Published:Updated:

தென்குமரியில் திருப்பதி தரிசனம்!

திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்

திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்

தென்குமரியில் திருப்பதி தரிசனம்!

திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்

Published:Updated:
திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்
பிரீமியம் ஸ்டோரி
திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்
முக்கடலும் சங்கமிக்கும் குமரி முனைக்கு என்று தனி அடையாளங்கள் உண்டு. கன்னியாகுமரி பகவதி அம்மன், கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் ஐயன் திருவள்ளுவர் சிலை... இந்த வரிசையில் புதிதாக இடம்பிடித்திருக்கும் அற்புதமே திருப்பதி வேங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

விவேகானந்தா கேந்திராவுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலப்பரப்பு திருப்பதி வேங்கடாசலபதி கோயிலுக்காக இலவசமாக வழங்கப்பட்டது. அந்த நிலத்தில்தான் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

தென்குமரியில் திருப்பதி தரிசனம்!

இந்தக் கோயிலுக்கான திருப்பணியின் பொருட்டு 4.6.2013 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 22.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோயில் கட்டி முடிக்கப்பட்டு, 27.01.2019 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மலையும் மலைசார்ந்த பகுதியுமான திருப்பதியில் வேங்கடாசலபதியை தரிசிப்பதுபோலவே கடலும் கடல் சார்ந்த பகுதியுமான கன்னியாகுமரியில் அவரின் தரிசனத்தைப் பெறுவதும் நீலத் திரைகடலின் தீரத்தை ரசிப்பதும் திவ்ய அனுபவமாகும்.

தென்குமரியில் திருப்பதி தரிசனம்!

கோயில் சந்நிதியில் நின்று பார்த்தால் கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றைக் காணலாம்.

கருவறையில் சுமார் 9.5 அடி உயரத்தில் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி பிரமாண்டத் திருமேனியராய் அருள்காட்சி தருகிறார். இவரை தரிசிக்கும் அன்பர்களுக்கு திருப்பதி வேங்கடவனையே தரிசித்த திருப்தியும் சிலிர்ப்பும் ஏற்படும்.

தென்குமரியில் திருப்பதி தரிசனம்!

ஆண்டுதோறும் ஏப்ரல் - 22 முதல் பத்து நாள்கள்; செப்டம்பர் - 12 முதல் 10 நாள்கள்... இந்த தினங்களில் காலை 6:15 முதல் 6:40 மணி வரை சுமார் 20 நிமிடங்கள், சூரியனின் கிரணங்கள் கருவறையில் அருளும் வேங்கடாசலபதி சுவாமியின் திருமேனி மீது விழுந்து வணங்குவது கண்கொள்ளா காட்சியாகும். முதலில் மூலவரின் மீது முழுவதுமாக விழும் சூரியக் கிரணங்கள் பிறகு மெள்ள மெள்ள கீழிறங்கி அவரின் திருப்பாதங்களைத் தொட்டுத் தழுவி விடைபெறும்!

தென்குமரியில் திருப்பதி தரிசனம்!

வெள்ளிக்கிழமை தோறும் காலை 9 முதல் 9.30 மணிவரை பால், இளநீர், மஞ்சள், சந்தனம் முதலான திரவியங்களால் அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.

அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் பத்மாவதி தாயார் சந்நிதியும், இடப்புறம் ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன. கோயிலின் கீழ் பகுதியில் திருக்கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

தென்குமரியில் திருப்பதி தரிசனம்!

மார்ச் மாதத்தில் இக்கோயில் சந்நிதியிலிருந்து சூரிய உதயத்தை முழுமையாக தரிசித்து மகிழலாம்.

திருப்பதியில் நடக்கும் அனைத்துவித பூஜைகளும் இந்தக் கோயிலில் நடைபெறுகின்றன. உற்சவம் மற்றும் சேவைகள் எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை. முடிக்காணிக்கை, லட்டு பிரசாதம் உள்ளிட்டவை விரைவில் தொடங்கப்பட உள்ளன.

தென்குமரியில் திருப்பதி தரிசனம்!

கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் செல்லும் சாலையில், அருள்மிகு வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 5 கி. மீ தூரத்திலும். விவேகானந்தா கேந்திரா வாசல் பகுதியில் இருந்து சுமார் 2 கி. மீ தூரத்திலும் இக்கோயில் அமைந்துள்ளது.

பெருந்தொற்று பாதிப்பு காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த பக்தர்கள் தரிசனம், தற்போது லாக்டெளன் தளர்வைத் தொடர்ந்துமீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருக்கோயில் தரிசனம்

தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் இந்தத் திருக்கோயிலின் வழிபாட்டு விவரங்கள் வருமாறு:

காலையில்...

6:30 மணி வரை சுப்ரபாதம்.

6:30 - 7:45 : பக்தர்கள் தரிசிக்க அனுமதி

7:45 - 9:30 : காலை பூஜைகள் நடைபெறும்

9:30 - 11:45 : பக்தர்கள் தரிசிக்க அனுமதி

11:45 - 12:30 : மதிய பூஜைகள்.

12:30 - 2.00 : பக்தர்கள் தரிசிக்க அனுமதி

மதியம் 2 மணிக்கு நடை சார்த்தப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்குக் கோயில் திறக்கப்படும். தொடர்ந்து, 7 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு 7 முதல் 8 மணி வரை பூஜைகள் நடைபெற்றபின், திருக்கோயிலின் நடை சார்த்தப்படும்.