Published:Updated:

கோலாகலமாகத் தொடங்கியது அத்திவரதர் தரிசனம்... குவிந்த பக்தர்கள் ... கூட்டத்தில் தள்ளுமுள்ளு!

JAYAVEL B

நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் தேவராஜர் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனம் இன்று கோலாகலமாக தொடங்கியது.

அத்திவரதர்
அத்திவரதர்

நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் தேவராஜர் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனம் இன்று கோலாகலமாக தொடங்கியது. அத்திவரதரைக் காண நள்ளிரவு முதலே பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்திருந்தனர். இன்று காலை 6.30 மணியிலிருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அத்திவரதர்
அத்திவரதர்

கடந்த ஒரு மாதமாகவே காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. கடந்த 27 - ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அனந்த சரஸ் குளத்தில் இருந்து அந்திவரதரை வெளியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைத்தனர்.

கடந்த ஒரு மாதமாகவே காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்காக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. கடந்த 27 - ம் தேதி அதிகாலை 3 மணிக்கு அனந்த சரஸ் குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைத்தனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சயனக் கோலத்தில் உள்ள அத்திவரதர் சிலையை சுத்தம் செய்து, அவருக்கு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை 11 மணிக்கு புண்ணியாக வாசனம், ஜலசம்ரோஷம், தைலகாப்பு, ஹோமம் ஆகிய பூஜைகள் முடித்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் கொடுக்கும் வசந்த மண்டபம் பூக்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு மிக எழிலுடன் காணப்பட்டது.

நள்ளிரவு முதலே அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் கால்கடுக்கக் காத்திருந்தார்கள். விடியற்காலை 5 மணிக்கு அத்திவரதருக்கு சுப்ரபாரத சேவை தொடங்கியது. சுவாமிக்கு, கோயில் இட்லி (குடலை இட்லி), வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், லட்டு, மைசூர்பாகு மற்றும் இனிப்பு வகைகள் வைத்து நைவேத்தியம் செய்யப்பட்டது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்

அத்திரவதர் தரிசனத்திற்காக நேற்று இரவே காஞ்சிபுரம் வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலை 6.10க்கு தேவராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த ஆளுநருக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரவேற்பு அளித்தார். வசந்த மண்டபத்தின் இடது பக்க வாயிலில் ஆளுநர் வந்தபோது, உள்பக்கமாகக் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. வெளியில் இருந்தவர்கள் பலமுறைக் கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. உடனே அருகில் இருந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆட்களை அனுப்பி உள்ளிருப்பவர்களுக்கு தகவலைச் சொன்னார். இதனால் சற்று நேரம் ஆளுநர் வாயில் முன்பு காத்திருக்க நேரிட்டது.

ஆளுநருடன் ஆளுங்கட்சி பிரமுகர்களும் உள்ளே நுழைந்தனர். ஆளுநர் தரிசனம் செய்து கொண்டிருக்கும் போது காஞ்சிபுரம் எம்.பி செல்வம், அவரின் மனைவி மற்றும் கட்சியினருடன் அதே வாயில் முன்பு வந்து நின்றார். கூட்ட நெரிசல் காரணமாக அவரை காவல்துறையினர் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் காவல்துறையினருக்கும் செல்வம் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆளுநர் சென்ற பிறகு அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

பன்வாரிலால் புரோகித்
பன்வாரிலால் புரோகித்

ஆளுநரைத் தொடர்ந்து வசந்த மண்டபம் உள்ளே சென்ற பக்தர்களைக் காவல்துறையினர் இழுத்து வெளியே தள்ளிக் கொண்டிருந்தார்கள். வரிசையில் நின்று கொண்டிருந்தவர்களை எந்தப் பக்கமும் செல்லவிடாமல் காவல்துறையினர் தள்ளிவிட்டுக் கொண்டே இருந்தனர். காவல்துறையினர் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.