடம் உத்தரவுபெற்ற பிறகே போருக்குப் புறப்படு வார்கள்; அவளின் திருவருளால் வெற்றிமேல் வெற்றியைக் குவித்தார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தேவியை `பிடாரி ஏகவீரி’ என்றழைக்கின்றன கல்வெட்டுகள். அவற்றில் ஒன்று, ராஜராஜனின் மாமியாரான குந்தணன் அமுதவல்லியார், பிடாரி ஏகவீரிக்கு ‘அவபல அஞ்சனை’ செய்வதற்காக நிவந்தங்கள் வழங்கினார் என்ற தகவலைச் சொல்கிறது.

காவிரியின் தென்கரைத் தலங்களில் ஒன்றான திருவலஞ்சுழி தலத்தை, ‘பொன்னி சூழ்ந்த வலஞ்சுழி’ என்று அப்பர் பெருமானும் ‘பொன்னி வலஞ்சுழி’ என்று திருஞானசம்பந்தரும் போற்றியுள்ளனர். சுந்தரரும் பாடிப்பரவியுள்ளார். இங்கு அருள்பாலிக்கும் அஷ்டபுஜ காளியின் திருவடிவம் மிகவும் விசேஷமானது.

உத்குடி ஆசனத்துடன், திருச் செவிகளில் விசேஷ குண்டலங்கள், கழுத்தில் சரப்பளி, கால்களில் சலங்கை, தொடைவரை மறைத்த சிற்றாடை என வீரமும் அழகும் நிறைந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறாள், அஷ்டபுஜ காளிதேவி.

தேவியின் சிறப்பு, கோயிலின் மகிமை குறித்த விவரங்களை மிகச் சிலிர்ப்போடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார் இந்தக் கோயிலில் பூஜை செய்து வரும் விசு குருக்கள். இவரின் குடும்பம் 14 தலைமுறைகளாக இங்கு பூஜை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

“மகிஷாசுரனை வதம் செய்ததால் ஏற்பட்ட தோஷத்திலிருந்து நிவர்த்திபெற, ஈசனை வேண்டினாள் காளிதேவி. ‘பூலோகத்தில் வெள்ளை விநாயகரை தரிசனம் செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும்’ என்று ஈசன் அருள்பாலித்தார். அதன்படியே, காளிதேவி இந்தத் தலத்துக்கு வந்து வெள்ளை விநாயகரை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றாள் என்பது தலவரலாறு.

இங்கே விஷ்பூர முத்திரையுடன் திகழ்கிறாள் அஷ்டபுஜ காளி. கனிவுடன்கூடிய கீழ்நோக்கிய பார்வையுடன் அருள்கிறாள் அன்னை. ஒருகாலத்தில் எல்லைத் தெய்வமாக தனிக்கோயிலில் அருள்பாலித்தவள். காலப் போக்கில் அந்தக் கோயில் சிதிலமடைந்து போனது. பின்னர், காஞ்சி மகா பெரியவரின் வழிகாட்டுதலின்படி இந்தக் கோயிலில் பிரதான அம்பாள் சந்நிதிக்கு அருகே தனிச் சந்நிதியில் எழுந்தருளச் செய்யப்பட்டாள்.

சித்திரைத் திருவிழாவின்போது ஏராளமான பக்தர்கள் பால்குடம் சுமந்துவந்து இந்தத் தேவியை வழிபட்டு அருள்பெறுகிறார்கள். எல்லாவிதமான வெற்றிகளையும் வேண்டுவோருக்கு அருள்பாலிக்கும் தனிச் சிறப்புமிக்க காளி இவள்.

இந்தக் கோயிலின் பிரதான நாயகியாம் பெரியநாயகியம்மையும் வரப்பிரசாதியானவள். மூலவருக்கு வலப்பக்கத்தில் அம்பாள் வீற்றிருக்கும் தலங்களில் இதுவும் ஒன்று. அம்பாளுக்கு சடையோடு கூடிய நாதனை மணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. அதனால் ஒற்றைக்காலில் தவம் செய்தாள். அவள் ஆசை இத்தலத்தில் கைகூடியதாம். இதையொட்டி அம்பாள் இங்கே ஒற்றைக் காலில் நிற்கும் கோலத்திலும் ஈசன் குடுமியுடனும் காட்சி தருகிறார்கள். ஆகவே, இது திருமணத் தலமாகவும் திகழ்கிறது.

கல்வியில் மேம்பட, வழக்குகள், குடும்பப் பிரச்னைகள் நீங்க, எதிரிகள், சண்டை சச்சரவுகளால் ஏற்படும் பாதிப்புகள் விலக என எந்தக் காரியமானாலும் இத்தலத்து விநாயகரையும், அஷ்டபுஜ காளியையும் அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நானும் இதைக் கண்கூடாகக் கண்டு வருகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் விசு குருக்கள்.

அன்பர்கள், அவசியம் திருவலஞ்சுழி அஷ்ட புஜ காளியையும் வெள்ளை விநாயகரையும் வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

எப்படிச் செல்வது ? : கும்பகோணம் - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் திருவலஞ்சுழி ஆலயம் உள்ளது.