Published:Updated:

நின்றகோலத்தில் அருள்பாலிக்க இருக்கும் அத்திவரதர்! - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

JAYAVEL B

ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார்...

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் தொடங்கி இன்றோடு முப்பது நாள்கள் ஆகின்றன. நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அத்திவரதரை தரிசிக்க அதிக அளவில் வந்தவண்ணம் உள்ளது. ஆட்டோக்கள் கோயில்பகுதியில் வர முடியாதவாறு காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதனால் குறுக்கு வழியில் ஆட்டோக்கள் மேற்குக் கோபுரம் அருகே வந்து பயணிகளை இறக்கி விட்டுச் செல்கிறார்கள்.

அத்திவரதர்
அத்திவரதர்

ஆனைக்கட்டித் தெரு, செட்டித்தேரு, அஸ்தகிரி தெரு, அமுதப்படி தெரு, சுண்ணாம்புகாரத் தெரு, மலையாளத் தெரு, ஆனந்தா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாடமுடியாதவாறு ஆட்டோக்கள் ஆக்கிரமித்துள்ளன. வாகனங்கள் செல்லமுடியாதவாறு கூட்டம் இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதுபோல் விஐபி பாஸ் வைத்துள்ளவர்கள் ஒரு மணிநேரத்திற்குள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும். ஆனால், கடந்த சில நாள்களாக அவர்களும் சுமார் நான்கு மணிநேரம் கடந்த பின்னரே அத்திவரதரை தரிசனம் செய்ய முடிகிறது. குறிப்பாக ஆன்லைன் டிக்கெட் வைத்துள்ளவர்கள் பல மணிநேரம் ஆகியும் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.

அத்திவரதர்
அத்திவரதர்

இந்நிலையைல் அத்திவரதர் ஆகஸ்ட் 1 -ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தரிசனம் தர இருக்கிறார். இதையொட்டி மாவட்ட ஆட்சியர் பொன்னையா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் “பொதுதரிசனத்திற்கு வருபவர்கள் கிழக்கு கோபுரம் வழியாக சென்று அத்திவரதரை தரிசனம் செய்கிறார்கள். பொதுதரிசன வழியில் செல்பவர்கள் பல மணிநேரம் கழித்தே அத்திவரதரை தரிசனம் செய்ய முடிகிறது.

ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க உள்ளார். இதற்காக 31.07.19 அன்று தேவராஜ பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுரம் 12 மணிக்கு மூடப்படும். அதற்குப் பிறகு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 12 மணிக்குள் வந்தவர்கள் மாலை 5 மணிவரை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும். வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிவரை அனுமதிக்கப்படுவார்கள்.

அத்திவரதர்
அத்திவரதர்

வருபவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார். எனவே நாளை அத்திவரதரை தரிசனம் செய்யத் திட்டமிடும் பக்தர்கள் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.